தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

மாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது! - ரச்னா ராவ்

மாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது! - ரச்னா ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது! - ரச்னா ராவ்

ஸ்ரீ லோபாமுத்ரா

ஓர் ஐடியா உங்கள் உணவை மாற்றிடுமே!

பெங்களூரில் வசிக்கும் ரச்னா ராவ், உணவு பிரியர்களையும் சமையலில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்ற ஹோம்  செஃப்களையும் இணைக்கும் மொபைல் ஆப்  ஒன்றை உருவாக்கி, புதுமையைப் புகுத்தி வெற்றி கண்டுள்ளார். அவரிடம் பேசினோம்...

``15 வயது வரை மும்பையில் வசித்தேன். சென்னையில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தேன். பிறகு ஐ.ஐ.எம் பெங்களூரில் எம்.பி.ஏ படிப்பை முடித்து, பன்னாட்டு நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளுக்குமேல் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் பணியாற்றினேன்.

மாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது! - ரச்னா ராவ்

அப்போதெல்லாம் சமையல் செய்வதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. நல்ல சாப்பாட்டுக்காக பல நாள்கள் ஏங்கியுள்ளேன். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வகை உணவுகளைச் சமைப்பதில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்ற பெண்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுடன் தொடர்புகொள்வது எளிதில்லை. இதற்குத் தீர்வுகாணும் வகையில், என் கணவர் மற்றும் என்னுடன் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் என நாங்கள் மூவருமாக இணைந்து யோசித்து இந்தச் செயலியை உருவாக்கினோம்.

உணவு பிரியர்கள், ஹோம் செஃப்கள் என இரு தரப்பினரையும் இணைக்கும் பணியை மிக எளிதாகச் செய்கிறது இந்தச் செயலி. உதாரணத்துக்கு, நீங்கள் குஜராத்தி உணவு பிரியர். ஆனால், உங்களுக்கு குஜராத்தி உணவு சமைக்கத் தெரியாது. இப்படிப்பட்டவர்கள்  எங்களின் FoodyBuddy செயலியைப் பயன்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில் அல்லது அந்தப் பகுதியில் குஜராத்தி உணவு சமைக்கும் ஹோம் செஃப்கள் பற்றிய விவரங்கள் அறிய, இந்தச் செயலி உதவும். விவரங்களை அறிந்த பிறகு உணவு பிரியர்கள் ஹோம் செஃப்களோடு நேரடியாகத் தொடர்புகொண்டு பேச முடியும். என்ன மெனு, எத்தனை பேருக்கு, எத்தனை மணிக்கு, உணவுக்கான தொகை போன்ற விவரங்களை நீங்களே பேசி முடிவு செய்துகொள்ளலாம். இருவரும் தொடர்புகொள்ள ஏதுவான பொதுமேடையாகவே இந்தச் செயலி இயங்கும்.

உணவு பிரியர், தான் ஆர்டர் செய்த உணவை எடுத்து வர தேவையான பாத்திரங்களை நேரடியாக ஹோம் செஃப்பின் இடத்துக்கு எடுத்துச்சென்று உணவைப் பெறலாம். அல்லது ஹோம் செஃப், தான் தயாரித்த உணவை எடுத்துக்கொண்டு உணவு பிரியரின் வீட்டுக்கே வந்து டெலிவரியும் செய்யலாம்.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளைக் களையும் விதத்தில்தான் இந்தச் செயலியை உருவாக்கினோம். பெங்களூரில் மட்டும்  400-க்கும் மேற்பட்ட அப்பார்ட்மென்ட்களில் 20,000-த்துக்கும் மேற்பட்டோர் எங்கள் செயலியை உபயோகிக்கிறார்கள். 2,50,000-க்கும் அதிகமான உணவுகள் இதுவரை செயலியின் மூலம் விற்கப்பட்டுள்ளன. நிர்வாகச் செலவுகளுக்காக 5 முதல் 10 சதவிகிதம் கமிஷன் தொகை வசூலிக்கிறோம்.

உணவு பிரியர்கள், தரமான உணவைச் சுவைக்க முடியும். ஹோம் செஃப் மற்றும் செயலியை நிர்வகிப்பவர் வருமானம் பெற முடியும். இப்படி இந்தச் செயலியின் மூலம் மூன்று தரப்பினரும் பயன்பெற முடியும். இப்போது ஹைதராபாத், புனே நகரங்களிலும் எங்கள் சேவையை விரிவுபடுத்தியுள்ளோம்’’ என்கிறார் ரச்னா ராவ்.

டேஸ்ட்டி ஆப்!

மாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது! - ரச்னா ராவ்

``கும்பகோணம்தான் என் பூர்வீகம். கணவருடன் பெங்களூரில் வசிக்கிறேன். இந்தச் செயலியின் மூலம் உணவு பிரியர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு நாளும் நம்மால் செய்ய முடிந்த உணவைத் தயாரித்துக்கொடுப்பதில் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது. சிலர், என் இல்லத்துக்கே வந்து உணவைப் பெற்றுச் செல்கிறார்கள். ஒருசிலர் வீட்டுக்கு நானே சென்று டெலிவரி செய்கிறேன். இதனால் உணவு பிரியர்களின் ரசனையை அறிந்து சமையல் செய்யும் முறையில் மாற்றங்களையும் புதுமையையும் புகுத்தி, என் திறமையை வளர்த்துக்கொள்ள முடிகிறது. 20% லாபமும் கிடைக்கிறது.

என் வீட்டு உறுப்பினர்களுக்குச் சமைக்கும்போது ஒருசிலருக்கும் சேர்த்துச் சமைக்கிறேன்... அவ்வளவு ஈஸிதான் இது!’’ என்கிறார் ஹோம் செஃப்பாகச் செயல்படும் அனுராதா.