Published:Updated:

வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!

வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:

வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!

ஓவியம்: அரஸ்

வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!

யங்கரவாத நிதியுதவி தடுப்புக் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்.ஏ.டி.எஃப் - financial action task force) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் படுவதிலிருந்து, தற்காலிகமாகத் தப்பித்திருக்கிறது பாகிஸ்தான். ஆனாலும், கண்காணிப்புப் பட்டியல் எனப்படும் ‘வெளிர் கறுப்பு’ (Grey) பட்டியலிலிருந்து பாகிஸ்தானை நீக்க மறுத்துவிட்டது அந்த அமைப்பு. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட சில முயற்சிகளாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்பு, பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது குறித்து பி.ஜே.பி தீவிரமாகப் பேசி வருகிறது. இந்தநிலையில்தான் தற்போது, ‘பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் அக்கறை காட்டவில்லை. அதுதொடர்பாக உலகுக்கு பாகிஸ் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பாகிஸ்தான் அளித்த வாக்குறுதிகளை வரும் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்றத் தவறினால், அந்த நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்று பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத நிதியுதவி தடுப்புக் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெளிர் கறுப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை நீக்கவும் மறுத்துவிட்டது. ஒரு வேளை கறுப்புப் பட்டியலில் அந்த நாடு சேர்க்கப்பட்டிருந்தால், பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கக் கூடும்.

வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!

“சொந்த மண்ணில் பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுக்கத் தவறிவிட்டது பாகிஸ்தான். ஹஃபீஸ் சயீது, மசூத் அசார் உள்பட ஐ.நா-வால் அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகள் மீதுகூட நடவடிக்கை எடுக்கவில்லை” என்று பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடியுள்ளது, எஃப்.ஏ.டி.எஃப்.

அந்த அமைப்பு இப்படிச் சாடியிருப்பது முதல்முறை அல்ல... ஏற்கெனவே கடந்த 2018 ஜூன் மாதத்திலேயே மேற்கண்ட குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தானை வெளிர் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது எஃப்.ஏ.டி.எஃப். பின்பு பயங்கரவாதத் தடுப்புச் செயல் திட்டங்களைச் செயல்படுத்த 2019 ஜனவரி வரை கெடு விதித்தது. பின்பு, மே மாதம் வரை கெடுவை நீட்டித்தது. ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் பாகிஸ் தானுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், பாகிஸ்தானைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல், கடைசி வாய்ப்பாக அக்டோபர் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

“கண்காணிப்புப் பட்டியலான வெளிர் கறுப்புப் பட்டியலில் நீடிப்பது, வெளிநாட்டு நிதியை நம்பியிருக்கும் பாகிஸ்தானுக்குப் பெரிய சிக்கல். ஏற்கெனவே அந்த நாட்டின் வங்கித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி பணப் பரிவர்த்தனைகள், பன்னாட்டுக் கடன் பெறுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்கும். உலக வங்கி, சர்வ தேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி, ஐரோப் பிய ஒன்றியம் ஆகியவையும் கடன் வழங்க யோசிக்கும். ஆண்டுக்கு பத்து பில்லியன் டாலர் வரை நஷ்டம் ஏற்படும்” என்று பாகிஸ்தானை எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

‘பாகிஸ்தானைக் களமாகக்கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால், பிற நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வெளிப்படையாகத் தெரிவித்தன. ஆனால், கண்துடைப்பு நடவடிக்கையாகச் சிலரை வீட்டுக்காவலில் வைத்தது பாகிஸ்தான். மசூத் அசார், ஹஃபீஸ் சயீது ஆகியோர் மீது அமைதியைக் குலைத்ததாக மட்டுமே வழக்குப் பதிந்ததனால் கோபம் அடைந்த இந்தியா, ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போடவில்லை’ என, ஆதாரங்களையும் எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பிடம் சமர்ப்பித்தது. இந்தியாவின் நிதி புலனாய்வுப் பிரிவு, ஹஃபீஸ் சயீதின் பணப் பரிமாற்றங்கள், அதன் துணைத் தலைவர் ஷாஹித் மஹ்மூதின் பயங்கரவாதத் தொடர்புகளை அம்பலப்படுத்தியது.

வெளுக்கும் சாயம்... வெளிர் கறுப்புப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்!

இந்த முறை பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலிலிருந்து தப்பித்தது தற்காலிக நிம்மதிதான். அக்டோபருக்கு அதிக நாள்கள் இல்லை. தற்போதைய வெளிர் கறுப்புப் பட்டியலிலிருந்து வெளியேற, எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் 36 உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 15 வாக்குகள் பாகிஸ்தானுக்குத் தேவை. அது கடினம். அதேசமயம் அடுத்த வருடம், எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் தலைமைப் பதவியை சீனா ஏற்கவுள்ளது. சவுதி அரேபியாவும் முழுநேர உறுப்பினராகச் சேர உள்ளது. அப்படிப்பட்ட சூழலில், என்ன நடக்கும் என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

- கே.ராஜு

ற்போது எத்தியோப்பியா, செர்பியா, இலங்கை, சிரியா, டிரினிடாட், டொபாகோ, துனிசியா, ஏமன், போட்ஸ்வானா ஆகிய நாடுகள் எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் வெளிர் கறுப்புப் பட்டியலில் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறுவது இது முன்றாவது முறை. முதலில் 2008, பின்னர் 2012-15 காலகட்டத்தில் பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் இருந்தது. ஜுன் 2018-ல் மீண்டும் இப்பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. அப்போது சீனா உட்பட நட்பு நாடுகள்கூட பாகிஸ்தானைக் கைவிட்டன. துருக்கி மட்டும் ஆதரித்தது.