Published:Updated:

`டிரம்ஸ் குச்சிகளில் நெருப்பை பற்ற வைத்து வாசிக்கப்போறேன்!'- மதுரை சிறுவனின் புது முயற்சி

News

கர்நாடக இசைக்கு டிரம்ஸ் வாசித்து அசத்துகிறார் மதுரையைச் சேர்ந்த பதிமூன்று வயது சிறுவன் ராம்ஜி. கண்களைக் கட்டி டிரம்ஸ் வாசிப்பது, டிரம்ஸ் ஸ்டிக்கில் நெருப்பை பற்ற வைத்து டிரம்ஸ் வாசிப்பது என ராம்ஜியின் எனர்ஜி வேற லெவலில் இருக்கிறது. இது குறித்து ராம்ஜியிடம் பேசினோம்.

`` ஏழு வருஷமாக டிரம்ஸ் கத்துகிறேன். டிரம்ஸில் நிறைய சாதனை படைக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை. என்னுடைய பத்து வயதில் லண்டன் ட்ரினிட்டி மியூசிக் காலேஜில் டிரம்ஸில் எட்டாவது கிரேடு முடித்தேன். ஆசிய அளவில் இளம் வயதில் அந்த கிரேடை முடித்து சாதனை படைத்தேன். டிரம்ஸ் தவிர கீ-போர்டு, பியானோ, பறை, மிருதங்கம்னு மற்ற இசைக்கருவிகளும் வாசிக்கத்தெரியும். மிருதங்கம் கர்நாடக இசையுடன் தொடர்புடையது. அதை வெஸ்டர்ன் இசைக்கருவியான டிரம்ஸில் அப்ளை செய்து புதுவிதமான மியூசிக்கை உருவாக்கியிருக்கேன்.

கடினமான பயிற்சிகளுக்குப் பிறகுதான் இது சாத்தியப்பட்டது. என்னோட முயற்சியை சிவமணி அங்கிள், தேவா சார்னு நிறைய பேர் பாராட்டுனாங்க. அடுத்தகட்டமா கண்களைக் கட்டி டிரம்ஸ் வாசிக்கிறது, டிரம்ஸ் குச்சிகளில் நெருப்பை பற்ற வைத்து வாசிக்கிறதுனு புதுசு புதுசா முயன்று பார்க்கிறேன். என்னுடைய சாதனைக்கு தமிழக அரசு `கலை இளமணி' விருது கொடுத்து கௌரவிச்சிருக்கு. கின்னஸ் சாதனை பண்ண போதுமான முயற்சி எடுத்துட்டு வர்றேன். எதிர்காலத்தில் திரைப்படங்களுக்கு மியூசிக் போடணும் என்பதுதான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில் அதையும் சாத்தியப்படுத்துவேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.