Published:Updated:

''கடைசி வரைக்கும் போராடு... உனக்கு நான் இருக்கேன்!''- சஹானாவிடம் பேசிய சிவகார்த்திகேயன்

''கடைசி வரைக்கும் போராடு... உனக்கு நான் இருக்கேன்!''- சஹானாவிடம் பேசிய சிவகார்த்திகேயன்
News

ரசுப் பள்ளியில் படித்து ப்ளஸ் டூ-வில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சஹானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்துவந்ததைப் பற்றி விகடன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதுவரை மின்சாரமே பார்த்திராத அந்தக் குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு உடனே சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்.

இந்தச் செய்தி வெளியான அடுத்த நாளே, நடிகர் சிவகார்த்திகேயன் மன்றத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், சஹானாவைத் தொடர்பு கொண்டு, 'நீ என்ன படிக்க நினைக்கிறாயோ அதைப் படிக்கலாம். அதற்கான அனைத்துச் செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொள்வார். அப்புறம் உன்னோடு போனில் பேசுவதாகவும் தெரிவித்தார்' எனக் கூறி வங்கிக் கணக்கில் பத்தாயிரம் பணத்தையும் செலுத்தினார். இதைத் தொடர்ந்து, இன்று சிவகார்த்திகேயன் மன்றத்தைச் சேர்ந்த நாலு பேர் பேராவூரணியில் உள்ள சஹானாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர்கள், சிவகார்த்திகேயனுக்கு கால் பண்ணிக் கொடுக்க, சஹானாவிடம் அவர் பேசியுள்ளார்.

இதுகுறித்து சஹானாவிடம் பேசினோம். ``சிவகார்த்திகேயன் சார் சொன்னதாகக் கூறி, அவர் மன்றத்தைச் சேர்ந்தவர் ஏற்கெனவே பண உதவி செய்திருந்தார். இந்தநிலையில், இன்று எங்க வீட்டுக்கு நான்கு பேர் வந்தனர். எங்க வீட்டைப் பார்வையிட்டு, இப்படி ஒரு நிலையிலும் நல்ல மார்க் எடுத்திருக்க. உன்னைப் பாராட்ட வார்த்தைகளே இல்லைனாங்க. அப்புறம், அவங்க போன்ல பேசின சிவகார்த்திகேயன் சார், ``பாப்பா எப்படி இருக்க'' என அன்பாகக் கேட்டார். பின்னர், ``நீ எதுக்கும் கவலைப்படாத. என்ன படிக்க வேண்டும் என நினைக்கிறாயோ அதில் கடைசி வரை உறுதியாக இரு. உன் படிப்புச் செலவு முழுவதையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நல்ல மார்க் எடுத்தும்,  நீட் தேர்வில் ஃபெயிலானதால் தற்கொலை செய்துகொண்டார் அனிதா என்ற மாணவி. அந்தச் சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது. அனிதாவைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால், அவருக்கு வேண்டிய உதவியைச் செய்திருப்பேன்.

மின்சார வசதி இல்லாமல், ஏழ்மையான நிலையிலும் நீ நல்ல மார்க் எடுத்திருக்க. உன்னைப் பற்றிப் படித்துவிட்டு, என் மனைவி கண் கலங்கினாங்க'' என்று அவர் சொல்லும்போதே நான் அழுதுவிட்டேன். ``உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன். சும்மா பேச்சுக்காகவோ, விளம்பரத்துக்காகவோ இதைச் சொல்லவில்லை. உன்னை என் சகோதரியாக நினைத்துச் சொல்கிறேன். நீட் தேர்வை முதலில் எழுது. அதன் முடிவு எப்படியாக இருந்தாலும், கவலைபடாதே. ஒரு வேளை நீ ஃபெயிலானால்கூட அடுத்த முறை சென்னையில் உள்ள நல்ல நீட் பயிற்சி மையத்தில் உன்னைப் படிக்கவைக்கிறேன். கடைசி வரை போராடு. என்னவாக வேண்டும் என்பதில் உறுதியாக இரு. உனக்கு நான் இருக்கேன்'' என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார். என்னிடம் மட்டும் அல்ல என் அக்கா, அம்மா, அப்பா என எல்லோரிடமும் பேசினார். ``நல்ல பிள்ளையைப் பெத்துருக்கீங்க. நல்லா பெருமைபட்டுக்கங்க'' என்று என் அப்பாவிடமும், `நீதாம்மா குடும்பத்தின் தலையெழுத்து நன்றாகப் பார்த்துக்கொள்' என என் அக்காவிடமும் அக்கறையோடு பேசினார். சிவகார்த்திகேயன் சார் கொடுத்த நம்பிக்கை என்னை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்லும். அவர் பேசியதால் என் குடும்பமே நெகிழ்ச்சியடைந்தது'' என்றார்.