Published:Updated:

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

 சதுரகிரி குரங்குகள்
News
சதுரகிரி குரங்குகள்

பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

Published:Updated:

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

 சதுரகிரி குரங்குகள்
News
சதுரகிரி குரங்குகள்

சதுரகிரி மலையில் ஆங்காங்கே தொட்டி இருந்தும் தண்ணீர் இல்லை. இதனால் வழிநெடுக பக்தர்கள் யாராவது குடிக்கத் தண்ணீர் தருவார்களா என எதிர்பார்த்து குரங்குகள் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. தாணிப்பாறை மலையடிவாரத்தில் இருந்து நடந்து சென்றால் இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பசாமி உள்ளிட்ட சாமிகளை வழிபட்டபடியே சுமார் 7 கி.மீ. தூரம் நடந்து சென்றால் மலையின் மேல் உள்ள சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கத்தை அடையலாம். அங்கே சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை வழிபட்ட பின் 18 சித்தர்களையும் வழிபடலாம். இந்த மலையில் சித்தர்கள் வாழ்ந்து பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாள்களில் கோயிலில் வழிபாடு நடத்தப்படும். அந்தக் குறிப்பிட்ட நாள்களில் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற இடம் என்பதால் சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதுமிருந்து ஏராளமானோர் மலைக்கு வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர், முதியோர் என ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

சுமார் 3 மணி நேரம் நடந்து சென்றால் சந்தன மகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லலாம். சிலர் காலையில் ஏறி மாலை இறங்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து அடுத்த நாள் காலை கீழே இறங்குகின்றனர். குடிநீருக்காக மலையில் ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்குகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கும் தண்ணீர் இல்லை.

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

மலையில் உள்ள ஊற்றிலும் தண்ணீர் இல்லை. தரையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உடைந்து காணப்படுகின்றன. இரண்டரை மணி நேரம் பயணம் செய்து பிலாவடி கருப்பசாமி கோயிலை அடைந்தால் தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும். எனவே, கீழே இருந்து கேன்களில் தண்ணீர் கொண்டு வரும் பக்தர்களுக்கு கடுமையாக தாகம் எடுத்தாலும்கூட கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தண்ணீரை குடித்துச் செல்கின்றனர்.

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

ஆனால், மலைகளிலேயே வசிக்கும் குரங்குகளின் நிலையோ பரிதாபம். குடிநீர் தொட்டியைப் பார்த்துப் பார்த்து குடிநீர் இல்லாமல் ஏமாந்து திரும்புகின்றன. ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. ஒரு சில இடங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் மிகவும் மாசடைந்துள்ளது. இதனால் குரங்குகள் தண்ணீருக்காக பக்தர்களை எதிர்பார்த்து வழியிலேயே காத்துக் கிடக்கின்றன. ஒரு சிலர் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுக்க முயன்றவுடன் மற்ற குரங்குகளும் அவர்களைச் சுற்றிவிடுகின்றன. இதனால் கொடுக்க வருபவர்களும் தண்ணீரை கொண்டு சென்றுவிடுகின்றனர்.

`தொட்டியிலும் இல்ல, ஊற்றிலும் இல்ல!'-தண்ணீருக்காக பக்தர்களை எதிர்நோக்கும் சதுரகிரி குரங்குகள்

மலையில் பிளாஸ்டிக் பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பாட்டில்களில் தண்ணீர் காலியானவுடன் அவற்றை தூக்கி எறிந்துவிடுகின்றனர். இதனால் மலை முழுவதும் நிறைய பாட்டில்களைப் பார்க்க முடிகிறது. எனவே, மலையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினால் விழா நாள்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி மலையையே நம்பி வாழும் வன உயிரினங்களும் தண்ணீரைத் தேடி அலையாது. தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டையும் முழுவதுமாக தடுத்துவிடலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.