வேலூர்: வேலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுமியை தூக்கி வந்து மானபங்கம் செய்ய முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு குடிசை வீட்டில் சதீஷ் என்ற வாலிபர் புகுந்து யாருக்கும் தெரியாமல் அங்கே தூங்கிக் கொண்டிருந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 10 வயது சிறுமியை தூக்கி கொண்டு வெளியே வந்துள்ளார்.
ரேகாவை மறைவான பகுதிக்கு கொண்டு சென்ற சதீஷ், அவரை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கிராமத்தினர் இருவர் இதை பார்த்துள்ளனர். இந்நிலையில் சிறுமி ரேகா பயத்தில் சத்தம்போட்டு அழுதுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த கிராமத்தினர் இருவரும் சதீஷை பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் இந்த தகவலை அந்த பகுதி மக்களிடம் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சதீஷுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷை கைது செய்து, சிறுமியை மானபங்கம் படுத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
##~~## |
ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்