Published:Updated:

`நீட்ல மார்க் குறைஞ்சிடுச்சு; சென்னையில கோச்சிங் ஏற்பாடு பண்றாங்க சிவா அண்ணா!' - சஹானா

`நீட்ல மார்க் குறைஞ்சிடுச்சு; சென்னையில கோச்சிங் ஏற்பாடு பண்றாங்க சிவா அண்ணா!' - சஹானா
News

மின்சாரமே பார்த்திராத குடிசை வீடு, துரத்திய வறுமை. டாக்டர் ஆவதே லட்சியமாகக் கொண்ட சஹானா என்ற மாணவி அரசுப் பள்ளியில் படித்து பத்தாவதில் முதலிடம், ப்ளஸ் டூ-வில் 424 மார்க் எடுத்து அசத்தியிருந்தார். வறுமையிலும் அசத்திய சஹானா குறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதைப் படித்த விகடன் வாசகர்கள் பலர் உருகிப் போய் சஹானாவின் அம்மாவின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை சூரிய ஒளி மூலம் மின்சாரம் கொடுத்தார். சஹானா படிப்புக்கு உதவுவதாகப் பலர் ஆறுதல் கூறினர். எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது மன்ற நிர்வாகிகள் மூலம் போன் செய்து அக்கறையுடன்  விசாரித்ததோடு `தங்கச்சி நீ டாக்டர் ஆவது என் பொறுப்பு. நீட் தேர்வு எழுது, ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவாயில்லை எதற்கும் கவலைப்படாதே' என ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இதையடுத்து, பெரும் கனவோடு நீட் தேர்வை எழுதி ஆர்வமுடன் காத்திருந்தார். `நான் டாக்டருக்கு படிக்கப் போறேன்' எனத் தன் பெற்றோர்களிடம் நம்பிக்கையோடு கூறி வந்தார் சஹானா.

இந்த நிலையில், நேற்று மதியம் நீட் தேர்வுக்கான ரிசல்ட் வந்தது. அதில் சஹானா வாங்கிய மார்க் அவரையே நிலைகுலைய வைத்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்து அசத்திய சஹானா நீட் தேர்வில் 125 மார்க் மட்டுமே எடுத்திருக்கிறார். நீட் தேர்வின் முடிவால் சஹானா கலங்கிப் போய் துவண்டுபோக, நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து சஹானாவுக்கு போன் வந்துள்ளது. `தங்கச்சி ரிசல்ட் என்ன ஆச்சு' எனக் கேட்டிருக்கின்றனர். அதற்கு சஹானா மார்க் பற்றி தயங்கிச் சொல்ல `கவலைப்படாதம்மா அண்ணன் சிவா இருக்கார் பார்த்துக்கொள்வார்' எனப் போனை துண்டித்திருக்கின்றனர். இது குறித்து சஹானாவிடம் பேசினோம்.

`நீட்ல மார்க் குறைஞ்சிடுச்சு; சென்னையில கோச்சிங் ஏற்பாடு பண்றாங்க சிவா அண்ணா!' - சஹானா

டாக்டர் ஆவது என் கனவு. அண்ணன் - நடிகர் சிவகார்த்திகேயன் சில உதவிகளைச் செய்துவிட்டு, `நீட் ரிசல்ட் என்னவானாலும் பரவாயில்லை தங்கச்சி உன்னை டாக்டராக்குவது என் பொறுப்பு' எனக் கூறினார். நீட் தேர்வை எழுதிவிட்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆனால், நான் நினைத்தபடி மார்க் வரவில்லை. இதையடுத்து, சிவா அண்ணன் தரப்பிலிருந்து பேசினார்கள். `சென்னையில் உள்ள சிறப்பான நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். தங்குவது, படிப்பது என அனைத்துச் செலவையும் நாங்க பார்த்துக்கொள்கிறோம் நீ உடனே சென்னை கிளம்பத் தயாராக வேண்டும்' எனச் சொன்னார்கள். நான் ரொம்ப கொடுத்து வைத்தவள். விகடன் மூலமாக என்னை சிவகார்த்தியேன் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். டாக்டர் ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு நான் புறப்பட்டுவிட்டேன்' எனத் தெரிவித்தார்.