Published:Updated:

`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!

`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும்  ஹேஷ்டேக்!
News

இந்திய அளவில் `நோ டு ஜெய் ஸ்ரீராம்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிவருகிறது. 

`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும்  ஹேஷ்டேக்!

கடந்த 18-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில், 24 வயது இளைஞர் அன்சாரியைத் திருடன் என்று கருதி அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்குகிறது ஒரு கும்பல். அந்த இளைஞரை 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. அன்சாரி மயங்கிச் சரியும்வரை, சுமார் ஏழு மணி நேரம் பலமாகத் தாக்கியுள்ளனர்.தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 24-ம் தேதி உயிரிழந்தார்.

`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும்  ஹேஷ்டேக்!

ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதில் அன்சாரி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தன் கருத்தை பின்வருமாறு பதிவுசெய்தார். "ஒருவரை அடித்து அல்ல; அன்பால் அணைத்து 'ஜெய் ஶ்ரீராம்' சொல்லச் சொல்லுங்கள். வன்முறையால் 'ஜெய் ஶ்ரீராம்' சொல்ல வற்புறுத்துபவர்கள், அரசின் நற்பெயரை குலைக்கிறார்கள்" என வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது சர்சையானது. மத்திய அமைச்சர், `கண்டனங்களைப்பதிவு செய்யாமல், இப்படியா பேசுவது?’ என்று பலரும் கேள்வி எழுப்பினர். அன்சாரியை கம்பத்தில் கட்டிவைத்திருக்கும் புகைப்படம் காண்போரை கலங்கச்செய்கிறது.

`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும்  ஹேஷ்டேக்!

மேற்குவங்கத்தில், கடந்த வாரம் 'ஜெய் ஶ்ரீராம்' என்று கூறுமாறு வலியுறுத்தி, ஹஃபீஸ் என்ற இளைஞர் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். `ஜெய் ஸ்ரீராம்’ என்று கூற வற்புறுத்தப்பட்டு, அதனால் ஏற்படும் தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ட்விட்டரில், `நோ டு ஜெய்ஸ்ரீராம்’ #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. `மதத்தைக்கொண்டு அரசியல் செய்வதை நிறுத்தங்கள்’ என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.