Published:Updated:

‘ஜெயலலிதாவோடு அனைத்தும் முடிந்துவிட்டன’ - ஸ்டாலினைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்

‘ஜெயலலிதாவோடு அனைத்தும் முடிந்துவிட்டன’ - ஸ்டாலினைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்
News

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை, தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாகத் திட்டிப் பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வன் கட்சியிலிருந்து விரைவில் நீக்கப்படுவார் எனத் தினகரன் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க-வுக்குச் செல்வார் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

‘ஜெயலலிதாவோடு அனைத்தும் முடிந்துவிட்டன’ - ஸ்டாலினைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்து கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் ஒரு நல்ல முடிவைக் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மட்டுமே. நாட்டுக்கு நல்ல தலைமையை அளித்து, நிர்வாகத்தை அளித்து, தமிழகத்துக்குத் தேவையான திட்டத்தை அவரால் மட்டுமே பெறமுடியும் எனத் தேர்தல் தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது. அதனால் இந்த நல்ல தலைமையை ஏற்று தி.மு.க-வில் இணைந்துள்ளேன்.

‘ஜெயலலிதாவோடு அனைத்தும் முடிந்துவிட்டன’ - ஸ்டாலினைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வந்தது உண்மை. தற்போது ஸ்டாலின் அனைவரையும் அனுசரித்து செல்கிறார். அ.தி.மு.க-வில் இருந்து வந்த சேகர்பாபு, செந்தில்பாலாஜி போன்ற அனைவருக்கும் நல்லதுதான் செய்துள்ளது இந்தக் கட்சி. `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என அண்ணா சொன்னதைப்போல் அதைக் கடைப்பிடிக்கும் தலைவர் ஸ்டாலினை நான் ஏற்றுக்கொண்டேன்.  

ஒற்றைத் தலைமையைக் கொண்ட கட்சி மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும். அப்படிச் செயல்பட்ட தி.மு.க தற்போது மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. அம்மா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பல்வேறு நிலைப்பாடு உள்ளது. அந்தக் கட்சியை பா.ஜ.க பின்னால் இருந்து இயக்கி வருகிறது. நான் அங்கு சேர விரும்பவில்லை. 

‘ஜெயலலிதாவோடு அனைத்தும் முடிந்துவிட்டன’ - ஸ்டாலினைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன்

ஸ்டாலின் ஒரு கடுமையான உழைப்பாளி, அவரின் தந்தை கருணாநிதி மறைவின்போது ஒரே நாள் இரவில் நீதிமன்றம் சென்று தந்தையின் உடலைக் கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் வாங்கினார். அவரின் தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆர்.கே நகரில் தோற்றாலும் விடாமல் போராடி தமிழகத்தில் தி.மு.க-தான் தலைமை தாங்கும் என நிரூபித்து தற்போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அந்த வெற்றிக்காகவே தி.மு.க-வில் இணைந்துள்ளேன்.

பதவி கேட்டுப் பெறுவது என்னுடைய வழக்கம் இல்லை. நம்முடைய உழைப்பைப் பார்த்து தலைமை தானாக வழங்க வேண்டும். அந்த வகையில் எனக்கும் தலைமை பதவி வழங்கும் என்ற நம்பிக்கையுள்ளது. எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது, அம்மாவுக்குப் பிறகு நான்காகப் பிரிந்தது. அ.தி.மு.க-வின் கொள்கைகள் அனைத்தும் அவருடனேயே முடிந்துவிட்டன. தற்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டனர். பழைய கதை தேவையில்லை. ஸ்டாலின் மக்களின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களின் உரிமைக்காகப் போராடுகிறார்” எனப் பேசினார்.