Published:Updated:

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10
News

> ``அரசியலுக்குள் வருவேன் என்பதை நான் அறிந்துவைத்திருந்தேன். முப்பது வயதானபோது, இதுதான் சரியான நேரம் அரசியலில் காலடி எடுத்து வைக்க என்று தோன்றியது. என் எண்ணத்தை என் வீட்டாரிடம் தெரிவித்தபோது, மிகக் கடுமையாக தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தார்கள்" என்கிறார் மஹுவா மொய்த்ரா. 

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

மக்களவையில் 25-ம் தேதி நண்பகல் 12.57 மணிக்கு எழுந்தார் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா. அடுத்த சில நிமிடங்களில் புயலாகப் புறப்பட்ட அவருடைய ஆங்கிலம் பா.ஜ.க-வின் கொள்கைகளை அனல்பறக்கச் சாடி பிறகே ஓய்ந்தது. மஹுவாவின் முதல் பேச்சைத் தொடர்ந்து கொண்டாடுகின்றன சமூக வலைதளங்கள். இவர் குறித்த பின்னணி > கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலை, பெற்றோரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்ராவின் அரசியல் பயணம் > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லாத சூழலில், இந்தத் தீர்மானம் தி.மு.க-வுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த 6 மாதத்துக்குள் தீர்மானம் கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அல்லது தேர்தல் என்பதாகத்தான் அரசியல் சூழல்கள் அமையும். 'கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிரான சமூகங்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்துள்ளன. நம்முடைய இலக்கு கொங்கு கேபினட் மட்டும்தான். தனபாலைப் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை' என்ற மனநிலையில் ஸ்டாலின் இருப்பதாகச் சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். முழுமையான பின்னணி > 'எடப்பாடி பழனிசாமிதான் இலக்கு; தனபால் அல்ல!' - ஸ்டாலினுக்குச் சுட்டிக் காட்டிய குடும்ப உறவுகள் > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> முதல்வர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ஓர் ஆட்சியர் டம்மியான இன்னொரு பதவிக்கு மாற்றப்படும்போது மாறுதலுக்கான பல சந்தேகங்கள் எழுகின்றன. `சேலம் கலெக்டர் ரோகிணி காரணம் இல்லாமல் மாற்றப்படவில்லை. காரணத்தோடுதான் மாற்றப்பட்டிருக்கிறார்' என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவரம் தெரிந்த அதிகாரிகள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்துள்ள அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பது உள்ளிட்ட அவரது பணிமாறுதலுக்கான அடுக்கப்படும் காரணங்கள் > எடப்பாடி பழனிசாமியைக் கடுகடுக்க வைத்த ரோகிணி! - சேலம் கலெக்டர் இடமாற்றப் பின்னணி > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க
 
`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரே நாடு என்ற கொள்கையைக் கையில் எடுத்தது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே அடையாள அட்டை (ஆதார்) உள்ளிட்ட வரிசையில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்னும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. இத்திட்டம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வேறு மாநிலத்தில் பணியாற்றும் ஒருவரால் சொந்த மாநிலத்தில் வழங்கும் பொருள்களை பெற முடியுமா உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களும் பார்வைகளும் > `அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இலவச அரிசியின் நிலை?' - `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் பின்னணி > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> பெரிய அணிகளோடு எல்லாம் ஈஸியாக ஜெயித்துவிட்டு, ஆப்கானிஸ்தானோடு மயிரிழையில் தப்பித்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீண்டெழவே இரண்டு நாள்களானது. அதைவிட பெரிய அதிர்ச்சி, அந்த ஆட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் சடசடவென சரிந்தவிதம். `கப்பு நமக்குத்தான்' என கெத்தாக காலரை தூக்கிவிட்ட கைகள் எல்லாம் அந்த ஆட்டத்துக்குப் பின் தலையில் கைவைத்துக்கொண்டன. இந்திய அணியின் டாப் ஆர்டர், பெளலிங் போன்றவற்றில் பிரச்னை இல்லை. கடந்த ஆட்டத்தில் விமர்சனங்களை சந்தித்த தோனியும் குட்புக்கில் இணைந்துவிட்டார். கண்கள் அனைத்தும் இப்போது விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் மீதே! > தோல்வியடையாத இந்தியாவை மிரட்டும் ஒரு வீக்னெஸ்! > முழுமையான கிரிக்கெட் அலசலுக்கு க்ளிக் செய்க

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> ``வயசாயிடுச்சு... முன்ன மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியல" என்று மறந்தும் சொல்லிவிட முடியாத வேலை  காவல்துறையினருடையது. எந்த நேரத்திலும் அலர்ட்டாக இருக்க மனநிலையும் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையில் வெகுநாள்கள் பணிபுரிந்து, புதிதாகக் காவல்துறையில் சேருபவர்களுக்கு ரோல்மாடல் சிங்கங்களாக வலம் வரும் சில காவல்துறை அதிகாரிகளான அரியலூர் எஸ்.பி சீனிவாசன், கடலூர் எஸ்.பி சரவணன், திருவண்ணாமலை எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், கூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரை மற்றும் சைலேந்திர பாபு ஆகியோர் குறித்த மினி ரிப்போர்ட் >  புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது > முழுமையான சிறப்புக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> "தமிழ்ராக்கர்ஸ் அட்மின்கள் காவல்துறையிடம் சிக்கினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியும். இதேபோல தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?"

இன்று இந்த பைரஸி மிக சகஜமாக மாறிவிட்டநிலையில் இப்படிப் பார்ப்பது சட்டப்படி தவறு என்ற எண்ணமே பலருக்கும் இருப்பதில்லை. ஒருவர் முறைகேடாக இணையத்திலிருந்து படம் டவுன்லோடு செய்து பார்த்தாலோ, சட்டவிரோதமான தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்து பார்த்தாலோ சட்டப்படி என்ன நடவடிக்கை பாயும்? - இதோ முழுமையான தகவல்கள் >  தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? #DoubtOfCommonMan > முழுமையான தகவல்களுக்கு க்ளிக் செய்க
 
`மிரட்டல்' மஹுவா முதல் `ஓப்பன் டாக்' ஓவியா வரை... பின்னணி ஸ்பெஷல் #VikatanTop10

> யாரைப் பற்றியும் புறம்பேசாத இந்தக் குணம் எப்படி வந்தது?

``நான் எப்பவுமே இப்படித்தான். எனக்கு யாரையும் பார்த்துப் பொறாமை இல்லை. யாரையும் யார்கூடவும் கம்பேர் பண்ணிப் பேசப் பிடிக்காது. எனக்கு என்னைப் பிடிக்கும். அடுத்தவங்களைப் பத்திப் பேசறது தேவையே இல்லையே. என் விஷயங்களை யோசிக்கவே எனக்கு டைம் இல்லை. அடுத்தவங்களைப் பத்தி எதுக்குப் புறம் பேசணும்?"

- 'பிக் பாஸ்' வீட்டில் அடுத்த ஓவியாவைத் தேடும் படலம் இன்னமும் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்களிடம் இருக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஓவியாவின் அப்போதைய பேட்டி இப்போது ஃப்ளாஷ்பேக்காக > 'எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!' - ஓவியா ஓப்பன் டாக் > முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க

> எப்படி இருக்கு யோகி பாபுவின் `தர்ம பிரபு'? - ரசிகர்கள் கருத்துடன் யோகி பாபுவின் பேட்டியும்...

> ஃபேஸ்புக் ஹிட் > இந்திய வீரர்கள் அணியவுள்ள புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது! இந்த புதிய ஜெர்ஸி குறித்து உங்கள் கருத்து என்ன? #TeamIndia #CWC19