
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 41 பள்ளிகளை மூட அம்மாவட்ட கலெக்டர் சம்பத்தின் அதிரடி உத்தரவையடுத்து, அப்பள்ளிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்தவொரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும் முதன்மை கல்வி அதிகாரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அங்கீகாரம் பெறாமல் செயல்படக்கூடாது.
தற்போது விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களில் மாவட்டத்தில் 41 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் பல விவரங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் எந்தவொரு பதிலும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.
##~~## |
இதையடுத்து, அரசு அங்கீகாரம் பெறாமல் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் மழலையர் மற்றும் 41 தொடக்க பள்ளிகள் கண்டறியப்பட்டு அவை அனைத்தும் மூட மாவட்ட கலெக்டர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவையடுத்து, 41 பள்ளிகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பள்ளிகளில் படித்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.