Published:Updated:

அடம்பிடித்து புதுபோன் வாங்கினார்!  செல்ஃபி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர்

அடம்பிடித்து புதுபோன் வாங்கினார்!  செல்ஃபி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர்
News

புதுக்கோட்டை அருகே, ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்றுவருகிறார்.

அடம்பிடித்து புதுபோன் வாங்கினார்!  செல்ஃபி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர்

புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடியைச் சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. இவரது மகன் மணிகண்டன்(19), புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை கணிதம் படித்துவந்தார். மணிகண்டன், வழக்கமாகத் தன் நண்பர்களுடன் புதுக்கோட்டை அருகே பூசத்துறையில் உள்ள வெள்ளாற்றுப் பாலத்திற்குச் சென்று, அங்கு பேசிக்கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல், நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மணிகண்டன், தனது புது செல்போனில் ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுக்கவும், டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றவும் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், மணிகண்டனுடன் செல்பி எடுக்க மகேந்திரன் என்பவர் மட்டும் சென்றுள்ளார். அந்த வழியாகச் சென்ற மானாமதுரை-மன்னார்குடி பயணிகள்ரயில் முன்பு, இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மகேந்திரன், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி ரயில்வே போலீஸார், மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மணிகண்டனுக்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரது தந்தை புது ஆன்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதுவும் அடம்பிடித்து அந்த போனை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "செல்ஃபி மோகத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்துவருகின்றன. நாங்களும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டுதான் வருகிறோம். ஆனால், இளைஞர்கள் காதில் வாங்குவதே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜோடியாக இருவர் ரயிலுக்காக தண்டவாளத்தில் காத்திருப்பதாக டிக்டாக்கில் பேசி வீடியோ போட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை விரட்டி விட்டோம். இப்படி ஏராளம் நடக்கிறது. ஆபத்தை உணர்ந்து இளைஞர்களே மாறினால் தான்" என்றனர்.