Published:Updated:

`தூங்கிக்கொண்டிருந்தான்; எழும்பவில்லை சார்' - மகனின் சடலத்தோடு தூங்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம்!

`தூங்கிக்கொண்டிருந்தான்; எழும்பவில்லை சார்' -  மகனின் சடலத்தோடு தூங்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம்!
News

சென்னை அடையாறில்,  ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி, மகனின் சடலத்தோடு இரண்டு தினங்கள் தூங்கியுள்ளார். மகன் இறந்த துக்கத்தில் அவரும் இறந்துவிட்டார். 

`தூங்கிக்கொண்டிருந்தான்; எழும்பவில்லை சார்' -  மகனின் சடலத்தோடு தூங்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம்!

சென்னை அடையாறு வெங்கட் ரத்தினம் நகரைச் சேர்ந்தவர், கலைக் கண்ணன் (70). இவர், அஞ்சல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் மனைவி, 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கலைக்கண்ணனின் மகன், மனவளர்ச்சி குன்றியவர். அவரை கலைக்கண்ணன் கவனித்துவந்தார். இந்த நிலையில், அவரின் வீடு சில தினங்களாக பூட்டியே இருந்தது. இதனால் கலைக்கண்ணன் வெளியூர் சென்றிருப்பார் என அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கருதினர். ஆனால், அவரின் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடையாறு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். 

 போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் பூட்டை உடைத்தனர். வீட்டுக்குள் படுக்கையறையில் கலைக்கண்ணனின் மகனின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. கட்டிலின் அருகில் கலைக்கண்ணன் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்ட போலீஸார், ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கலைக்கண்ணனின் மகன் சடலத்தை போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைக்கண்ணனும் இன்று இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கலைக்கண்ணன், அவரின் மகன் ஆகியோர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுவதில்லை. தனிமையில் வாழ்ந்த இவர்கள் இருவரும், பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள். பொருள்கள் வாங்க மட்டும் கலைக்கண்ணன் வீட்டை பூட்டிவிட்டுச் செல்வார். மகன்மீது அன்பாக இருந்தார். இந்தச் சமயத்தில்தான் மகன் இறந்துபோய்விட்டார். அதை கலைக்கண்ணனின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், மகனின் சடலத்தின் அருகிலேயே இரண்டு தினங்களாக இருந்துள்ளார். மகன் கண்விழிக்காததால் சாப்பிடாமல் இருந்த கலைக்கண்ணன் மயங்கிவிட்டார். முதுமை காரணமாக அவரும் இறந்துவிட்டார்" என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கலைக்கண்ணனின் வீடு பாழடைந்து காணப்பட்டது. வீட்டுக்குள் செல்ல முடியாதளவுக்கு தூர்நாற்றம் வீசியது. மேலும், அந்த வீட்டில் எப்படிதான் கலைக்கண்ணனும் மகனும் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை. மயங்கிய நிலையில் இருந்த கலைக்கண்ணனிடம் விசாரித்தபோது, பரிதாபமாக, என் மகன் எழும்பவில்லை சார் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். கலைக்கண்ணன் மற்றும் அவரின் மகன் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்தபிறகுதான், அவர்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

 மகன் இறந்ததால், ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி கலைக்கண்ணன் இரண்டு நாள்கள் சடலத்தோடு தூங்கிய சம்பவம் அடையாறு பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.