Published:Updated:

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!
News
`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

Published:Updated:

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!
News
`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வகை உயிரினங்களுக்கும் உணவளித்து வருவதன் மூலம் உயர்ந்து நிற்கிறார் உக்கிரபாண்டியன் எனும் கிராமத்து மனிதர்.

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' என மனமுருகியவர் வள்ளலார். ஒவ்வொரு காலகட்டத்தின் போதும் மண், மரம், செடி, கொடி, உயிரினங்கள் மீது என எல்லாவற்றின் மீதும் பற்றும் பரிவும் கொண்டவர்கள் வாழ்ந்து மறைந்த பூமி தமிழகம். அந்த தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வகை உயிரினங்களுக்கும் உணவளித்து வருவதன் மூலம் உயர்ந்து நிற்கிறார் உக்கிரபாண்டியன் எனும் கிராமத்து மனிதர்.

சாயல்குடியில் இருந்து கமுதி செல்லும் வழியில் உள்ளது கோவிலாங்குளம் கிராமம். கோவிலாங்குளத்தையும் அதனை சுற்றியுள்ள கிராமங்களையும் வாழ்வித்து வந்தது 420 ஏக்கர் பரப்புடைய கோவிலாங்குளம் கண்மாய். வானத்து மழையினால் வழிந்தோடிய கண்மாய் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் விளைவாக வறண்ட நிலமாக மாறிப்போனது. இதனால் விவசாயத்திற்கு துணையாக இருந்த கண்மாயில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களே மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறது.

விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் கருவேல மரங்களின் துணையால் கரிமூட்டம் போட்டு உயிர் பிழைத்து வரும் நிலையில் பயிர்களையும், தானியங்களையும் உட்கொண்டு கண்மாயில் உயிர் வாழ்ந்த பறவையினங்கள் பாடு திண்டாட்டமாகி போனது. இதனால் கருவேல மர இலைகளை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டன அவை. கருவேல மரத்தின் நிழலில் இருந்தாலே உயிரினங்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் என்ற கருத்துள்ள நிலையில் அத்தகைய கருவேல இலைகளை உட்கொள்ளும் பறவைகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு அரிசி, அன்னம் வழங்கி பாதுகாத்து வருகிறார் கோவிலாங்குளம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரான உக்கிரபாண்டி.

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

தினமும் காலை 7 மணிக்கு இவரது வீட்டின் முற்றத்தில் சிட்டுக்குருவி, அணில், அடைக்கலத்தான் குருவி, காகம், மயில் என ஒவ்வொன்றாக வந்து அமருகிறது. அவற்றை கண்டதும் தயாராக வைத்திருக்கும் அரிசி மற்றும் பழைய சாதத்தினை வீட்டின் முற்றத்தில் ஆங்காங்கே சிதறி விடுகிறார். சந்தோஷத்துடன் சத்தமிட்டு கரையும் காகத்தின் குரல் கேட்டு மற்ற காகங்களும் அங்கு வந்து அமர்ந்து உக்கிரபாண்டியன் கொட்டி வைத்த உணவுகளை உட்கொள்ள துவங்குகின்றன. இதன் பின் வீட்டின் அருகில் உள்ள தனது ரைஸ் மில் முற்றத்திற்கு செல்கிறார். இவரது வரவை கண்டதும் அங்கும் ஏராளமான காக்கைகள் கூடுகின்றன. இவற்றிற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி வரும் காராபூந்தியினை ரைஸ் மில் முற்றத்தில் தூவ சந்தோஷமாக உண்ணுகின்றன காக்கைகள்.

அங்கிருந்து கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிற்கும் கண்மாய் கரைக்கு ஒரு கையில் அரிசி பை, மறு கையில் சமைத்த சாதத்துடன் செல்கிறார். குறிப்பிட்ட இடம் வந்ததும் தான் கொண்டு வந்த அரிசி மற்றும் சாதத்தினை பகுதி பகுதியாக தூவி விட்டு கருவேல மரங்களுக்கு இடையே சென்று குரல் கொடுக்க நாளாபுறங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மயில்கள் பாய்தோடி வருகின்றன. அங்கு கொட்டி கிடக்கும் அரிசியையும், சாதத்தினையும் கூட்டமாக சேர்ந்து உண்டு மகிழ்கின்றன மயில்கள். பொது வாழ்வில் நாட்டம் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாய் இல்லா ஜீவன்களுக்கு தனது தங்கை ராஜேஸ்வரி உதவியுடன் உணவு அளித்து வரும் உக்கிரபாண்டியனை சந்தித்தோம்.

நம்மிடம் பேசத் துவங்கிய அவர் ''சின்ன வயதில் எங்களுக்கு சொந்தமான ரைஸ் மில்லில் காகங்களுக்கு வடை வாங்கி பிச்சு போடுவேன். நாளாக நாளாக அதிக காகங்கள் வர துவங்கின. நாளடைவில் நான் வருவதை எதிர்பார்த்து அவை காத்திருந்தன. இந்நிலையில் சிலவருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்து கண்மாய் பகுதியில் மயில்கள் தானியங்கள் கிடைக்காமல் கருவேலமர இலைகளை கொத்தி தின்று கொண்டிருந்தன. 2 நாள் கழித்து அங்குசென்ற போது சிலமயில்கள் இறந்து கிடந்தன. இதனால் இறை கிடைக்காமல் தான் இவை இறந்திருக்ககூடும் என நினைத்தேன். அதனால என்னோட சொந்த செலவுல கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடி கால்படி அரிசி எடுத்துட்டு போய் காட்டில் தூவி வந்தேன். மறுநாள் சென்று பார்த்தபோது அந்த அரிசி எல்லாம் காலியாகி இருந்தது. இதனால் தினமும் மயில்களுக்காக அரிசி தூவ துவங்கினேன்.

`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கும் உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்!

கால்படியில் துவங்கி தற்போது தினமும் 2 கிலோ அரிசி வரை மயில், காகம், அடைக்கலத்தான் குருவிகளுக்கு கொடுத்து வருகிறேன். கருவேல மரம் மூலம் எனக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்தை கொண்டு நான் செய்துவரும் சேவையினை பார்த்த கிராமத்து மக்கள் சிலரும் எனது பணிக்கு துணையாக உதவி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி நாட்களிலும், ஆதிசங்கரர், ரமண மகரிஷி, வள்ளலார், விவேகானந்தர் போன்ற மகான்கள் அவதரித்த தினத்திலும் சிறப்பு உணவாக பருப்பு சாதம் செய்து மயில்களுக்கு கொடுப்பேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்த பணியினை விடாமல் செய்வேன்.

தற்போது எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் வகையில் அரசு இப்பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும். நாட்டின் தேசிய பறவையாகவும், முருகனின் வாகனமாகவும் திகழும் மயில்களை காக்க அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்'' என்றார். வறிய, எழிய மனிதர்கள் மீது கூட இறக்கம் காட்ட மறுக்கும் சக மனிதர்களுக்கு மத்தியில் உணவின்றி தவிக்கும் மயில், காகங்களுக்கு உணவு அளித்து வாழ்விக்கும் உக்கிரபாண்டியனின் பணியை பெருமையோடு பாராட்டலாம்.