Published:Updated:

``இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்தாலும் மக்கள் பொறுக்கமாட்டார்கள்” - கடலூரில் ஸ்டாலின் பேச்சு

``இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்தாலும் மக்கள் பொறுக்கமாட்டார்கள்” - கடலூரில் ஸ்டாலின் பேச்சு
News

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிப்பு 
பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். 
முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

``இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்தாலும் மக்கள் பொறுக்கமாட்டார்கள்” - கடலூரில் ஸ்டாலின் பேச்சு

இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ``வாக்களித்த உங்களைத் தேடி, நாடி நன்றி செல்ல ஓடோடி வந்துள்ளேன். ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைச் சந்திப்பவர்கள் நாங்கள். வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறவும், நமக்கு வாக்கு அளிக்கத் தவறியவர்கள் மீண்டும் நமக்கு வாக்களிக்க வேண்டும் என்று நன்றி கூற வந்துள்ளோம். சிலர் ஆரூடம் கணித்தனர் கருணாநிதி இல்லாத இடத்தை நிரப்ப ஸ்டாலினால் முடியுமா என்றனர். தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. அழிந்துவிடும் என்றும் இருக்காது என்றும் பலர் பேசினார்கள். தி-மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது, அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்துபோய் உள்ளனர். நமது கூட்டணியில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

``இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்தாலும் மக்கள் பொறுக்கமாட்டார்கள்” - கடலூரில் ஸ்டாலின் பேச்சு

சட்ட மன்ற கூட்ட தொடர் தொடங்கியுள்ளது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆட்சியின் ஆயுள் காலம் 
முடிந்த பிறகு ஆட்சி கவிழுமா, ஆயுள் காலத்துக்கு முன்பே கவிழுமா என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் ஆட்சி கவிழும் 
என்பது மட்டும் உண்மை. தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்று என்ன பயன் என்று கேட்கின்றனர். மக்களவையில் 
தமிழ் ஒலித்தது, மும்மொழித் திட்டம் அறிவித்தவுடன் நான் கண்டித்தேன், அனைத்துத் தலைவர்களும் கண்டித்தனர். இதனால்  மத்திய 
அரசு இத்திட்டத்தை கைவிட்டது. மக்களைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை
என்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

``இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்தாலும் மக்கள் பொறுக்கமாட்டார்கள்” - கடலூரில் ஸ்டாலின் பேச்சு

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து ஒரு கட்சி வழக்கு தொடர்ந்தது. அதன் தலைவர் தற்போது மௌனம் காத்து வருகிறார். ஏன் ராஜ்யசபா எம்.பிக்காகவா? சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் அந்தத் துறை அமைச்சர் வேலுமணி தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்று அறிவிக்கிறார். 8 ஆண்டுகளில் இந்த ஆளும் அ.தி.மு.க., அரசு தண்ணீர்ப் பஞ்சத்துக்கு என்ன நடவடிக்கை எடுத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013-ல் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு இப்போதுதான் அடிக்கல் நாட்டி வருகின்றனர். இந்த ஆட்சியாளர்கள், மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் ஆட்சியை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான்.

``இந்த ஆட்சியை நாங்கள் பொறுத்தாலும் மக்கள் பொறுக்கமாட்டார்கள்” - கடலூரில் ஸ்டாலின் பேச்சு

எந்த எம்.எல்.ஏ. எங்கே போவார்கள் என்று ஒற்றர்கள் வைத்துக் கவனித்து வருகிறார்கள். நாங்கள் அந்த ஒற்றர்களுக்கும் ஒற்றர்கள் வைத்துள்ளோம். இனியும் எடப்பாடி ஆட்சி நடந்தால் நாடு தாங்காது. நாங்கள் பொறுத்தாலும், மக்கள் பொறுக்க மாட்டார்கள். இருக்கும் ஒன்றரை வருட ஆட்சியில் இருப்பதை சுருட்டிக்கொண்டு போக நினைக்கின்றனர். இவர்கள் எங்கு  ஓடினாலும் விட மாட்டோம் மக்கள் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” இவ்வாறு பேசினார்.  

முன்னதாக சிதம்பரம் எம்.பி திருமாவளவன் பேசுகையில் ``தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரண்டு பெரிய வெற்றிடம்  இருந்தது. அந்த வெற்றிடத்தைத் தமிழகத்தில் நிரம்பும் ஆற்றல் படைத்த தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்பதை இந்தத் தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்துள்ளார்” எனக் கூறினார். இந்தக் கூட்டத்தில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் கடலூர் ரமேஷ், கள்ளக்குறிச்சி கௌதமசிகாமணி, சேலம் பார்த்திபன், புதுவை வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ வெங்கடேசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.