மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

சிவா பூஜையில் கரடி
இசை: சுந்தர்.சி.பாபு
வெளியீடு: வேகா மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

75

விகடன் வரவேற்பறை

விலங்குகளை மனிதனோடு ஒப்பிடும் 'ஆஞ்சனேயர் வேஷம்...’ பாடலில் நவீன் மாதவ் குரல் புதுசு. 'ரெடி ரெடி...’ பாடலில் 'காளை மாடு... கம்மங்காடு’ எனப் பழகிய வரிகளை விவேகா தர, அதற்கு சங்கர் மகாதேவன் எஃபெக்ட் கொடுத்திருக்கிறது சுந்தர்.சி.பாபுவின் இசை. மலேசியா வாசுதேவன் மகள்பிரஷாந்தினியின் குரலே அந்த சராசரிப் பாடலுக்கு சாக்லேட் இனிமை சேர்க்கிறது. 'சிம்பொனியில் செய்த சிரிப்பொலி... சேலை கட்டி வந்த தேன்துளி’ என விவேகாவின் வரிகளால் மனதை நிறைக்கிறது 'சிம்பொனி’ பாட்டு. 'ஒத்தைக்கு ஒத்தை...’ செமத்தியான அடல்ட்ஸ் ஒன்லி பாட்டு. 'மேடுபள்ளம்... ஸ்பீடு பிரேக்’ போன்ற 'அர்த்தம்’ நிறைந்த வார்த்தைகளோடு, 'கம்ப்யூட்டர்போல பொண்ணு... நீ வந்து லாக்இன் பண்ணு’ என்று 'ஷாக்’ செய்தியும் சொல்கிறது பாடல். பாட்டு படைத்த அந்த கவிவர்மன் யாருப்பா?   

The chase இயக்கம்: பிரசாந்த் ராமசாமி
வெளியீடு: உணர்வியம்

விகடன் வரவேற்பறை

மூன்று இளைஞர்களுக்கு ஒரே மாதிரி கனவு வருகிறது... சாலையில் செல்லும் அவர்களை முகமூடி மனிதர்கள் துரத்திப் பிடிக்கிறார்கள்; முகமூடியைக் கழற்றினால், அவர்களின் முகம் பச்சையாக இருக்கிறது... ஆரவாரமாகச் சிரித்தபடி கைதட்டுகிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டது, போக்குவரத்து சிக்னலில் வண்டிகளின் இயக்கம் நிறுத்தியது எனச் சுற்றுச்சூழலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நல்லது செய்த மூன்று இளைஞர்களையும் இயற்கை பாராட்டுகிறது என்பது கரு. நல்ல விஷயத்தை த்ரில்லிங்காகச் சொல்லி ரசிக்கவைத்திருக்கிறார்கள்!  

பாம்புத் தைலம் பேயோன்
வெளியீடு: ஆழி,
1 எ, திலகர் தெரு, பாலாஜி நகர், அய்யப்பன்தாங்கல், சென்னை - 77.
பக்கங்கள்: 128               விலை:

விகடன் வரவேற்பறை

100

விகடன் வரவேற்பறை

 'மர்ம எழுத்தாளர்’ பேயோனின் மூன்றா வது தொகுப்பு. ட்விட்டர் பதிவுகளும்வலை தளக் கட்டுரைகளுமாக... வழக்கம்போல பகடி... பகடி... பகடிதான். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்கான 'விமர்சனம்’,  சினிமாக்காரர்களுக்கே தெரியாமல் பல நுண்விஷயங்களைப் பெரிதுபடுத்தி, இலக்கியப் பத்திரிகைகளில் எப்படி விமர்சனம் என்ற பெயரில் பாராட்டுரை எழுதப்படுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. 'வரும் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவுள்ள எனது புத்தகங்கள்’ என்ற கட்டுரை, எழுதித் தள்ளும் இயந்திரங்களாக மாறிவிட்ட எழுத்துத் தொழிலாளிகளைக் கண்டமேனிக்குக் கலாய்க்கிறது. 'உலக சினிமா பார்ப்பதற்குப் பயிற்சி வேண்டும்’ , 'என் வீட்டு சோபாவில் ஒரு நிரந்தரப் பள்ளமே இருக்கிறது’ போன்ற ட்விட் தொகுப்புகள் வழக்கம்போலக் கலக்கல்!  

ஆன்லைன் வக்கீல்!
www.vakilsearch.com

விகடன் வரவேற்பறை

வியாபாரச் சிக்கல்களா, நிறுவனப் பதிவு நடைமுறைகளா, பான்கார்டு விண்ணப்பச் சந்தேகங்களா, செல்போன் சேவை குறித்த புகார்களா... உங்கள் சட்டச் சந்தேகங்களை அதற்குரிய கட்டத்தில் இங்கு குறிப்பிட்டு, உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்துவிட்டால், பதில் உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும்... இலவசமாக!

அம்பேத்கர் ஆன்லைன்!
http://ambedkarcollections.com

விகடன் வரவேற்பறை

ண்ணல் அம்பேத்கரின் படைப்புகளைத் தொகுக்கும் வலைப்பூ. மனு, சூத்திரர்கள் முதல் கிருஷ்ணன் எட்டு மனைவிகளை அடைந்த விதம் வரையில் எடுத்துக்கொண்ட கருவின் ஆழம் தொடும் எழுத்துக்கள். அம்பேத்கரின் எண்ணங்களை மறுவாசிப்புச் செய்யும் தேவையின் பொருட்டு இத் தளத்தின் சேவை முக்கியத்துவம் பெறுகிறது!