Published:Updated:

விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட 18 தெரு நாய்கள்; `தலைவர் சொன்னதால் செய்தேன்!' - கைதானவர் பகீர்

தெரு நாய்கள்
News
தெரு நாய்கள்

18 நாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட 18 தெரு நாய்கள்; `தலைவர் சொன்னதால் செய்தேன்!' - கைதானவர் பகீர்

18 நாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெரு நாய்கள்
News
தெரு நாய்கள்

ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 18 தெரு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், நாய்களை விஷம் வைத்துக் கொன்றது வீரபாபு என்ற இளைஞர் என்பது கண்டறியப்பட்டது.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், செப்ரோல் கிராமத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர்தான் நாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்லச் சொன்னதாகக் கூறினார். இதையடுத்து வீரபாபு மீது ஆந்திர மாநில காவல்துறை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானாவின், சித்திபேட் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தெரு நாய்களின் தொல்லை மிகப் பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. தெரு நாய் தொல்லையிலிருந்து தப்பிக்க இவ்வாறு செய்வது எந்தவிதத்திலும் தீர்வாகாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.