Published:Updated:

18 சடலங்களுடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்ற கன்டெய்னர் லாரி: 4 பேரைக் கைதுசெய்த காவல்துறை!

கன்டெய்னர் லாரி
News
கன்டெய்னர் லாரி ( ட்விட்டர் )

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்ற கன்டெய்னர் லாரியிலிருந்த 18 அகதிகள் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

18 சடலங்களுடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்ற கன்டெய்னர் லாரி: 4 பேரைக் கைதுசெய்த காவல்துறை!

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்ற கன்டெய்னர் லாரியிலிருந்த 18 அகதிகள் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

கன்டெய்னர் லாரி
News
கன்டெய்னர் லாரி ( ட்விட்டர் )

பல்கேரியாவின் சோபியா பகுதியில் ஆள் நடமாட்டமற்ற இடத்தில் ஒரு கன்டெய்னர் லாரி நீண்ட நேரமாக நிற்பதாக பல்கேரிய காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சோபியா பகுதியிலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள லோகோர்ஸ்கோ கிராமத்தில் வெள்ளை நிற கன்டெய்னர் ஒன்று நிற்பதை காவல்துறை உறுதிசெய்தது.

மேலும், அந்த கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது, அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளுக்கு மத்தியில், குழந்தைகள், பெரியவர்கள் என 40 பேர் அடைக்கப்பட்டிருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதால், உடனே காவல்துறை அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறது.

இவர்களில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, விசாரணையில் ஈடுபட்ட பல்கேரிய காவல்துறை, அந்த கன்டெய்னரில் இருந்தவர்கள் அனைவரும், துருக்கியிலிருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயன்ற ஆப்கானிஸ்தான் அகதிகள் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரைக் கைதுசெய்த பல்கேரியா காவல்துறை, அடையாளம் தெரியாத ஓட்டுநரைத் தேடிவருகிறது.

பல்கேரியா காவல்துறை
பல்கேரியா காவல்துறை
ட்விட்டர்

சமீபகாலமாக ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், அகதிகளாக வாழ்வாதாரத்தைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துவருகின்றனர். இதை ஐரோப்பிய நாட்டு அரசுகள், பாதுகாப்புப் படையினர் தடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.