ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'அல்வா' அப்ரோஸ்!

மீண்டும் ஒரு 'வேலை' சீட்டிங்

##~##
'அல்வா' அப்ரோஸ்!

த்தனை முறை, எத்தனை பேரிடம் அனுபவப் பட்டாலும் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு நம் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். 

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள 'ஜி 4 எஸ்’ நிறுவனத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார் கண்ணன். பல்வேறு நிறுவனங்களுக்கு ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்காக ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் அது. அதில் கிளீனிங் சூப்பர்வைசராகப் பணியாற்றினார் அப்ரோஸ் அகமது. ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு நிறுவனத்தில் கண்ணன் வேலை செய்யும்போது, அங்கு மேற்பார்வை செய்யவந்த அப்ரோஸுக்கும் கண்ணனுக்கும் பழக்கம். வெளிநாட்டுக்குச் சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கண்ணனுக்கு, உடனே வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை தந்தார் அப்ரோஸ்.

'அல்வா' அப்ரோஸ்!

அதை நம்பிப் பணம் கொடுத்த கண்ணன், தன்னுடைய நண்பர் சங்கரையும் அப்ரோஸிடம் அறிமுகப்படுத்தினார். சங்கர் தனக்குத் தெரிந்த 10-க்கும் மேற்பட்டவர்களை அப்ரோஸிடம் அழைத்துவர... வெளிநாட்டு மோகத்தில் அனை வருமே பணத்தைக் கொடுத்திருக்கின்றனர்.

ஆளுக்கு ஏற்ப

'அல்வா' அப்ரோஸ்!

70 ஆயிரம் முதல்

'அல்வா' அப்ரோஸ்!

1 லட்சத்து 70 ஆயிரம் வரை வசூல் செய்திருக்கிறார். 'நானே பாஸ்போர்ட் எடுத்துத் தருகிறேன்’ என்று சொல்லி அதற்காகவும் தனியாக

'அல்வா' அப்ரோஸ்!

10 ஆயிரம் வாங்கி இருக் கிறார். பணம் கொடுத்தவர்கள் தினமும் போன் செய்து நச்சரிக்கவே, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவு ஆகிவிட்டார்.  பணம் கொடுத்தவர்கள் பதறிப்போய் அப்ரோஸின் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டுக்குச் சென்று விசாரித்து இருக்கிறார்கள். அப்ரோஸ் கடந்த 10 வருடங்களாக ஊருக்கே வரவில்லை என்று தெரியவர அதிர்ச்சியுடன் திரும்பி இருக்கிறார்கள்.

அதன்பிறகு, பூந்தமல்லியில் அப்ரோஸ் தங்கி இருந்த வீட்டை

'அல்வா' அப்ரோஸ்!

மிகுந்த சிரமப்பட்டுக் கண்டுபிடித் தார்கள். ஆனால், எப்போதும் அந்த வீடு பூட்டியே கிடந்திருக்கிறது. அதன்பிறகுதான், பணத்தைப் பறி கொடுத்த விழுப்புரம் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும் காவல் நிலையத்தை நாடினார்கள்.

'வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக

'அல்வா' அப்ரோஸ்!

1.25 லட்சத்தை ஏமாற்றி விட்டார்’ என்று பூந்த மல்லியைச் சேர்ந்த ரகுமான் ஷெரீப் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் அப்ரோஸ் மீது கொடுத்தப் புகாரின் அடிப்படையில், அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தார். அந்த வழக்கில் இரண்டாவது மனைவி ரூத்மேரி அவரை ஜாமீனில் எடுக்க வந்த நேரத்தில், அப்ரோஸை சுற்றி வளைத்து மீண்டும் கைது செய்திருக்கிறார்கள், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார்.

அப்ரோஸ் கைதான தகவல் வெளியே கசிந்ததும், அவரிடம் ஏமாந்தவர்களின் புகார் பட்டியல் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

''வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது தவிர, நசரத்பேட்டையைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கார் மெக்கானிக்கிடம்

'அல்வா' அப்ரோஸ்!

25 லட்சம் மதிப்புள்ள கார் ஸ்கேனிங் மெஷினை, இரண்டு லட்சத்துக்கு வாங்கித் தருவதாகச் சொல்லியும் பணம் வாங்கியுள்ளார். பூந்தமல்லியில் வசிக்கும் அங்கப்பன்-மல்லிகா என்ற

'அல்வா' அப்ரோஸ்!

பார்வையற்ற தம்பதியிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி

'அல்வா' அப்ரோஸ்!

30 ஆயிரம் வாங்கி உள்ளார். இதுவரைக்கும்

'அல்வா' அப்ரோஸ்!

17 லட்ச ரூபாய் அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாகப் புகார்களாம். இதுபோன்ற நபர்களிடம் நம் மக்கள் எப்படித்தான் ஏமாறுகிறார்களோ?'' என்று போலீஸார் வருத்தப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட கண்ண னிடம் பேசினோம், 'அப்ரோஸ் ஏமாத்து வாருன்னு கொஞ்சம்கூட நினைக்கலை. அவ்வளவு அன்பாகப் பேசினார். சீக்கிரமே வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிச்சி குடும்பக் கஷ்டத்தைப் போக்க​லாம்னு நினைச்சேன். ஆனா, என் நம்பிக்கை வீணாப்போயிடுச்சி. 'சீக்கிரத்திலேயே வெளி நாட்டுக்குப் போகப்​போற... அதனால வேலையை விட்டுடு’னு அவர் சொன்னதை நம்பி, பார்த்துக்கிட்டு இருந்த வேலையையும் விட்டுட்​டேன். இப்ப என் குடும்பம் நடுத்தெருவுல நிக்குது' என்று கண்ணீருடன் பேசினார்.

அப்ரோஸைக் கைது செய்த மத்தியக் குற்றப் பிரிவின் வேலை வாய்ப்பு மோசடிப் பிரிவைச் சேர்ந்த காவல் ஆய்வாளரான செல்வசேகர், 'எல்லாப் புகார்களையும் ஒன்று சேர்த்து விசாரித்து வருகி​றோம். ஏமாத்தின பணத்தில் ரொம்பவும் ஆடம்பரமா வாழ்ந்திருக்கார். அவரிடம் இருந்து இது வரைக்கும் பணமாகவோ, பொருளாகவோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. யாரிடம் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம்'' என்றார்.

அப்ரோஸின் இரண்டாவது மனைவி ரூத் மேரியிடம் பேச முயன்றோம். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருக்கிறார் ரூத் மேரி. அவரது சார்பாகப் பேசிய அவரது உறவினர் சுரேஷ், 'அப்ரோஸ் தப்பு பண்ணியிருக்க மாட்டார்னு நம்பித்தான் முதல் தடவை ஜாமீன்ல எடுத்தோம். ஆனா, இப்ப நிறையப் பேரு புகார் கொடுத்திருப்பதைப் பார்த்தா, உண்மையா இருக்கலாம்னு தோணுது. தப்பு செஞ்சவர் தண்டனையை அனுபவிச்சே ஆகணும். அதனால இந்தத் தடவை ஜாமீன்ல எடுக்க மாட்டோம்'' என்று சொன்னார்.

வெளிநாட்டில் வேலை பெறுவது குறித்து அரசு எத்தனையோ முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும், அவற்றைப் புறக்கணித்து இப்படி ஏமாறுபவர்களை என்ன சொல்வது?

- சி.காவேரி மாணிக்கம்

படம்: அ.ரஞ்சித்