ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''நடராஜன் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது!''

ஈரோடு தி.மு.க. கலகல

##~##
''நடராஜன் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது!''

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் இல்லை. 

முதலில் பேசிய முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், ''அரசு சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் நிர்வாகத் துறை, நீதித்துறை, சட்டமன்றம் மூன்றும் ஒழுங்காகச் செயல்பட வேண்​டும். ஆனால், இந்த ஆட்சியில் எந்தத் துறையும் செயல்​படவில்லை. மக்கள் நலப்​பணியாளர்கள் வேலைநீக்கம், அண்ணா நூலகம் இடமாற்றம், பால், பஸ் மற்றும் மின் கட்டண உயர்வுதான் இந்த ஆட்சியின் சாதனை'' என்று ஆரம்​பித்து வைத்தார்.

அடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் என்.கே.பி.பி.ராஜாவின் பேச்சில் கலகலப்பும் ஆதங்கமும் கலந்து இருந்தது. ''10 மாத ஆட்சிக் காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாழ்​படுத்தி

''நடராஜன் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது!''

விட்டார் ஜெயலலிதா. மக்களை ஏமாற்றுவதில் ஜெய​லலிதா வல்லவர். கடந்த தி.மு.க. ஆட்சியில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். ஆனால், அதற்காக மக்கள் இவ்வளவு பெரிய தண்டனையைக் கலைஞருக்குக் கொடுத்து இருக்கக் கூடாது.  அரசு நிதிநிலையைப் பெருக்க இது போன்ற கட்டண உயர்வை அறிவித்​துள்ளதாக கூறுகின்றனர். நிதிநிலையைப் பெருக்க அரசு ஒன்றும் நிறுவனம் நடத்தவில்லை. டாஸ்மாக் கடை இருக்க வேண்டும் என்று கலைஞர் மனதார நினைக்க​வில்லை. ஆனால், இந்த அரசு வந்தவுடன் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் விற்பனை நேரத்தை அதிகரித்து உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை என்று கத்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த 10 மாதத்​தில் ஆறுகளையே காணவில்லை. மணலைக் கடத்தி கேரளாவுக்கு விற்று​விட்டனர். கேரள மக்கள் புத்திசாலிகள் என்பதால், அங்கு மணல்

''நடராஜன் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது!''

அள்ளத் தடை விதித்து உள்ளனர். இங்கு சந்திரகுமார் என்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ. இருக்கிறார். அவரால் உங்களுக்கு சல்லிப் பைசா பிரயோஜனம் இருக்கிறதா? கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேரம்தான் மின் வெட்டு இருந்தது. ஆனால், இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் 12 மணி நேரம் மின்வெட்டு. ராமதாஸ் சில நேரங்களில் மக்களுக்காக போராடு​வார் என்று நினைத்தேன்.

ஆனால், அவர் இப்போது போராட்டம் நடத்தி​னால் 50 நாட்களுக்கு ஜெயிலில்தான் இருக்க வேண்டும். நிலஅபகரிப்பு என்று சொல்கிறார்கள். தி.மு.க-காரன் நிலத்தை அபகரித்து இருந்தான், அவனிடம் இருந்து நிலத்தை மீட்டோம் என்று ஒரு வழக்கையாவது போலீஸாரால் காட்ட முடியுமா? 10 மாதத்தில் எந்த மந்திரியாவது ஒரு உருப்படியான திட்டம் கொண்டு வந்து இருப்பாரா? எந்தத் திட்டம் என்றாலும் முதல்வர்தான் போடணும். அரசு அதிகாரிகளும் சாமி மாடு போன்று தலை ஆட்டுகின்றனர். எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்னைச் சிறையில் தள்ளி, 30 நாட்கள் உள்ளே போடட்டும். நல்லவேளை, என்னை கோவை சிறையில் அடைத்தனர். சேலம் சிறையில் அடைத்து இருந்தால் உஷ்ணம் தாங்க முடியாது. வீரபாண்டியார் கூட, 'கோவை சிறைதான் எனக்குப் பிடித்த சிறை. ஜில் என்று இருக்கிறது’ என்று கூறினார்.

''நடராஜன் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது!''

அந்த அம்மையார் அம்பேத்​கருக்கு மரியாதை செலுத்தாதவர் என்று எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தம்மா எம்.ஜி.ஆருக்கே மரி யாதை செலுத்​தாதவர். மக்களை ஏமாற்றுவதற்காக சசிகலா நாடகம் நடத்தினார். நடராஜன் போன்றவர்கள்  சிறையில் இருந்து வெளியே வரக்கூடாதுதான். ஆனால், அவரைக் கைது செய்த விதம்தான் தவறு. இப்போது, ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார். மதத்தின் பின்னே போனால் நாடு சுடுகாடு ஆகி விடும்'' என்று நக்கலுடன் முடித்தார்.

இறுதியாகப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், ''வயதாகி விட்டதால் முன்புபோல் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சிப்பது இல்லை. ஆனால், அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஆனால், அது இந்த அரசுக்கு  உரைக்கவில்லை. இந்த அரசு வெற்றி அடையக் காரணமாக இருந்த தா.பாண்டியன், விஜயகாந்த் போன்றவர்கள் இப்போது 'குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?’ என்று பாடிக்கொண்டு இருக்கின்றனர்.

2023-ம் ஆண்டில் 20,000 மெகாவாட் மின்சார உற்பத்திச் செய்வேன் என்கிறார் ஜெயலலிதா. முதலில் அவர் இப்போது இருக்கும் மின்வெட்டைத் தீர்க்கட்டும். காந்தி மட்டும் இப்போது உயிரோடு இருந்தால், அவர் மீதும் கஞ்சா கேஸ் போட்டு இருப்பார்'' என்று முடிக்க, உடன் பிறப்புகளிடம் நல்ல ரெஸ்பான்ஸ்.

                       - ம.சபரி

   படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்