ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

உழவர் பெருவிழா புறக்கணிப்பு!

குமுறும் ஈரோடு விவசாயிகள்

##~##
உழவர் பெருவிழா புறக்கணிப்பு!

'இந்த ஆண்டு முதல் தமிழ்ப்புத்தாண்டு, உழவர் பெருவிழாவாக அறுசுவை உணவோடு கொண்டாடப்படும்’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தொடர்ந்து அனைத்துக் கிராமங்களிலும் அவசரக் கோலமாக உழவர் பெருவிழா சொதப்பல்களுடன் நடந்து வரும் நிலையில், ஒரு கிராமத்தினர் விழாவை முற்றிலும் புறக்கணித்து உள்ளனர். 

ஈரோடு, சென்னிமலை வட்டம் உள்ள பசுவப்​பட்டி கிராம விவசாயிகள்தான், மும்முனை மின்சார வழங்கலுக்கான கட்டுப்பாட்டை நீக்கக் கோரி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்தக் கிராமப்புற கட்டுப்பாடு குறித்து கடந்த 11.4.2012 ஜூ.வி. இதழில் நாம் கட்டுரை வெளியிட்டு உள்ளோம்.

இதுகுறித்து, அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பசுவப்பட்டி கிராமத்தில் உழவர் பெருவிழா தொடங்கிய போது கறுப்புத் துண்டு அணிந்தவாறு புறக்கணிப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால், உள்ளூர் அ.தி.மு.க-வினரையும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்பவர்களையும் வைத்து அதிகாரிகள் விழாவை நடத்தி முடித்தனர்.

உழவர் பெருவிழா புறக்கணிப்பு!

விவசாயிகளின் சார்பில் நம்மிடம் பேசிய பொன்னையன், ''இப்படி ஒரு விழா நடக்கப்போவது குறித்து விவசாயி​களுக்கு முறைப்படி தெரிவிக்கவே இல்லை. அதனால் நாங்கள் இந்த விழாவைப்

உழவர் பெருவிழா புறக்கணிப்பு!

புறக்கணித்துப் போராடுகிறோம். அரசு எங் களுக்கு சோறு போடத் தேவை இல்லை. உணவு உற்பத்தி செய்​வதற்கான மின் சாரம் மட்டும் கொடுத்தால் போதும். எங்களுக்கு இருக்கும் மும்முனை மின்வழங்கல் கட்டுப்பாட்டை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தக் கட் டுப்​பாடு காரணமாக எங்களால் தண்ணீர் மோட்டாரை இயக்கவே முடியவில்லை. இதுபோன்ற கட்டுப்​பாட்டு மின்சார முறை இருக்கும்வரை விவசாயப் புரட்சியை ஏற்படுத்தவே முடியாது. இந்தக் கட்டுப்பாட்டு மின்சாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அரசு தலையிட்டு முடித்து வைக்க வேண்டும். இதுகுறித்து, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனைச் சந்தித்து முறையிட்டோம். அவரோ, 'என்னால் இதில் ஒன்றும் செய்ய முடியாது’ என்று சொல்லி, இந்தக் கோரிக்கையை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கிறார். அதனால் இப்போது நாங்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலை வரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பால கிருஷ்ணனைச் சந்தித்தோம். அவர் இதுகுறித்து மானியக் கோரிக்கையில் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்து உள்ளார். அதேபோல், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கிட்டுசாமியும் இதுகுறித்து கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்து உள்ளார். நல்லது நடக்கும் என்றே நம்புகிறோம்'' என்றார்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''இந்தக் கட்டுப்பாட்டு மும்முனை மின்வழங்கல் முறை தேவையில்லாத ஒன்று. மின்துறை அதிகாரிகளே இது ஒரு தேவையற்ற முறை என்று கூறுகிறார்கள். அரசு இந்த முறையை நீக்கவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் அரசு நடத்தும் உழவர் பெருவிழாவை விவசாயிகள் புறக் கணிப்பார்கள்'' என்றார் உறுதியாக.

விவசாயிகளுக்கு உடனே நியாயம் கிடைக்​கட்டும்.

- ம.சபரி, படங்கள்: க.ரமேஷ்