என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

புலி வில்லி!

க.நாகப்பன், படம் : அ.ரஞ்சித்

அன்பு மட்டுமே அழகு!

புலி வில்லி!

'மருதாணி’ சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டும் சுஜிதாவுக்கு, சினிமாவில் இது இரண்டாவது ரவுண்டு. '' 'தாண்டவம்’ படத்துல விக்ரமுக்குத் தங்கச்சியா நடிக்கிறேன். மூணு வருஷமா கல்யாண வாழ்க்கை கலகலப்பா  போயிட்டு இருக்கு. என் கணவர் தனுஷ§க்கு இன்னொரு பேர் அன்பு. என் மேல் அவ்வளவு அன்பா இருப்பார். அன்பா இருங்க... வாழ்க்கை அழகாத் தெரியும்!''  

அருவாளோட மாமா பையன்!

புலி வில்லி!

'கனாக் காணும் காலங்கள்’ சீரியலில் காதல் பூத்த ரோஜாவாக வலம் வரும் ஹரிப்ரியா, சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் மாணவி. ''நடனம்னா எனக்குச் சாப்பாடு, தூக்கம்கூட வேணாம். இப்பதான் முறைப்படி பரதம் கத்துக்கிட்டுவர்றேன். சீரியல்கள்ல காதலிக்கிற மாதிரி நடிக்கச் சொல்றாங்க. ஆனா, இதுவரை காதலிச்சதே இல்லையா... அதனால அப்படி நடிக்கச் சிரமமா இருக்கு. புரொபோசல்கள் வந்தா, 'ஊர்ல மாமா பையன் அருவாளோட திரியுறான்’னு சொல்லிச் சமாளிச்சுருவேன். ஒரு பையன் என்கிட்ட வந்து, 'உன்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றேன். நீ இல்லைன்னா, சூசைட் பண்ணிப்பேன்’னு சொன்னான். 'தாராளமாப் பண்ணிக்கோ’னு சொல்லிட்டேன். மறு நாள் பார்த்தா... அவன் என் ஃப்ரெண்ட் ஒருத்திகிட்ட புரொபோஸ் பண்ணிக் கிட்டு இருக்கான்!'' - கலகலப்பூட்டுகிறார் ஹரிப்ரியா.

சஹானா..!

புலி வில்லி!

சூரியன் எஃப்.எம். ஜோடி பிளேடு ஷங்கர், கிசுகிசு கீதா வீட்டில் ஒன் லெட்சுமி ரிசீவ்டு. அட, காதல் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

''அழகா, ஆரோக்கியமா மூன்றரை கிலோவில் இருக்கா எங்க செல்லம். 'சஹான£’னு பேர் வெச்சிருக்கோம். இப்போ 'ரெண்டாவது படம்’, 'சகுனி’னு ரெண்டு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். சினிமாவில் இயக்குநர் ஆகணும்கிறதுதான் ஆசை. நல்ல நடிகன்னு பேர் எடுத்துட்டு டைரக்டர் ஆகணும்!'' - கண்கள் முழுக்கக் கனவுகளுடன் பேசுகிறார் சஹானாவின் அப்பா.  

புலி வில்லி!

புலி வில்லி!

'தென்றல்’ ஸ்ரீவித்யாவுக்கு டும்டும்டும்... ''என் அண்ணி லட்சுமி காயத்ரியோட கசின் பிரதர் நாராயணன். சாஃப்ட்வேர் இன்ஜினீயர். என் குடும்பத்துக்கே நாராயணனைப் பிடிச்சிருச்சு. அதனால், நானும் ஓ.கே. சொல்லிட்டேன். அவர்கூட வேலை பார்க்கிற பலர் என்னோட ரசிகர்களாம். 'கல்யாணம் பண்ணிட்டோமேனு நடிக்கிறதை நிறுத்திடாதீங்க’னு அன்புக் கட்டளை போட்டிருக்காங்க. ஸோ, தொடர்ந்து நடிப்பேன். ஹனிமூனுக்கு மொரீஷியஸ் போனோம். அருவிக் குளியல், படகுப் பயணம், பாராசூட் ட்ரிப்னு ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். அதுலயும் அங்கே ஜூவில் நிஜப் புலியைத் தொட்டுப் பார்த்தேன்... ஹப்பா... எவ்வளவு சாஃப்ட்டா இருக்கு... சான்ஸே இல்லை!'' - குழந்தையாகக் குதூகலிக்கிறார் இந்த சீரியல் வில்லி.

தாய்லாந்து போங்க!

புலி வில்லி!

ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவுட்டிங் போகும் எஸ்.எஸ். டி.வி. பிரியங்கா, இப்போது சென்றுவந்திருப்பது தாய்லாந்துக்கு. ''சிவன், விஷ்ணு, லக்ஷ்மி கோயில்கள் இருக்கும் பஹீரத் நகரம் கிட்டத்தட்ட குட்டி இந்தியா. அவ்ளோ கலவையா, அழகா இருக்கும். கடற்கரை நகரம், கிராண்ட் பேலஸ், மியூஸியம், பிரயா நதி, புக்கட் தீவு படகுப் பயணம், ரம்மியமான மலைப் பகுதிகள், சாகச விளையாட்டுக்கள்னு ஒவ்வொரு நிமிஷமும் செம ஜாலிதான். ஐ-போன், ஐ-பாட்னு எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களையும் அள்ளிட்டு வந்துட்டேன். டூர் போக நினைச்சா, ஒரு தடவையாச்சும் தாய்லாந்து போய்ட்டு வாங்க'' - சட்டென கைடு அவதாரம் எடுக்கிறார் பிரியங்கா!