மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

வெள்ளை மொழி
அரவாணியின் தன் வரலாறு  ரேவதி
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621310. பக்கங்கள்: 272 விலை:

விகடன் வரவேற்பறை

200

விகடன் வரவேற்பறை

ரவாணிகள் என்றும் திருநங்கை கள் என்றும் அழைக்கப்படுபவர் களின் உடல் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் வாழ்வியல் பிரச்னை களையும் வரிவரியாக, வலியுடன் விவரிக்கும் புத்தகம். ''உங்க வீட்ல இப்படி ஒருத்தர் பிறந்தா என்ன பண்ணுவீங்க?'' என்று இந்தப் புத்தகம் ஆங்காங்கே எழுப்பும் கேள்வி நம்மைப் பரிசோதித்துக்கொள்வதற்கானது. நாமக்கல்லில் பிறந்த துரைசாமி, தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து ரேவதி என்று மாற்றிக்கொள்ளும் தருணத்தில் இருந்து தொடங்கும் அவமானத்தின் கசப்பு இந்தப் புத்த கத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் ஆங்காங்கே படிந்துகிடக்கிறது. நாமக்கல், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ வேண்டிய நிர்பந்தம் கொண்ட ரேவதி, எல்லா இடங்களி லும் மீண்டும் மீண்டும் சந்திப்பது அவமானம், வன்முறை, ஏமாற்றம். இதனூடாகச் சில காதல்களும் அன்பு ததும்பும் மிகச் சொற்ப மனிதர்களும். இஜரா (திருநங்கை), குரு, சேலா (சீடர்), பாவ்படுத்தி (குருவுக்குச் செய்யும் மரியாதை), தந்தா (பாலியல் தொழில்), அமாம் (திருநங்கைகள் நடத்தும் குளியலறை) எனத் திருநங்கைகளின் சமூகக் கட்டமைப்பு மற்றும் சம்பிரதாயங்களினூடாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நமக்குப் புதியவை!

www.olx.in
அனைத்தும் இங்கே கிடைக்கும்!

விகடன் வரவேற்பறை

பத்திரிகைகளில் வரும் வரி விளம்பரங்களின் வெப்சைட் வடிவம். இந்தியா முழுக்க எந்த மாநிலத்திலும் வீடு விற்க-வாங்குவது என்பதில் தொடங்கி, கார் பார்க்கிங்குக்கான இட வசதிகுறித்த அறிவிப்புகள், வீட்டில் இருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் 'பேபி சிட்டர் சர்வீஸ்’ என அ முதல் ஃ வரையிலான தேவை - சேவைகளுக்கு இங்கு க்ளிக்கலாம். எளிமையான தேடல், விற்பனையாளருடன் நேரடித் தொடர்பு என எளிமையான மாடலில் தளம் இயங்குவது பயன்பாட்டினை அதிகரிக்கிறது!

www.calibertrust.blogspot.in
உன்னால் முடியும் தோழா!

விகடன் வரவேற்பறை

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென இயங்கும் 'கேலிபர்’ அமைப்பின் வலைப்பூ! தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்து, சுய மரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்களின் உற்சாகப் புகைப்படங்கள், மாற்றுத் திறனாளிகள் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் செய்தித் தொகுப்பு, சுய முன்னேற்ற நிகழ்ச்சி அறிவிப்புகள் என முழுக்கவே மாற்றுத் திறனாளிகளுக்கு நன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கைத் தளம்!  

கலகலப்பு @ மசாலா கபே!
வெளியீடு: சரிகம விலை:

விகடன் வரவேற்பறை

60  

விகடன் வரவேற்பறை

க்ரிஷ், டாக்டர் பர்ன், மிலி நாயர் குரல்களில் 'ஏஞ்சலினா’ பாடல் காதலின் இன்ப அவஸ்தை சொல்லும் மெட்டு. அமிதாப் நாராயண் பாடிய 'இவளுங்க இம்சை’ இளைஞர்களிடையே ஹிட் அடிக்கும் வாய்ப்பு தூக்கல். 'மசாலா கபே’ பாடல் உற்சாக ஊர்வலம். தேவன் - பிரசாந்தினி யின் டூயட் 'உன்னைப் பற்றி’ காதலின் மென் மெலடி. 'திரும்பிப் பார்த்து’ பாடலில் கார்த்திக்கின் உணர்வு பொங்கும் குரலும் இசையின் தாளமும் போட்டி போட்டு ரசிக்கவைக்கின்றன!

விடுமுறை வேண்டி  இயக்கம்: சதீஷ்குமார் வெளியீடு: வைண்ட் மூவி மேக்கர்ஸ்

விகடன் வரவேற்பறை

மூன்று பள்ளி மாணவர்கள் மூன்று கத்திகள் வாங்குகிறார்கள். மதுவுக்கு அடிமையான தந்தையரைக் கொல்லவே அந்தக் கத்திகள். முதல் இருவர், குடிப் பழக்கத்துக்கு நடுவிலும் தங்கள் அப்பாக்களிடம் இருக்கும் நல்ல விஷயத்தை உணர்ந்து மனம் மாறுகிறார்கள். மூன்றா மவன், தன் அப்பாவைக் குத்திவிடுகிறான். அவரும் அவனை மன்னித்து விட, அப்பாக்களின் நிலையைச் சொல்லி, டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி முதல்வருக்கு மூவரும் கடிதம் எழுதுகிறார்கள். 'டாஸ்மாக் வருமானத்துல இலவசங்களைக் கொடுக்குறாங்களே... எல்லாரும் குடிச்சுச் செத்த பிறகு, யாருக்கு என்ன கொடுப் பாங்க?’ என்பது போன்ற வசனங்கள் பொளேர்!