மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

ஈழத்து நாட்டார் பாடல்கள்  தொகுப்பு: ஈழவாணி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 18.
பக்கங்கள்: 248 விலை:

விகடன் வரவேற்பறை

180

விகடன் வரவேற்பறை

ழத் தமிழ் மக்களிடையே தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்பட்ட நாட்டார் பாடல்களின் தொகுப்பு இது.'மலையக நாட்டார் பாடல்கள்’ இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் உழைப்பதற்காக இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழக அடித்தளச் சாதி மக்களின் ஆதங்கங்களையும் துயரங்களையும் குறிப்பால் உணர்த்துகின்றன. 'ஆளுக் கட்டும் நம்ம சீமை/ அரிசி போடும் கண்டிச் சீமை/ சோறு போடும் கண்டிச் சீமை/ சொந்தமினு எண்ணாதீங்க’ என்ற வரிகள் தங்கள் பிழைப்புக்கான மண் தங்களுக்கான தாயகம் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன. பிரிட்டிஷார் மீதும் கங்காணிகள் மீதும் இருக்கும் அதே கோபம், சிங்களவர்கள் மீதும் இருப்பதற்கு 'ஆப்பத்தைச் சுட்டு வச்சி / அது நடுவே மருந்து வச்சி / கோப்பி குடிக்கச் சொல்லி / குடுக்குறாளே சிங்களத்தி’ என்ற வரிகள் உதாரணம். தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளான பள்ளு, சிந்து போன்றவை ஈழத்துப் பாடல்களிலும் இருப்பது தொப்புள்கொடி தொடர்பை உணர்த்துகின்றன.

www.vangoghgallery.com  வான்கா இருக்கிறார்!

விகடன் வரவேற்பறை

வியர் வான்காவின் படைப்புகள் நிரம்பிய தளம். ஓவியர் என்று ஒரே சொல்லில் அடக்க முடியாத படைப்பாளியாக வான்கா மிளிர்ந்ததை உணர்த்துகின்றன அவரது ஒவ்வொரு படைப்பும். இறக்கும் வரை தனது ஒரே ஓர் ஓவியத்தை மட்டுமே சொற்ப விலைக்கு விற்ற வான்கா, ஆயுள் முழுக்கவே ஒருவித மனப் பதற்றத்திலேயே வாழ்ந்திருக்கிறார். இறுதி நாட்களில் தன் காதைத் தானே அறுத்துக்கொள்ளும் அளவுக்கு அந்தப் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. ஒவ்வோர் ஓவியத்திலும் வான்கா நிறங்களை வைத்து விளையாடிய லாகவம் பிரமிப்பூட்டுகிறது.  

http://jselvaraj.blogspot.in/ மரம் வெட்டுவோம்!

விகடன் வரவேற்பறை

ரசியல், சுற்றுச்சூழல், சினிமா, இலக்கியம் எனக் கலவையாக, ரசனையாக எழுதும் மானிடனின் வலைதளம். 'மரம் நடுவோம்’ என அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர் 'மரங்களை வெட்டுங்கள்’ என்று கருவேல மரங்களின் அபாயங்களைப் பட்டியல் இடுகிறார். செங்கொன்றை மலரின் சிறப்பு, வேடந்தாங்கலில் ஒரு நாள், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அவசியம்தானா எனச் சுற்றுச்சூழல் கட்டுரைகள் அனைத்தும் அக்கறையுடன் எழுதப்பட்டு உள்ளன.

பிழை யாருடையது?  இயக்கம்: சத்திஷ் குமார்.பி  வெளியீடு: சாந்தி கிரியேஷன்ஸ்

விகடன் வரவேற்பறை

போலீஸ் பிடியில் சிக்கும் கில்லாடித் திருடன் ஒருவனை, கறிக்கடை ஸ்லேட்டில் 'நான் இனி திருட மாட்டேன்’ என்று எழுதிப் பிடிக்கச் சொல்கிறார்கள் இரண்டு கான்ஸ்டபிள்கள். சிறு வயதில் குடிகாரத் தந்தையிடம் ஸ்லேட் கேட்டு அடிவாங்கியதும் ஓட்டை ஸ்லேட்டில் எழுதிப் படித்ததும் படிக்க ஆசை இருந்தும் தப்பான தகப்பனால் திருடனாக மாறியதும் நினைவுக்கு வருகிறது. 'எதை எதையோ இலவசமாத் தர்றீங்க... கல்வியை இலவசமாத் தாங்க...’ என்ற கோரிக்கையோடு படம் முடிகிறது. திருடனாக மாறுவதற்கு குடும்பச் சூழலும் கல்வி முறையும் எப்படிக் காரணிகளாக அமைகின்றன என்பதைச் சுருக்கமாக மனதில் பதியும்படி சொல்லி இருக்கிறார்கள்.

பில்லா II இசை: யுவன்ஷங்கர் ராஜா வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:  

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

'டானுக்கெல்லாம் டான் இந்த பில்லாதான்’ என அதிரடிக்கும் பாடலில் 'கேங்ஸ்டர்-மான்ஸ்டர்-சரண்டர்’ போன்ற வார்த்தை விளையாட்டுகளைத் தாண்டி ஈர்க்கிறது செம ஸ்டைலிஷ் யுவன் இசை. 'ஏதோ மயக்கம்...’ பாடலின் 'கடவுளின் பிழையா... படைத்தவன் கொடையா... கேள்வியிலா விடையா’ என நா.முத்துக் குமாரின் பில்டப் வரிகளுக்கு யுவன், தன்விஷா, சுவி சுரேஷ் குரல்கள் மசாலா சேர்க்கின்றன. தவில் நாகஸ்வரத்துடன் எலெக்ட்ரிக் கிதாரும் சேர்ந்து உதறல் உருமியடிக்கும் 'மதுரைப் பொண்ணு...’ பாடலில் ஆன்ட்ரியாவின் குரல் கலக்கல் காக்டெயில். 'எரிக்காமல் தேனடை கிடைக்காது.... உதைக்காமல் பந்து எழும்பாது!’ என்றெல்லாம் உத்வேகப்படுத்தி அஜீத்தை பழிவாங்கச் சொல்கிறது 'உனக்குள்ளே மிருகம்...’ பாட்டு. பில்லா 1-ன் ஹிட் பீட்டுக்கு ஹாலிவுட் ஆக்ஷன் கோட்டிங் கொடுத்திருக்கும் 'பில்லா மிமி’ தீம் மியூஸிக்... செம செம!