
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குமாறு 5 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தம் உள்ள 38 இடங்களில், 30 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் ஈழத்தில் தமிழர்களை, தமிழர்களே ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் தேர்ந்து எடுக்கப்பட்டார். விரைவில் அவரும், அவரது தலைமையிலான அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். அவர்கள் தமிழர்கள் சுதந்திரமாக வாழ தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களும் வடக்கு பகுதியில் ஏற்படப் போகும் மாற்றங்களை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
##~~## |