
நியூயார்க்: இலங்கையில் நடைபெற்ற இனப் போரின் இறுதி நாட்களில் ஐ.நா சபை செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வில் நடைபெற்று வரும் 68வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. அமைப்பின் தலைவர் பான் கி-மூன் கலந்து கொண்டு பேசும்போது, ''2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி போரின் போது, ஐ.நா. சபையின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து விட்டது.
##~~## |
மேலும், இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைப்புக்கு, அதன் உறுப்பு நாடுகள் உதவியளிக்கவில்லை'' என குற்றம் சாட்டியுள்ளார்.