
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை பிறப்பித்து, மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர், மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 10 ஆம் ஆண்டு வீரவழிபாடு தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரத்தில் நாளை (26 ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (25 ஆம் தேதி) முதல் வருகிற 27 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
##~~## |
எனவே, மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கூட்டமாக நின்று பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.