உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்
##~##

பூட்டிக்கிடந்த இரும்புக் கதவு திறக்கப் பட்டு, ஆ.ராசா ஜாமீனில் வெளியே வந்து விட்டார். ஜாமீனில் தளர்வு பெற்று விரைவில் தமிழகம் செல்வார் என்றாலும், அவர் இன்னமும் சிக்கலில்தான் இருக்கிறார். 

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி ஜாமீனில் வெளிவர முடியாமல், 15 மாதங்கள் சிறையில் இருந்த வரலாறு ஆ.ராசாவுக்கு மட்டும்தான் உண்டு. ஸ்வான் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில், ஸ்பெக்ட்ரம் மற்றும் தொலைத்தொடர்பு உரிமங்கள் கிடைக்க, அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவி புரிந்தார் என்பதுதான் சி.பி.ஐ. சொல்லும் குற்றச்சாட்டு. இந்த இரண்டு நிறுவனங்களும் தாங்கள் வாங்கிய உரிமங்களை, அமோகமான விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தன. விதிமுறைகளைத் தளர்த்தி முறைகேடுகளுக்கு வழிவகை செய்யப்பட்ட வகையில், சுமார்

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

28 ஆயிரம் கோடி அரசாங்கத்துக்கு நஷ்டம் என்று சி.பி.ஐ. சொன்னது.

இந்த முறைகேட்டுக்கு முழுக்காரணம் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதனால், அவர் பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி சி.பி.ஐ-யால் ஆ.ராசா கைது செய்யப் பட்டார். அவரைத் தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டனர்.

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

இந்த வழக்கில் சிக்கி சிறையில் இருந்த கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட பலருக்கும் வரிசையாக ஜாமீன் கிடைத்தாலும் ஆ.ராசாவின் செயலாளராக இருந்த ஆர்.கே. சந்தோலியா, தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹூரா ஆகிய இருவருக்கு மட்டும் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இந்த மூவர் மீதும் கூடுதலாக சில பிரிவுகளின்  கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து இருந்தது. அதனால், இவர்களை ஜாமீனில் விடுவதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, கறார் காட்டினார். அதிகாரிகள் இருவரும் உச்ச நீதிமன்றம் வரை சென்றுதான் ஜாமீன் பெற முடிந்தது.

இவர்களுக்கு ஜாமீன் கிடைத்த மறு நாளே, தனது மனுவை ஆ.ராசா தாக்கல் செய்தார். அந்த மனு மீது நடந்த விசாரணையை அடுத்து 15-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, அன்று தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. மற்ற குற்றவாளிகள் ஜாமீன் கிடைப்பதற்கு பல

மாதங்கள் போராடினார்கள். ஆனால், ஆ.ராசா மனுப் போட்ட ஏழே நாட்களில் ஜாமீன் கிடைத்து இருக்கிறது.

இதற்கு, ஆ.ராசாவின் வழக்கறிஞர்கள் குழுதான் முக்கியக் காரணம். ரமேஷ் குப்தா, பாலாஜி சுப்பிரமணியன், மனு சர்மா ஆகியோர் வைத்த வாதங்கள்தான் ஆ.ராசாவை வெளியில் கொண்டு வந்தது என்கிறார்கள். ''சாட்சியங்களைக் கலைக்க ஆ.ராசா, இப்போது அமைச்சர் பதவியில் இல்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் எல்லாம் ஆவணங்களாக இருக்கின்றன. அது நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருப்பவை. ஆ.ராசா இந்தச் சமூகத்தின் முக்கிய நபராகக் கருதப்படுபவர் என்பதால், ஓடிப்போகக் கூடியவர் அல்ல. ஜாமீனில் போகும்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவார்'' என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட நீதிபதி, ''ஜாமீனில் செல்வது ஒருவரின் உரிமைதான். ஆனால், சில சமயம் சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலை, சென்டிமென்ட் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்த உரிமை மறுக்கப்படுவது வழக்கம். அதே சமயத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, ஒருவரை உள்ளே வைத்திருப்பதும் அரசாங்கத்துக்கு வீண் செலவு. கடந்த ஒரு வருடமாக ஆ.ராசா எந்த சாட்சியத்தையும் கலைத்ததாகப் புகார் எதுவும் இல்லை. இந்த வழக்கின் முக்கியச் சாட்சியங்கள் எல்லாம் ஆவணங்களாக நீதிமன்றத்தில் பாதுகாப்பாக இருப்பதால், இவரை உள்ளே வைத்து இருப்பதில் எந்தப் பயனும் இல்லை'' என்று சொன்னார்.

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

ஜாமீன்மனு மீதான தீர்ப்பு வெளியான தினத்தில் இந்தியா கேட் பகுதியிலும், நீதிமன்ற வாயிலும்

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது. பெரிய பெரிய கொடிகளை ஏந்தி நீதிமன்ற வாசலில், ராசா ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர். ஊட்டி, பெரம்பலூர் தொகுதிவாசிகள் டெல்லியில் திரண்டதைப் பார்த்தபோது, 'ஜாமீன் கிடைப்பது நிச்சயம்’ என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். நீதிபதி ஓ.பி.சைனி, ''பெயில் கிராண்டட்'' என்று சொன்னவுடன் அவரது ஆதரவாளர்களும் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில், 'நன்றி... நன்றி’ என்று சொல்லி கண்ணீர் மல்கினர். ஆ.ராசா கையைத் தூக்கி நீதிபதியிடம் மிகப்பெரிய கும்பிடு போட்டார். முதன் முறையாக ஆ.ராசாவின் மனைவியும் கேமரா முன்பு பேசினார். இந்தக் காட்சிகளுக்கு பிறகு, ராசா நேரடியாக லாக்-அப் அறைக்குச் சென்று விட்டார். இந்தச் செய்தி கேட்டு நாடாளுமன்றத்தில் இருந்த தி.மு.க. எம்.பி-க்கள் ஒவ்வொருவராக ஓடி வந்தனர். திருச்சி சிவாவும் ஆதிசங்கரும் பிணையத் தொகை தயார்படுத்தினர். ராசா வின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வாயில் முன், கோஷங்களை போட்டதோடு, லட்டுகளை வாரி வழங்கி மற்றவர்கள் வாயிலும் திணித்தார்கள்.

கனிமொழியை வரவேற்றது போன்று ராசாவை வரவேற்க தி.மு.க. எம்.பி-க்கள் அனுமதி கேட்டனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, ஒரே ஒரு எம்.பி. காருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. டி.ஆர். பாலு மட்டும் சென்றார். ஆனால், அவருக்கு டிரைவர் கிடைக்காமல் போகவே, கனிமொழியின் காரில் போய் ஆ.ராசாவை வரவேற்று அழைத்து வந்தார். தி.மு.க. எம்.பி-க்கள் சார்பில் ஒரு சால்வையும், மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு சால்வையும் ஜெயிலில் அணிவித்தார் பாலு. வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனிமாணிக்கம் ஆகியோர் வரவில்லை. தயாநிதி மாறன் அடக்கமாக வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார். ஸ்டாலின் சார்பில் ஏராளமான வாழ்த்துகள் வந்தாலும் ராசா, அழகிரி - கனிமொழியின் கோஷ்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அன்று இரவு ஆதர வாளர்களுக்கு ஆ.ராசா டின்னர் ஏற்பாடு செய்தார். இந்த டின்னரைப் படம் எடுக்க மீடியாக்கள் முட்டி மோதி, பெரிய களேபரமே நடந்து முடிந்தது.

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

கிட்டத்தட்ட 15 மாதங்கள் ராசா சிறையில் இருந் துள்ளார். இதுவரை 41 சாட்சிகளிடம் விசாரணையை நடத்தி, சுமார் 1,600 பக்கங்களைப் பதிவு செய்துள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி. இன்னும் 40-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்ய இருக்கிறது. அதிலும் முக்கிய சாட்சிகளான நிதித்துறை முன்னாள் செயலாளர் சுப்பாராவ் (ரிசர்வ் வங்கி ஆளுநர்), தொலைத் தொடர்புத் துறை துணை இயக்குநர் ஜெனரல் ஏ.கே.ஸ்ரீவத்சவா, நீரா ராடியா, அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி போன்றவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு சில சாட்சியங்களை நிறுத்தலாம்.

ஆ.ராசா மீது அடுத்த அட்டாக்

ராசாவுக்கு ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடு பவர்கள், சி.பி.ஐ. புதிதாக முன்வைத்த ஒரு விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

'இரண்டு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, கட்-ஆஃப் தேதியை மாற்றினார். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதிலும் தில்லுமுல்லு செய்தார். தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தார்’ என்று நேரடியாகவே சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. இப்போது புதிதாக, யுனிடெக் நிறுவனத்தின் 250 கோடி விவகாரத்தை சுட்டிக் காட்டியுள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கைமாறிய நேரத்தில் இந்தத் தொகையை யுனிடெக் நிறுவனம் அயர்லாந்து மற்றும் பிரிட்டனுக்கு நடுவில் இருக்கும் ஒரு தீவுக்கு டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது. இந்த பணப் பரிமாற்றம் ராசாவுக்காக நடந்திருக்கலாம் என்பதைச் சொல்லி, ராசாவின் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதை நீதிபதி ஓ.பி.சைனி ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் குறிப்பிடவும் தவறவில்லை.

இந்த விவகாரம் குறித்து, வெளி நாடுகளுக்கு சென்று விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அனுமதி பெற்றுள் ளதாகச் சொல்லப்படுவதால், ஜாமீனில் இருந்தாலும் ராசாவின் மீது நீதிமன்றப் பிடி இறுகத்தான் செய்கிறது.

- சரோஜ் கண்பத்    

படங்கள்: முகேஷ் அகர்வால், சுபாஷ் பரோலியா 

சிறை அதிகாரி நேர்மையானவர்!

கடந்த 8.4.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், மதுரை சிறை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து, மதுரை ஜெயிலர் தமிழ்ச்செல்வன் தரப்பில் அவரது வழக்கறிஞர் கே.மணிகண்டன் எழுதி இருக்கும் கடிதத்தில், 'ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மீது குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவர் மீதான பழைய புகார் ஒன்றைக் குறிப்பிட்டு உள்ளீர்கள். அதில் அவர் நிரபராதி என்று விடுதலை பெற்றுவிட்டார். எனது கட்சிக்காரர் நேர்மையான, திறமையான நிர்வாகி என்று பெயர் எடுத்தவர்’ என்று தெரிவித்து இருக்கிறார். அந்தச் செய்தியை வெளியிட்டதில் நமக்கு  உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.