என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ஆடாம ஜெயிச்சோமடா!

##~##

''ஜனாதிபதி பதவிக்கு ஆளாளுக்கு முண்டா தட்டுகிறார்களே... எந்த நம்பிக்கை யில் அவர்கள் எல்லாம் களம் இறங்குகிறார்கள்?''

''தங்களிடம் பாஸ்போர்ட் இருக்கிறது என்ற நம்பிக்கையில்.''

- கி.ரோஜா, தேனி.

''அதிர்ஷ்டம் வாசக் கதவைத் தட்டுவதற்கும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?''

''புதுக்கோட்டையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் விலகி நிற்க... ஆளும் கட்சி எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் 'கேப்டன்’ விஜயகாந்த் அள்ளவிருப்பது 'வாசக் கதவு’ அதிர்ஷ்டம்!  

ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று ஐ.பி.எல். அணிகளின் அதிர்ச்சித் தோல்வி காரணமாக, அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும் கேப்டன் டோனியின் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது!''

- எம்.மாரியப்பன், புலிவலம்.

''சமீபத்தில் நீங்கள் 'லைக்’ செய்தது எதை?''

''ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஸக்கர்பெர்க் 'மேரீட் பிரிசில்லா சான்’ என்று அப்டேட் செய்த ஸ்டேட்டஸை! (10 நொடிகளுக்கு ஒரு முறை நூற்றுக்கணக்கில் லைக்குகள் வாங்கி, 10 லட்சம் லைக்குகளைத் தாண்டி எகிறிக்கொண்டு இருக்கிறது அந்த ஸ்டேட்டஸ்!)''

- அன்பு மாதவன், திருப்பூர்.

''சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்தப் பாட்டை டெடிகேட் செய்வீர்கள்?''

'' 'ஆடாம ஜெயிச்சோமடா...
ஓடாம ரன்னெடுத்தோம்...
சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்!’ ''

நானே கேள்வி... நானே பதில்!

- பா.மஹதி, பட்டுக்கோட்டை.

''ஜாக்கிசான், ஆக்ஷன் படங்களில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறாரே?''

''ஜாக்கிக்கு இப்போது வயது 59. கடினமான ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்ததால், அவர் உடலில் உடையாத எலும்பு களை எண்ணிவிடலாம். இதனா லேயே அவருக்கு எந்தக் காப்பீட்டு நிறுவனமும் இன்ஷூரன்ஸ் கொடுக்க முன்வரவில்லை. ஓய்வு அறிவிப்பின்போது, ஜாக்கிசான் சொன்ன வார்த்தைகள் முக்கிய மானவை. 'இப்போது உலகம் வன்முறைக் களமாக மாறிவிட்டது. உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்காது. அதனால்தான் என் படங்களில் சண்டைக் காட்சிகளைக்கூட நகைச்சுவையாக வைத்திருப்பேன்.’ எவ்வளவு உன்னதமான எண்ணம். மிஸ் யூ ஜாக்கி!''  

- எஸ்.ராஜன், நாகர்கோவில்.

''ப.சிதம்பரம்..?''

''தனக்கு ஞாபக மறதி அதிகம் என்று முன்னர் ஒரு முறைஞாபகத் துடனேயோ, ஞாபக மறதியாகவோ கூறியவர், தற்சமயம் 'நான் ஒரு நேர்மையாளன்’ என்று மறதியா கவோ, மறக்காமலோ அதை ஞாபகப்படுத்திவிட்டார்!''

- சு.கவிபாலா, அறந்தாங்கி.

''புதுக்கோட்டை இடைத் தேர்தலை தி.மு.க. புறக்கணித்தது குறித்து?''

''இடைத் தேர்தலில் தமிழ்நாட் டில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்கிற பகுத்தறிவு கருணாநிதிக்கும் உண்டு. தான் கட்டிய புதுக்கோட் டையான தலைமைச் செயலக மும் தற்போது புதுக்கோட்டையும் தனக்கு இல்லை என்று புரிந்து வைத்திருக்கிறார்!''

- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

'' 'நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று நீங்கள் கலங்கிய சம்பவம்...''

''விழுப்புரம் மாவட்டத்தில் ஜீவிதா பேகம் என்பவருக்கும் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஆதி லட்சுமி என்பவருக்கும் அடிக்கடி தகராறு வரும். காரணம், ஜீவிதா வீட்டுக் கோழி அவ்வப்போது ஆதிலட்சுமியின் வீட்டுக் கூரையில் ஏறிவிடுமாம். இந்தத் தகராறு காரணமாக முன்விரோதம்.

சென்ற வாரத்தில் ஒருநாள், ஜீவிதா பேகமும் அவருடைய கணவரும் வெளியில் போன சமயத்தில், தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த, அவர்களுடைய ஒன்றரை வயதுக் குழந்தை முகம்மது திபேரை எடுத்து வந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார் ஆதிலட்சுமி. தாய்மை, கருணை, அன்பு போன்ற மதிப்பீடுகளில் இருந்து விலகி எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறோமா நாம்?''

- பெ.கருணாகரன், திருச்செங்கோடு.

''கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இந்நாள் முதல்வர் சதானந்த கவுடாவைக் 'கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத நம்பிக்கைத் துரோகி’ எனச் சாடியிருக்கிறாரே?''

''எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்ணே. எல்லாருக்கும் ஓ.பன்னீர் செல்வம் மாதிரி கிடைப்பாங்களா அண்ணே!''

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

''கூடங்குளம் மின்சாரத்தில் 500 மெகா வாட் கேரளாவுக்கு வேண்டும் என்கிறாரே உம்மன் சாண்டி?''

''கேரளத்தில் ஒரு புதிய அணு உலை ஆரம்பித்து, அதில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் கேரளத் தவர்களே வைத்துக்கொள்ளலாம் என்று யாரும் கூற மாட்டார்கள் என்ற தைரியத் தில் அப்படிக் கேட்கிறார்!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''ஓர் அரசியல் கட்சி, இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்கும் பொதுத் தேர்தலைத் தவிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?''

''இடைத் தேர்தலைத் தவிர்ப்பது, அந்தக் கட்சிக்கு நன்மை பயக்கும். பொதுத் தேர்தலைத் தவிர்ப்பது, நாட்டுக்கு நன்மை பயக்கும்!''

- சிக்ஸ்முகம், ஈரோடு.

''காலத்துக்கு ஏற்ப யார் அப்டேட் ஆகியிருக் கிறார்கள்?''

''சாமியார்கள்தான். கமண்டலமும் புலித் தோலும் இருந்த சாமியார்களிடம் லேப் டாப்பும் டேப்லட்டும்.

சமீபத்தில் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்த தற்கான காரணங்களாக மதுரை ஆதீனம் சொன்னது இது, 'அவருக்கு ஆங்கிலப் புலமை இருக்கிறது. 10 ஆண்டுகளில் உலக நாடுகளுக்குச் சென்று பல கோடி சீடர் களை உருவாக்கியுள்ளார்.’ இதையே ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைப்பதற்கான தகுதிகளோடு ஒப்பிட் டுப் பாருங்கள், 'ஸ்போக்கன் இங்கிலீஷ் ஸ்கில்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ஸ்கில்ஸ்!’

- கி.மனோகரன், பொள்ளாச்சி.

நானே கேள்வி... நானே பதில்!