மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

80 ஆண்டு கால தமிழ் சினிமா 1931-2011 - முதல் பாகம்
சித்ரா லட்சுமணன்
வெளியீடு: காயத்ரி பிரின்ட்டர்ஸ், H3E, இரண்டாவது தளம், பாரதிதாசன் காலனி, சென்னை-78.  
பக்கம்: 550 விலை:

விகடன் வரவேற்பறை

500

விகடன் வரவேற்பறை

முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா’ காலம் முதல் எம்.ஜி.ஆர். முதல்வரானது வரையிலான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஆளுமைகளின் பங்களிப்பைப் பேசும் நூல். அப்போதே 'சந்திரலேகா’ பட விளம் பரத்துக்கு ஒதுக்கிய 25 லட்ச ரூபாய் பட்ஜெட், சினிமாவில் நடிப்பதற்கு முன் பணிப்பெண்ணாக இருந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி, அரசியல் வாய்ப்பு வந்தபோதும் புறக்கணித்த தியாகராஜ பாகவதர், 'மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன்’ என்ற பெயரே சுருங்கி எம்.ஆர்.ராதா ஆனது, வேறு மெட்டு போடச்சொன்ன எம்.ஜி.ஆரிடம் 'நீங்களே இசையமைத்துக் கொள் ளுங்கள்’ என்று தன் ஆர்மோனியப் பெட்டியை காரில் எம்.எஸ்.விஸ்வ நாதன் அனுப்பியது, டைட்டிலில் தொழில்நுட்பக் கலைஞர்களின் புகைப்படங்களை முதன்முதலில் 'மணமகள்’ படத்தில் கலைவாணர் இடம் பெறச் செய்தது போன்ற தகவல்களோடு அந்தக் காலப் படங்களின் போஸ்டர்களும் அரிய புகைப்படங்களும் நூலுக்கு சுவா ரஸ்யம் சேர்க்கின்றன. சினிமா ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத புத்தகம்.

அக்காலம் இக்காலம் இயக்கம்: ஏ.ஜெயராஜ்
வெளியீடு: நித்யஸ்ரீ கிரியேஷன்ஸ்

விகடன் வரவேற்பறை

சென்னையில் இருந்து சொந்தக் கிராமத்துக்கு தந்தையைப் பார்க்க வரும் ஹீரோ, வேலைவெட்டி இல்லாத நண்பனைச் சந்திக்கிறான். தரிசாகக் கிடக்கும் தங்கள் பூர்வீக நிலத்தை விற்கச் சொல்கிறார் அப்பா. ஆனால், சுற்றியுள்ள நிலங்கள் வீட்டுமனைகளாக்கி விற்கப்பட, விவசாயம் செய்ய முடிவெடுத்து, தரிசு நிலத்தில் கடுமையாக உழைக்கிறார் ஹீரோ. நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதைப் பார்த்து மனம் திருந்துகிறார் வேலை வெட்டி இல்லாத நண்பன். லாஜிக் இடித்தாலும் விவசாயத் தின் பெருமை பேசும் கருத்துக்காக வரவேற்கலாம்.    

மறுசுழற்சி செய்வோம்! www.recyclenow.com

விகடன் வரவேற்பறை

ணு குண்டுகளைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அபாயம் ஏற்படுத்தும் என்று உணரத் தொடங்கி இருக்கிறோம். எந்தெந்தப் பொருட்களை, எப்படி எல்லாம் மறு சுழற்சி செய்யலாம் என்று வழிகாட்டும் தளம். இங்கு இருக்கும் ரீ-சைக்ளோ மீட்டரில் நாம் மறுசுழற்சி செய்யும் பொருட்களைப் பட்டியலிட்டால், நாம் சேமித்த மின் சக்தியின் விவரம் சொல்கிறார்கள். ஒரு காலி பால் பாக்கெட்டின் மறுசுழற்சி இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு மின் விசிறியை இயக்கும் சக்தியை மீட்பதற்குச் சமமாம்.

வாழ்க்கை டிஜே  இசை: சார்லஸ் பாஸ்கோ-பென்னி தயாள்
வெளியீடு: ஈ.எம்.ஐ. மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

பிரபல பின்னணிப் பாடகர் பென்னி தயாள், தன் நண்பர்களோடு உருவாக்கி இருக்கும் தமிழ் இசை ஆல்பம். டிஸ்கோ பப் டிஜிட்டலாக அதிரடிக்கும் 'வா இங்கே...’ பாடலின் ஃபாஸ்ட் பீட்டுகள் குழந்தைகளையும் வசீகரிக்கும். 'கண்காட்சி...’ பாடலின் 'லைவ் வயர்’ அட்டகாச அலப்பறை.  கிறிஸ்டோஃபர் பிரதீப்பின் 'புது நிலவரமோ... கலவரமோ... அனுதினமோ...’ எனக் கவிதை வரிகள் கிடார் இசையோடு அழகாகப் பொருந்திப்போகிறது. ''ஓகே...ஓ... யே...!’ என்ற 'ரெகே’ வகைப் பாடலின் ராப் பகுதி செம கலக்கல். மெலோடிக்கு மரியாதையாக ஒலிக்கிறது 'சுவாசமும் நீயே...’ பாடல். குத்துப் பாடலாக ஒலிக்கும் 'ஊரென்ன பேரென்ன...’ பப்களில் ஒன்ஸ்மோர் ஹிட் அடிக்கும் சங்கதி. செம ஜில் ஜாலி ஆல்பம்.    

நினைவில் காடுள்ள... www.tparameshwari.blogspot.in

விகடன் வரவேற்பறை

ம.பொ.சி-யின் பேத்தியான கவிஞர் தி.பரமேசுவரியின் வலைப்பூ. ம.பொ.சி. பேசிய தமிழ்த் தேசியத்தின் கூறுகளை பரமேசுவரியின் கட்டுரைகளில் காண முடிகிறது. திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதம், 'நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் அடங்குவது இல்லை’ என்று மேற்கொள் கவிதை சொல்லி, பச்சையத்துடன் மனித மனம் கொண்டிருக்கும் தொடர்பு குறித்த கட்டுரை, மென் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் கவிதைகள் எனப் பல்சுவை சுவாரஸ்யம் அளிக்கும் வலைப்பூ.