மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

தென்னிந்தியச் சிறுகதைகள்  தொகுப்பு: கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலைபக்கம்: 432  விலை:

விகடன் வரவேற்பறை

300

விகடன் வரவேற்பறை

மிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்ற தொகுப்பு.  ஜே.பி.சாணக்யாவின் 'ஆண்களின் படித்துறை’ (தமிழ்), பெண் இழந்த காதலின் துயரத்தைச் சொல்லும் சந்திராவின் 'காட்டின் பெருங்கனவு’ (தமிழ்), செய்தித்தாளில் அஞ்சலி பக்கத்துக்குப் பொறுப்பான பெண் பத்திரிகையாளர் அன்னா அந்தப் பக்கத்திலேயே இடம்பெறும் கெ.ஆர்.மீராவின் 'செய்திகளின் நாற்றம்’ (மலையாளம்), பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிக்கும் டி.ஆர்.இந்திராவின் 'பலாத்காரம்’ (தெலுங்கு), ஊரே துக்கிரி என்று சொல்லி ஒதுக்கும் பெண்ணைப் பற்றிப் பேசும் விவேக் ஷேன்பேக்கின் 'காரணபூதம்’ (கன்னடம்) என நவரச உணர்வுகளைக் கொட்டும் கதைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம்!  

www.masusila.com  கம்யூனிசமும் கம்ப ராமாயணமும்!

விகடன் வரவேற்பறை

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய 'குற்றமும் தண்டனையும்’, 'அசடன்’ போன்ற மெகா நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவின் வலைப்பூ. ரஷ்ய நாவல்களை மொழிபெயர்த்தவரின் வலைதளத்தில், இமய மலை ஆன்மிகப் பயணம் வாசிக்கக் கிடைப்பது ஆச்சர்ய முரண். அண்ணா ஹஜாரேவின் டெல்லி ராம் லீலா உண்ணாவிரத அனுபவம், கம்யூனிசம், கம்ப ராமாயணம் எனப் பல்சுவை ரசனை அளிக்கும் வலைப்பூ!

எட்டாக்கனி  இயக்கம்: எம்.செந்தில்

விகடன் வரவேற்பறை

வேலைக்குச் செல்லாத குடிகார அப்பா, படிக்கும் கனவை நசுக்கிவிட்டு குப்பை பொறுக்கும் மகன். கோலி விளையாடும்போது சண்டையில் ஒருவனை அடித்து விடுகிறான். பசி பொறுக்காமல் பிச்சை சாப்பாட்டைச் சாப்பிடும்போது, இவனிடம் அடி வாங்கிய சிறுவன் தட்டைத் தட்டிவிடுகிறான். பிறகு, அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது நெகிழ்ச்சி க்ளைமாக்ஸ்! குழந்தைகளின் சூழலைப் பெற்றோரைவிட, மற்ற சிறுவர்கள் எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டு பரிவு காட்டுகிறார்கள் என்பதைப் பலமான பின்னணி இசையுடன் சொன்ன விதம் சுவாரஸ்யம்!

www.hungersite.com  க்ளிக்கினால் பசி தீரும்!

விகடன் வரவேற்பறை

ந்தத் தளத்தில் நீங்கள் தினமும் க்ளிக்கும் ஒவ்வொரு க்ளிக்கும் எங்கோ ஓர் ஏழைக் குழந்தையின் பசி போக்கும். தளத்தின் வருகையாளர்களுக்கு ஏற்பக் குவியும் விளம்பர வருவாய், பசி ஒழிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 1999-ல் இந்தத் தளம் துவக்கப் பட்டது முதல் இதுவரை 671 மில்லியன் குவளை உணவுகள் வறியவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. சராசரியாக 2,20,000 நபர்கள் க்ளிக்கும் இந்தத் தளத்தில் நீங்களும் மவுஸ் கோக்கலாமே!

அழகன் அழகி  இசை: கண்ணன்
வெளியீடு: சரிகம  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

விஜய் பிரகாஷின் குரலில் 'மழைத்துளியா... நீ...’ மெலோடி மனதைக் கிறங்கடிக்கிறது. 'வண்ணங்கள் ஏழல்ல எட்டாகும்... உன் இதழின் நிறமாகும்!’, 'குயில் சிறகு - வெயில் இரவு’ வரிகளில் கவனம் ஈர்க்கிறார் விவேகா. சின்னப்பொண்ணுவின் குரலில் ஒரு நாட்டுப்புறக் குரல் அல்ட்ரா மாடர்ன் அவதாரம் எடுப்பதைச் சொல்கிறது  'அடடா அழகாய்...’ பாடல்! 90-களின் லட்சுமிகாந்த் பியாரிலால் மெட்டில் அமைந்த 'எதுவரை வானம்...’ பாடலில் சுசித்ராவின் குரலில் மெட்டாலிக் உற்சாகம். ஊர்ப் புரணி பேசும் 'உசிலம்பட்டி...’ பாடல் செம பட்டிக்காட்டு பப்பர் மிட்டாய்.