மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

டாக்டர் இல்லாத இடத்தில்
டேவிட் வெர்னர்
வெளியீடு: அடையாளம், 1205/1. கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி-621310.
பக்கம்: 742  விலை:

விகடன் வரவேற்பறை

490

விகடன் வரவேற்பறை

மது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெற்ற நூல் தமிழில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வெளிவந்து இருக்கிறது.  மருத்துவரின் உதவி கிடைப்பதற்குச் சற்று முன்பு மிகக் கடுமையான நிலைகளில் என்ன செய்திட வேண்டும், மன நலப் பிரச்னைகள், வாழ்க்கைமுறை  மாற்றங் கள் உண்டாக்கும் நோய், குழந்தைகளின் பிரச்னைகள், ஆண்களுக்கான நோய்கள், மகளிர் நலம், சிறப்பு மருத்துவம் தேவைப்படும் தொற்று நோய்கள் என அனைத்துச் சிகிச்சை முறைகளும் முன்வைக்கப் படுகின்றன. உடலின் எந்தப் பாதிப்புக்குமான, அக்கறையான பதில் இதில் இருப் பதால் இது முக்கியமான புத்தகம்!

சிங்கள அரசின் தமிழ் இனக் கொலை
ஐ.நா-வின் மூவர் குழு அறிக்கை.
வெளியீடு: ம.தி.மு.க.

விகடன் வரவேற்பறை

2009-ல் இலங்கைப் போரில், சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சபையால் அமைக்கப்பட்ட மூவர் குழுவின் 196 பக்க அறிக்கைபற்றிய ஆவணப் படம். தோராயமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரத்தின் பின்னணியைப் பதற ¬வக்கும் படங்கள், வீடியோக்களுடன் விவரிக்கிறார் வைகோ. மயக்க மருந்து இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன்கள், புலிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட முறைகள் எனப் போர்க் காலச் சம்பவங் களை நேரடியாகக் காட்டி மனசாட்சியை உலுக்குகிறார்கள். பதறவைக்கும் பதிவு!

ஆன்லைன் ஆங்கில வாத்தியார்!
www.polishmywriting.com

விகடன் வரவேற்பறை

'ஆஸ் ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ - ஆங்கிலக் கடிதத்தைக்கூட தப்புத் தப்பாக டைப் செய்பவரா நீங்கள்... உங்கள் எழுத்தை மெருகேற்ற உதவுகிறது இந்தத் தளம். ஆங்கிலத்தில் நீங்கள் கம்போஸ் செய்த தகவல்களை இந்தத் தளத் தில் காப்பி செய்து 'செக் ரைட்டிங்’ பட்டன் தட்டினால், நொடிகளில் அதில் இருக்கும் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழைகளை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது. தவறுகளைச் சரி செய்துகொள்ளலாம். டியூஷன் ஃபீஸ் வாங்காத ஆன்லைன் வாத்தியார்!

சகுனி
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீடு: ஜெமினி ஆடியோ   விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

'மனசெல்லாம் மழையே...’ பாடலில் நா.முத்துக்குமாரின் தூறல் வரிகளுக்குக் குடை பிடித்து அழகு சேர்க்கிறது மெட்டு. 'வெள்ள பம்பரம்...’ செம காமெடி டூயட். வேல்முருகனின் குரலில் அதகளப்படுத்தும் 'போட்டது பத்தல...’ பாடலில் 'வேணா மச்சி சோறு... நீ சொல்லு ரெண்டு பீரு!’ எனக் 'குத்துவம்’ பேசுகிறது அண்ணாமலையின் வரிகள். 'அண்ணாச்சி அம்மாச்சி...’ பாடலின் பாடுபொருளான தேர்தல் கூத்துகள் ஈர்க்கின்றன. 'பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்ஸ்’ எனச் சென்னைக்கு விளக்கம் சொல்லி ஜாலி கபடி ஆடும் 'கந்தா காரவடை...’ பாடலில் 'இது வந்தார வாழவைக்கும் தமிழ்நாடுங்க... தமிழ்ப் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க...’ என அனல் சூடும் சேர்க்கிறது பரமு வின் வரிகள்!

http://maravalam.blogspot.in தோட்டக் கலை

விகடன் வரவேற்பறை

வீட்டுத் தோட்டப் பயிற்சி, மூலிகைச் செடி வகைகள் அறி முகம் என இயற்கை வளர்க்கும் வலைப்பூ. மாடித் தோட்டம், செங்குத்துத் தோட்டம், தொட் டித்  தோட்டம் என வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மூலிகைகளை எளிமை யாகப் பயிர் செய்யும் வழிமுறை கள் புகைப்படங்களுடன் விரி கிறது. வெட்டிவேரின் மகத்துவங்களைப் பல பதிவுகளில் விளக்கி, 'வெட்டிவேரைப் பிரபலப்படுத்துவதே என் நோக்கம்!’ என்கிறார் இப்பதிவுகளை விதைக்கும் வின்சென்ட். இயற்கை விவசாயம், மழைநீர் சேமிப்பு, மருத்துவச் செடிகள், அலங்காரச் செடிகள் என அக்கறை தொனிக்கும் எழுத்து கள்!