மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

உப்பு நாய்கள்
வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிகவளாகம், கருமண்டபம், திருச்சி-1.
பக்கங்கள்: 252  விலை:

விகடன் வரவேற்பறை

180

விகடன் வரவேற்பறை

சென்னை நகரத்தின் இருண்ட பகுதிகள் மீது வெளிச்சம் பாய்ச்சு கிறது, 2011-ம் ஆண்டுக்கான சுஜாதா விருது பெற்ற லஷ்மி சரவணகுமாரின் 'உப்பு நாய்கள்’ நாவல். விளிம்புநிலை மனிதர்களின் கண்ணீர், காமம், காதல், முரட்டுத்தனம் என்று அனைத்தும் நாவலின் வழி நம்மைத் தாக்குகின்றன.  ஹோட்டல்களில் விலைக்குக் கொடுக்க கறிக்காக நாய்களைத் தேடி அலையும் சம்பத், காசு வாங்கிக்கொண்டு திருட்டு வழக்கில் சிறைக்குச் செல்லும் செல்வி என்று ஒவ்வொரு பாத்திரமும் சராசரிகள் அறிந்திராத கடைக்கோடியினர். சென்னையின் அலங்கார விளக்குகளுக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் இடையே இவர்களின் வாழ்க்கை எத்தனை கொடூரமாக இருக்கிறது என்பதைச் சம்பவங்கள் மூலமும் விவரணைகள் வழியாகவும் காட்சிப்படுத்துகிறார் நாவலாசிரியர். ஆந்திரா வில் இருந்து கட்டட வேலை செய்ய சென்னைக்கு வரும் ஆதம்மாவின் கதை மனதுக்குள் நெடுங்காலத் துக்கு நிலைத்து நிற்கும்!

பெப்பே
இயக்கம்: முகுந்தன்  
வெளியீடு: ஷகி

விகடன் வரவேற்பறை

ஹோட்டல் வேலைக் குச் செல்லும் வழியில் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கும் மனிதர்களை ஏக்கமாகப் பார்த்தபடியே செல்கிறான் அவன். ஹோட்டலில் ஒருவர் செல்போனை டேபிளில் மறந்துவிட்டு கை கழுவச் செல்கிறார். அதை எடுத்துச் சென்று யாரும் இல்லாத இடத்தில் 'பே...பே...’ என்று விதவிதமாகப் பேசிப் பார்க்கிறான். அங்கே அவர் கை கழுவிவிட்டு மீண்டும் டேபிளுக்கு வர, அங்கே செல்போன் இருக்கிறது. வாய் பேச இயலாதவர்களின் ஏக்கத்தை, வலியை மூன்றே நிமிடங்களில் கச்சிதமாகப் பதிவுசெய்யும் கவனிக் கத்தக்க படைப்பு!  

காட்ஸில்லா Vs ஹாரி பாட்டர்    
www.answers.com

விகடன் வரவேற்பறை

ஸ்பிரிங் ஏர்சாஃப்ட் பிஸ்டல் மிகவும் கனமாக, ரீ-லோட் செய்வதற்குக் கஷ்டமாக இருக்குமா? இண்டோர் போட்டோ ஷூட் டுக்கு உதவும் லைட்டுகள் எவை எவை? அலுவலகப் பயன்பாட்டுக்கு வாங்கும் கணினியில் என்னென்ன சேவைகள் அவசி யம்? இப்படி உலகில் எதைப் பற்றிக் கேள்வி கேட்டாலும் அதற்குரிய பதில், அது தொடர்பான வீடியோ விளக்கங் கள் மற்றும் வெப்சைட்டுகளின் லிங்க்குகளைத் தரும் தளம். காட்ஸில்லாவுக்கும் ஹாரி பாட்டருக்கும் சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள் போன்ற கேள்விகளுக்கும் கலாய்க்கிற பதில் உண்டு!

கவிதையில் பெரியார்! www.madhumathi.com

விகடன் வரவேற்பறை

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும், எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றெல்லாம்  விரிவாகச் சொல்லித் தருகிறார்  மதுமதி. இவைத் தவிர கவிதைகள்,கட்டுரை கள், கவிதை நடையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, வசனக் கவிதை களாக திருக்குறள் என  சுவாரஸ்யப் பதிவுகள் இடுகிறார். அக்கறை தொனிக்கும் எழுத்துகள்!

ஆரோகணம்  இசை:கே வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

69

விகடன் வரவேற்பறை

யுத்தம் செய் 'கே’வின் கவன ஈர்ப்பு இசை. தாலாட்டுப் பாடலாக ஒலிக்கும் 'இந்த வான்வெளி விடியாதோ... எந்தன் தாய்மொழி விளங்காதோ...’ பாடல் ஜில்ஜில் தென்றல். வந்தனா ஸ்ரீனிவாசனின் 'தாய்’மொழியில், 'திசை அறியாது...’ பாடல், கஜல் சாயல் கஸாட்டா கவிதை. 'இந்த வான்வெளி... புல்லாங்குழல் வெர்ஷனும், 'ஐ வோன்ட் கிவ் அப்... ஒட் டு மதர்ஹுட்’ ஆகிய இரண்டு மியூஸிக்கல் பிட்களின் கிதார்-தபேலா காம்போ இசை கண்களைச் செருகவைக்கும் வல்லமை படைத்தவை!