வெளிநாட்டு வலைதளம் ஒன்று, தங்களுடைய ஆராய்ச்சிக்காக, ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1500 என்ற அளவில் சம்பளம் நிர்ணயம் செய்து, 22 வயது பெண் ஒருவரை, பாலுறவு வீடியோக்கள் பார்ப்பதற்கென்றே நியமித்துள்ளது.
பெட்பைபிள் (Bedbible) என்ற சட்டபூர்வமான பாலியல் தளம், ஆபாச வீடியோக்கள் துறை குறித்த ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சியில், செக்ஸ் பொசிஷன்ஸ், கால அளவு, ஆர்கஸ எண்ணிக்கை, ஆண் மற்றும் பெண் விகிதம் மற்றும் மொழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் மற்றும் தரவைச் சேகரிக்க வேண்டும். இப்பணிக்காக, ஸ்காட்லாந்து நாட்டின் கிரீனாக் என்ற பகுதியைச் சேர்ந்த ரெபேக்கா டிக்சன் என்ற 22 வயது பெண்ணை, அந்த வலைதளம் தேர்வு செய்துள்ளது.
ஆபாச வீடியோக்களைப் பார்த்து, அதில் இருந்து மேற்சொன்ன தகவல்களைத் தொகுப்பது இவருடைய முதன்மைப்பணி. இந்தப் பணிக்காக அந்தத் தளம், விண்ணப்பித்த 90,000 விண்ணப்பதாரர்களில் இருந்து, இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும், ஆபாச வீடியோக்களில் காணப்படும், பாலுறவில் உள்ள போக்குகள் மற்றும் புள்ளி விவரங்கள் பற்றிய ஆழமான அறிக்கையை ’பெட்பைபிள்’ தளத்துக்கான அந்தப் பெண் தொகுத்துத் தர வேண்டும். வீடியோக்களில் காணப்படும் நிற வேற்றுமை, மொழி வேற்றுமை, ஃபெடிஷ்கள் மற்றும் ரோல் பிளேக்கள் போன்றவற்றின் குறிப்புகளையும் அவர் தொகுக்க வேண்டும்.

இந்த பணி வாய்ப்பு குறித்து பேசியுள்ள ரெபேக்கா, 'ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் எனக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. சிறந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நான் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் மிகவும் வெளிப்படையாக இருக்கும் நபர். இந்த வேலைக்கு நான் தகுதியானவள் என்று நம்புகிறேன்.
எனக்கேற்ற பணியாக இது இருக்கும். இது மிகவும் வித்தியாசமான முயற்சி. இந்தப் புதிய சவாலில் நான் சிறப்பாகச் செயல்படுவேன். களங்கத்தால் சூழப்பட்ட ஒரு விஷயத்தை ஆராய்வது எனக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. போர்ன் துறையில் பல புதிய பார்வைகளைத் திறக்கும் ஆய்வு இது’ என்று கூறியுள்ளார்.