மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

இனி விதைகளே பேராயுதம்  கோ.நம்மாழ்வார்
வெளியீடு: இயல்வாகை பதிப்பகம், 25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை-1.  பக்கம்: 96  விலை:

விகடன் வரவேற்பறை

60

விகடன் வரவேற்பறை

யற்கை உழவாண்மையின் கட்டாயத் தேவைபற்றி கூறும் புத்தகம். நம்மாழ்வாரின் சிந்தனைகள் எளிய தமிழில் மின்னுகின்றன. பூச்சிக்கொல்லிகள் சர்வசாதாரணமாக உபயோகப்படும் விதத்தில் மனிதர்களுக்கு நேரும் அபாயம், மரபு முறை வேளாண்மையை மறுக்கும் இன்றைய விவசாயிகள், பச்சைப் புரட்சியில் ஏற்படும் லாபங்கள் என எல்லாவற்றுக்கும் அருமையான பதில்கள் தருகிறார். இயற்கையை எப்படி நாம் குலைக்காமல் இருக்க வேண்டும், நன்மை தரும் பூச்சிகள் அழிவதால் ஏற்படும் சிக்கல்கள் எனத் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. உடன் உரையாடுவது போன்ற தொனி, புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கத் தோன்றுகிறது.

http://harryandcharlie.blogspot.in/    விரலைக் கடித்த சார்லி!

விகடன் வரவேற்பறை

'சார்லி பிட் மை ஃபிங்கர்’ என்று யூ-டியூபில் ஹிட் அடித்த வீடியோ தெரியும்தானே உங்களுக்கு? ஒரு குட்டிப் பையன், அவன் தம்பிப் பாப்பாவின் வாய்க்குள் தன் விரலை வைக்க, அவன் கடிக்கும் கடியில் 'ஆ... ஊ...’ என அலறுகிறான். கையை வெளியில் விட்டதும் வலி குறைந்து சிரிக்க... இப்போது அந்தத் தம்பிப் பாப்பா கேமராவைப் பார்த்துச் சிரிக்கிறான். வலையேற்றப்பட்ட தில் இருந்து இந்த 56 விநாடி வீடியோவை இதுவரை யூ-டியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 46.5 கோடி. அந்த வீடியோவை அப்லோட் செய்த அந்தக் குழந்தைகளின் அப்பா, தொடர்ந்து தன் பையன்களின் இயல்பான சேட்டைகளை யூ-டியூபில் ஏற்றிக்கொண்டே இருக்கிறார். தன் மகன்களில் 'செலிபிரட்டி’ அந்தஸ்து குறையாமல் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் இத் தளத்தில் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்!

https://privnote.com/  ஆன்லைன் ஓலை!

விகடன் வரவேற்பறை

நீங்கள் பகிர வேண்டிய செய்தியை இந்தத் தளத்தில் பதிந்தால், அதைப் பதிவு செய்துகொண்டு உங்களுக்கு ஒரு லிங்க் வழங்குவார்கள். நீங்கள் செய்தியைப் பகிர விரும்பும் நபர்களுக்கு அந்த லிங்க்கை இ மெயிலில் அனுப்பினால், அதை க்ளிக்கி அவர்கள் அந்த செய்தியை வாசிக்க முடியும். அவர்கள் அந்த லிங்க்கை க்ளிக்கியதுமே, சம்பந்தப்பட்டவர் அந்தச் செய்தியை வாசித்துவிட்டார் என்று உங்களுக்குத் தகவல் வரும். எளிய முறையில் உங்கள் செய்தியைப் பகிர்ந்துகொள்வதோடு, அதை அவர்கள் வாசித்த தகவலும் உங்களுக்கு வந்து சேர்வது... இதில் ஹைலைட்!

சிற்றிதழ்கள்  இயக்கம்: சுகன்  வெளியீடு: வெளிச்ச வெளி

விகடன் வரவேற்பறை

'எந்தச் சிற்றிதழும் படைப்பாளியின் விடுதலை கீதத்தோடுதான் புறப்படுகிறது!’ என்று சிற்றிதழ்களின் பெருமை பேசும் ஆவணப்படம். 'சிற்றிதழ் நடத்துவது காஸ்ட்லி தற்கொலைக்குச் சமம்’ என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறது. நவீன ஓவியங்கள், நவீன கவிதைகள், இசங்கள் பற்றிய கருத்துரைகள், லே-அவுட் முறைகள், அதை நடத்துவதில் இருக்கும் சிரமங்கள், வணிக இதழ்களின் நகல் போல வரும் 'போலச் செய்தல்’ சிற்றிதழ்கள், 30 ஆண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள், அவை தொடர்ந்து வராமல் திடீரென்று நின்றுவிடுவதற்கான காரணங்கள் எனப் பலவற்றையும் அலசுகிறது. சிற்றிதழ் ஆர்வலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு இது!

முகமூடி  இசை: கே  வெளியீடு: யூ டிவி  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

முகமூடியின் சிறப்பு கவன ஈர்ப்பு 'வாயமூடி’தான்! ஆலாப் ராஜுவின் வருடும் குரலில் 'வாயமூடி சும்மா இருடா...’ பாடல் வசீகரிக்கிறது. காதல் வயப்பட்டவனின் முக்காலத்தையும் முப்பரிமாணத்தில் செதுக்கி இருக்கிறார் மதன் கார்க்கி. 'கடிகாரம் தலைகீழாய் ஓடும்... இவன் வரலாறு எதுவென்று தேடும்... அடிவானில் பணியாது போகும்... இவன் கடிவாளம் அணியாத மேகம்!’ எனக் கடந்த காலத்தைப் பேசுவதும், 'பார்வை ஒன்றில் காதல் கொண்டா... எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?’ என வார்த்தைகளைக் கோர்த்தவிதமும் அழகு! 'குடி வாழ்த்து’ எழுதியும் பாடியும் அசத்தி இருக்கிறார் மிஷ்கின். 'மாயாவி...’ குணம் பேசும் பாடலில் இசையமைப்பாளர் கே வயலின் ராஜாங்கம் நடத்தி இருக்கிறார். ஒவ்வொரு தீம் மியூஸிக்கும் சுகம்!