மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை!

விகடன் வரவேற்பறை!

http://io9.com/
உலகம் முதல் பிரபஞ்சம் வரை....

விகடன் வரவேற்பறை!

'நாங்கள் வருங்காலத்தில் இருந்து வருகிறோம்’ என்ற கேப்ஷனுடன் வரவேற்கும் தளத்தின் ஒவ்வொரு தகவலும் ஆச்சர்யம். நியாண்டர்தால் மனிதன் 'ஹோமினிட்’ எனும் அந்நிய உயிரினத்துடன் பழகியதற்கான தடயங்கள் நவீன ஆப்பிரிக்கர்களின் ஜீனில் ஒளிந்திருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் ஒரு பெண்ணை அவளது செக்ஸியான அடையாளத்துடன்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள் எனச் செய்திக் கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள் அனைத்தும் ஆச்சர்யம்!  

http://shimarao.blogspot.in/
ஓ... மலேசியா!

விகடன் வரவேற்பறை!

நரசிம்மா என்ற மலேசியத் தமிழரின் வலைப்பூ. அழிவை நோக்கிச் செல்லும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகள், தமிழ்நாட்டைப் போலவே அங்கு பரவும் இலவச அரசியல், மலாய் பெண்களின் நட்பு, சீனக் கடைகளின் நடைமுறை, மலேசியத் தமிழர்களின் நடத்தை, சினிமா எனப் பல் துறைப் பதிவுகள் விரவிக் கிடக்கின்றன. எல்லாவற்றையும்தனித் தன்மையுடன் எழுதி இருப்பது இவரது சிறப்பு!

கும்கி  இசை: டி.இமான்
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை!

99

விகடன் வரவேற்பறை!

'மைனா’வில் குயில் இசை தந்த இமானின் செவியீர்ப்பு இசை. பென்னி தயாள், இமான் பாடிய 'எல்லா ஊரும்...’ யானைப் பாகன்களின் வாழ்க்கை யைப் பாடுகிறது. 'ஒண்ணும் புரியலை...’ பாடலை இமான் பாடி இருக்கும் விதம் அருமை. 'ஐயையோ ஆனந்தமே...’ ஹரிசரணின் குரலோடு தில்ரூபா வாத்தியக் கருவி இழைந்து குழைகிறது. ரஞ்சித் - ஸ்ரேயா கோஷல் குரல்களில் 'சொல்லிட்டாளே அவ காதல...’ பாடல் காதல் உற்சவம். 'உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிஷத்துல... இதயத்துல இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல...’ என யுகபாரதியின் எளிய வரிகளே காதலுக்கான கனம் சேர்க்கிறது. மகிழினி மணிமாறன் பாடிய 'சொய்... சொய்...’ பாடல் தாளம் போடவைக்கிறது. 'ஆரோமலே’ பாடிய அல்போன்ஸ் ஜோசப்பின் 'நீ எப்ப புள்ள...’ ஹைபிட்ச் கவிதை!

கங்கணம்  பெருமாள் முருகன்
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்,
1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621310. பக்கம்: 424  விலை:

விகடன் வரவேற்பறை!

195

விகடன் வரவேற்பறை!

ஓர் ஆணின் பாலியல் வேட்கை அவனையும் அவன் சார்ந்த குடும்பத்தையும் எப்படி எல்லாம் ஆட்கொண்டு சிக்கலுக்கு உள்ளாக்கும் என்பதைச் சொல்கிறது நாவல். கிராமத்து மனிதர்களின் கோபம், ஆற்றாமை, வஞ்சம், சூழ்ச்சி, சாதிய மனம், சாதிப் பெருமை பேசுவது, சாதியை மீறிய திருமணம் செய்ய அஞ்சும் மனம் என அனைத்தும் நுணுக்கமாகப் பதிவுசெய்யப்பட்டு இருக்கும் இந்த நாவலில், பாத்திரங்களின் ஊடாக வெளிப்படும் சாதிப் பெருமை மட்டும் சற்றே நெருடுகிறது. ராமன், குப்பன், அம்மாயி, பாட்டி, மாரிமுத்து என்று கதைமாந்தர்கள் மனதில் நிற்கிறார்கள். நாவலில் சம்பவங்கள் நடக்கும் இடங்களை விவரிக்கையில் காட்சிகள் நம் கண்முன்னே விரிவது பெருமாள் முருகனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி!

அதங்கோட்டாசான்
எழுத்து-ஆக்கம்:முனைவர் க.ரவீந்திரன்
வெளியீடு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

விகடன் வரவேற்பறை!

தொன்மைத் தமிழின் முதன்மைப் புலவராக விளங்கிய அதங்கோட்டாசான்குறித்த ஆவணப்படம் இது. குமரி மாவட்டம், விளவங்கோடு அருகில் உள்ள அதங்கோடு என்கிற ஊரில் பிறந்த அதங்கோட்டாசான்குறித்த குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவானதாக இருந்தாலும், மிகச் சிரமப்பட்டு தகவல்களைத் திரட்டி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். தொல்காப்பியம் எழுதி முடிக்கப்பட்ட பின்னர், அரங்கேற்றம் செய்யப்பட்ட அவையில் அதங்கோட்டாசானின் கேள்விகளுக்கு தொல்காப்பியர் விடை அளித்த பின்னரே தொல்காப்பியத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட வரலாற்றையும் சொல்கிறது படம். படத்தின் பின்னணியில் வர்ணனையாக வரும் தமிழ் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாம்!