ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

செங்கொடி நினைவாய் ஒன்று சேரும் அமைப்புகள்!

செங்கொடி நினைவாய் ஒன்று சேரும் அமைப்புகள்!

##~##

முத்துக்குமாரையும் செங் கொடியையும் மறக்க முடியுமா என்ன? தமிழ் ஈழ இனப் படுகொலைக் காலத்தில் தங்களது உயிர்களையே தந்தவர்கள். எனவே அவர்கள் உயிர் நீத்த நாட்கள் உணர்ச்சிபூர்வமாகக் கொண்டாடப் படுகின்றன. அந்த வரிசையில் ஆகஸ்ட் 28-ம் தேதி காஞ்சிபுரமே கனன்று நின்றது. 

காஞ்சி மக்கள் மன்றம் என்ற அமைப் பைச் சேர்ந்த செங்கொடி ஆகஸ்ட் 28- ம் தேதி தீக்குளித்து இறந்தார்.

தமிழ் ஈழ ஆதரவாளர்களால் செங் கொடியூர் என்று அழைக்கப்படும்  மங்கல பாடிக் கிராமத்தில் செங்கொடிக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அன்று காலையில் இருந்தே ஈழ உணர் வாளர்கள் திரள ஆரம்பித்தனர். முன்தினமே வந்து தங்கி இருந்தார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. காலை சரியாக 9 மணிக்கு வந்த ம.தி.மு.க. பொதுச் செய லாளர்

செங்கொடி நினைவாய் ஒன்று சேரும் அமைப்புகள்!

வைகோ,  செங்கொடியின் நினைவு அரங்கத்தில் விளக்கு ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியவர், ''செங்கொடியின் தியாகத்தை மறக்காமல் போராடுவோம். பூந்தமல்லி முகாமில் இருந்தபடி உண்ணாவிரம் இருக்கும் செந்தூரன் மற்றும் தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நால்வரின் உயிர்களைக் காப்பது ஒன்றே செங்கொடிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி'' என்று கூறினார். தமிழக வாழ்வுரிமை இயக்க நிறுவனர் தி. வேல்முருகன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக வன்னியரசு ஆகியோர் வந்திருந்தனர்.

செங்கொடிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டு இருக்க... அனைத்து இயக்கத் தலைவர்களும் காஞ்சி மக்கள் மன்ற அலுவலகத்தில் ரகசியக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்கள்.

'தமிழ் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்தாலும், அது மிகப் பெரிய மக்கள் எழுச்சியாக மாறாமல்போவதற்கு என்ன காரணம்?’ என்பதை அலசி ஆராயும் கூட்டமாக இது நடந்ததாகச் சொல்லப்படுகிறது. 'தமிழ் ஈழ ஆதரவு என்ற பெயரால் இயங்கும் அனைத்து இயக்கங்களும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக ஒரே அணியாக இயங்கினால்தான் இது சாத்தியம்’ என்று விவாதிக்கப்பட்டது.

'ஈழ விவகாரங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. அவர்களைப் பற்றியே பேசி நாம் நேரத்தை வீணடிக்கத் தேவை இல்லை’ என்றும்  பேசப்பட்டதாம்.

செங்கொடி நினைவாய் ஒன்று சேரும் அமைப்புகள்!

'ஒரே நோக்கம்... தெளிவான போராட்ட வடிவம்’ என்ற தீர்மானத்தை எட்டுவதற்கான முன்னேற்பாடாக அமைந்தது அந்தக் கலந்துரையாடல்.  செப்டம்பர் 9-ம் தேதி மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான கவன ஈர்ப்புப் பேரணி நடத்துவது என்றும், அதற்கு பழ.நெடுமாறன் தலைவராக இருக்கட்டும் என்றும் முடிவாம்.

செங்கொடி நினைவாய் ஒன்று சேரும் அமைப்புகள்!

கூட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கலந்து கொண்ட வன்னியரசுவிடம் கேட்டோம். ''தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட் டங்கள் தோல்வி அடைந்ததற்கு முழுக் காரணம் தலைவர்களுக்குள் இருந்த ஒற்றுமையின்மைதான். நிஐமான அக்கறைகொண்டவர்களை ஒருங் கிணைக்க இங்கு சரியான ஆட்கள் இல்லை. இனியாவது ஐயா நெடுமாறன் இதனைச் செய்ய வேண்டும். நெடுமாறன் அவர்களைத் தளபதியாகக்கொண்ட ஒரு வலுவான கூட்டமைப்பை உருவாக்குவதெனப் பேசப் பட்டது. அப்படி ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகுமானால், தமிழகத்தில் புத்தெழுச்சி ஏற்படும்'' என்றார்.  

தமிழகத்தில் மீண்டும் தமிழ் ஈழ  ஆதரவு அமைப்புகள் ஒரு களப் போராட்டத்துக்குத் தயாராகிவருவது தெரிகிறது!

-  எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.ஆனந்த ஜோதி