ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

24 ஸ்பெஷல்

24 அசோகர் பரப்பிய தர்மங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
24 அசோகர் பரப்பிய தர்மங்கள்

- சாமுண்டீஸ்வரி

24 ஆரங்கள்

அசோகச் சக்கரம் (Ashoka Chakra) அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். சாரநாத்தில் உள்ள, சிங்கத் தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் கி.மு.250-ல் புத்தர் போதித்த 24 தர்மங்களைக் குறிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடியின் மையப் பகுதியில் கடற்படை நீலத்தில் இடம்பெற்றுள்ளது. அசோகத் தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்தியக் குடியரசின் முத்திரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டின்

தேசியச் சின்னம், தேசியக்கொடி, முத்திரைகள், பணத்தாள், நாணயம் என எல்லாவற்றிலும் 24 ஆரங்கள் கொண்ட அசோகச் சக்கரம் இருக்கிறது

அசோகச் சக்கர விருதுதிலும் 24 ஆரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்திய படைத்துறையின் வீரர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது இது.

தேசியச் சின்னத்தின் முத்திரையை மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நோக்கங்களுக்காக மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரபூர்வமான முத்திரையாக இச்சின்னம் உள்ளது.

24 ஸ்பெஷல்

24 ஆப்ஸ்

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மொபைல் ஆப்ஸ் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் எவை சிறந்தவை? பல முன்னணி டெக் விமர்சகர்களால் நம் மொபைலில் இருக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்ட 24 ஆண்டிராய்டு ஆப்களின் பட்டியல் இதோ...

Whatsapp

Candy crush saga

Pinterest

Truecaller

Netflix

Subway surfers

PhonePe

Spotify

Skype

Zoom

Ludo king

Gmail

Youtube

Microsoft teams

Messenger

Zomato

Google maps

Disney hotstar

Arogya setu

Instagram

Twitter

Google Pay

Flipkart

Uber

24 வயசுல பெருமித விருது! - நடிகை பிரியாமணி

``2007-ல் வெளியான 'பருத்திவீரன்' படத்துக்காக எனக்குத் தேசிய விருது கிடைக்கப்போற தகவல் வந்தப்போ, நான் தூங்கிட்டி ருந்தேன். தொடர் வாழ்த்து மழையால, அடுத்த ரெண்டு நாள்கள் தூங்கவே முடியல. அதுலேருந்து ஜனா திபதிகிட்ட நான் தேசிய விருதை வாங்கிட்டு வீட்டுக்கு வரும்வரை எங்கப்பா அடைஞ்ச சந் தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்ல. `பருத்திவீரன்' வெற்றியும், தேசிய விருதும், சினிமா கரியர்ல என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினதோடு, பல மொழி சினிமாக்கள்லயும் நான் பிரபலமாகக் காரணமாவும் அமைஞ்சது. ஆசைப்பட்ட துறையில உருப்படியா ஏதாச்சும் சாதிச்சிருக்கோம்னு அந்த 24 வயசுல பெருமிதப்பட்டேன்!''

24 காரட் தங்கம்!

24 காரட் தங்கம் என்பது சுத்தத் தங்கம் என அழைக்கப்படுகிறது. தங்கம் காரட் என்ற அலகால் மதிப் பிடப்படுகிறது. தங்கத் திலுள்ள 24 பாகங்களும் வேறு எந்த உலோகங்களின் கலப்பும் இல்லாமல் இருப்பது. இது 99.9 சதவிகிதம் தூய்மையான, பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் நகை செய்ய முடியாது. தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் செய்யப் படுகின்றன. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவ சாதனங்களிலும் 24 காரட் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

91.6 KDM நகை என்பது தங்கத்தில் 24 பாகத்துக்கு 22 பாகம் மிகச்சரியாக 91.6 சதவிகிதம் வரும். இப்போது செம்பு கலப்பது இல்லை. கேட்மியம் (KDM) என்ற உலோகம் 8.4 சதவிகிதம் கலந்து நகை செய்யப்படுகிறது. செம்பு கலந்து செய்வதைவிட, இது தரமாகவும் உறுதியாகவும் இருப்பதால் இந்த முறையை இப்போது பின்பற்றுகின்றனர்.

24 மரக்கால்!

24 மரக்கால் கொண் டது ஒரு மூட்டை. எடை இல்லாத அளவைக் காலத்தில் நெல், அரிசி, கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம் எனத் தானியங்களை அளக்க மரக்கால் பயன்படுத்தப்பட்டது. 4 படி என்பது ஒரு மரக் காலாகும்.

12 மரக்கால் கொண்டது ஒரு கலம் என்றும், இரண்டு கலம் (24 மரக்கால்) ஒரு மூட்டை என்றும் அழைக்கப்பட்டது. பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய மரக்கால், தெய்வங்களோடு தொடர்புபடுத்தப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் மதிப்புக்குரிய கருவியாக மாறியது. அது இன்றும் கிராமங்களில் இருந்து வருகிறது.

24 ஸ்பெஷல்

24 அசோகர் பரப்பிய தர்மங்கள்

1. உயிர்களுக்கு இன்னா செய்யாமை.

2. சிக்கனம்.

3. பயபக்தி (பெரியோர்,ஆசிரியர்).

4. மானமுடைமை.

5. உற்சாகம்.

6. செய்நன்றி அறிதல்.

7. உள்ளத்தால் உண்மை, சொல்லால் உண்மை, செயலால் உண்மையைப் போற்றுதல்.

8. மாற்று மதக் கருத்துகளையும் மதித்தல்.

9. நல்லவனாயிருத்தல்.

10. புலனடக்கம்.

11. நன்மை தரும் செயல்களைச் செய்தல்.

12. கடின உழைப்பு.

13. உடல் நோய் தீர்த்தல்.

14. உடல் தூய்மை.

15. இரக்க குணம்.

16. வறியோர்க்கு வழங்கல்.

17. தர்மத்தைப் பரப்புதல்.

18. அறத்தின் வழிபெறும் வெற்றி.

19. அறம் செய்வதில் ஆர்வம்.

20. மாறாத அன்புள்ளம்.

21. பாவம் செய்வதில் அச்சம்.

22. தன்னம்பிக்கை.

23. எண்ணத்தூய்மை.

24. அருளுடைமை.

`24 மணி நேர’த்தில் மீண்டும் ஹிட் கூட்டணி! - நடிகை நளினி

‘நூறாவது நாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்தப் படத்துல வேலை செஞ்ச பலரும் இணைஞ்சு, அதே த்ரில்லர் ஜானர் சப்ஜெக்ட்ல 1984-ல் வெளி யான ‘24 மணி நேரம்’ படத்துலயும் வேலை செஞ்சோம். ரொம்ப ரிஸ்க் கான கதை. மாமனாரா நடிச்ச சத்யராஜ் சார்தான் வில்லன். அது தெரியாத மாதிரியே கதை நகர்ந்து, கடைசியில சஸ்பென்ஸ் உடையும்போது மொத்த குடும்பமும் அதிரும். அப்போ ரொம்ப பிஸியா வேலை செஞ்சுகிட்டிருந்ததால, தூக்கமில்லாம இரவு பகலா அஞ்சே நாள்கள்ல அந்தப் படத்துல நடிச்சுக் கொடுத்தேன். பூச்சிகள், மிருகங்களைப் பார்த்தாலே பயப்படுற நான், அப்போ த்ரில்லர் சப்ஜெக்ட் படங்கள் பலவற்றிலும் நடிச்சது எனக்கே நம்ப முடியாத ஆச்சர்யம்தான்!

24 மணி நேரத்தில் சாதனை சினிமா! - நடிகை ஊர்வசி

“24 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்தது 1999-ல் வெளியான ‘சுயம்வரம்’ திரைப்படம். சரியான திட்ட மிடலுடன், ரிகர்சல் ஏது மில்லாம, ஆன் த ஸ்பாட்ல கடகடனு ஷூட்டிங் நடந் துச்சு. டிஜிட்டல் தொழில் நுட்பம் வளராத காலத்துல அந்தப் படம் எடுக்கப்பட்டது பெரிய விஷயம். ஆளுக்கு ஒரு போர்ஷனா, பல இயக்குநர்கள் அந்தப் படத்தை எடுத்தாங்க. நானும் பாக்யராஜ் சாரும் சம்பந்தப்பட்ட போர்ஷனை கே.எஸ்.ரவிகுமார் சார் இயக்கினார். ஏவி.எம் ஸ்டூடியோவுல வெவ்வேறு இடங்கள்ல ஷூட்டிங் நடந்துச்சு. இன்டர்வியூ போர்ஷன்ல நடிச்சுட்டு, சில நடிகர்கள் உடனே டான்ஸ் ஆட போவாங்க. அதை முடிச்சு, உடனே அவங்கவங்க ஜோடியுடனான காட்சிகள்ல நடிச்சாங்க. பரபரப்புடன் ஷூட்டிங் நடந்தாலும், நகைச்சுவை படம்ங்கிறதால எல்லோரும் ஹியூமர் சென்ஸுடன் நடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்துச்சு. சில முன்னணி நடிகர்களை ஒரே படத்துல நடிக்க வைக்குறதே சவாலானது. ஆனா, அப்போ பீக்ல இருந்த நிறைய கலைஞர்கள் அந்தப் படத்துல இணைஞ்சு நடிச்சது, அதுக்கு முன்பும் பின்பும் நடக்காத பெரும் சாதனை!”