ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் 25... அவர்கள் 25

25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
25 வாசகிகளின் பார்வையில்... 25-ம் ஆண்டில் அவள் விகடன்

புதிய பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப் படுத்தும் அவள் விகடனின் `அவள் 25... அவர்கள் 25!' திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக் கின்றன

வருங்கால தொழில்முனைவோர்களே...

சுதந்திரமாகச் செயல்பட வேண்டும், பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும், புதிய பாதை வகுக்க வேண்டும்... இப்படித் தொழில்முனைவோர் ஆவதற்கான லட்சியத்துடன் இருக்கும் பெண்களின் கனவுகளுக்குச் சிறகு தரும் ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தை 3.1.2023 தேதியிட்ட அவள் விகடன் இதழில் வெளியிட்டிருந்தோம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டிய கடைசி நாள் 2023 ஜனவரி 31 என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

புதிய பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப் படுத்தும் அவள் விகடனின் `அவள் 25... அவர்கள் 25!' திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக் கின்றன. ஜனவரி 31-ம் தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, தொழில் முனைவோராக ஆர்வமுடன் இருக்கும் பெண்கள், உங்கள் விண்ணப்பங்களை விரைவாக எங்களுக்கு அனுப்புங்கள்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி

`அவள் 25... அவர்கள் 25!'

அவள் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: avalvikatan@vikatan.com