Published:Updated:

``தடம் பதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விருது” குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்!

இந்திய அரசு
News
இந்திய அரசு ( wikipedia )

கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம் எனப் பல துறைகளில் வெளிநாடுகளில் தடம் பதித்த இந்தியர்களை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுகிறது.

Published:Updated:

``தடம் பதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விருது” குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்!

கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம் எனப் பல துறைகளில் வெளிநாடுகளில் தடம் பதித்த இந்தியர்களை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்திய அரசு
News
இந்திய அரசு ( wikipedia )

இந்திய மண்ணில் பிறந்து வெளிநாடுகளில் தங்களது திறமைகள் மூலமாகச் சாதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் `பிரவாசி பாரதிய சம்மான் விருது’களை (Pravasi Bharatiya Samman Award) இந்திய அரசு வழங்கி வருகிறது.

கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம் எனப் பல துறைகளில் வெளிநாடுகளில் தடம் பதித்த இந்தியர்களை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 17வது பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளுக்கு 27 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

மத்தியப் பிரதேசம் இந்தூரில் ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பார்.

விருதாளர்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைவராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் துணைத் தலைவராகவும் பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருந்தனர்.

17வது பிரவாசி பாரதிய சம்மான் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  27 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பட்டியல்:

* அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில், ஜெகதீஷ் சென்னுபதி (ஆஸ்திரேலியா), அர்ச்சனா ஷர்மா (ஸ்விட்சர்லாந்து).

 * கல்வி பிரிவில் சஞ்சீவ் மெஹதா (பூட்டான்), மக்சூதா சர்ஃபி ஷியோதானி (ஜப்பான்), ராஜகோபால் (மெக்ஸிகோ).

* கலை கலாசாரம்/கல்வி பிரிவில் திலீப் லவுண்டோ (பிரேசில்), ஜோகிந்தர் சிங் நிஜ்ஜார் (குரோஷியா).

* மருத்துவப் பிரிவில் அலெக்ஸாண்டர் மாலியாக்கல் ஜான் (புருனே தருசலாம்).

மருத்துவம்
மருத்துவம்
NanoStockk

* சமூக நலன் பிரிவில், வைகுண்டம் ஐயர் லட்சுமணன் (கனடா), கண்ணன் அம்பலம் (எத்தியோப்பியா), பர்மானந்த் சுகுமல் தஸ்வானி (காங்கோ குடியரசு), மோகன்லால் ஹிரா (தென்னாப்பிரிக்கா), சிவகுமார் நடேசன் (இலங்கை), தேவன்சந்த்ரேபோஸ் ஷர்மான் (சுரிநாம்).

* தகவல் தொழில்நுட்ப பிரிவில், ராம்ஜி பிரசாத் (டென்மார்க்). 

* சமூக நலன்/மருத்துவம் பிரிவில், அமல் குமார் முகோபாத்யாய் (ஜெர்மனி).

* சமூக நலன்/அரசியல் பிரிவில், முகமது இர்ஃபான் அலி (கயானா).

* சமூக நலன்/கல்வி பிரிவில், ஃபிராங்க் ஆர்தர் சீபர்சாட் (டிரினிடாட் மற்றும்  டொபாகோ).

* வணிகம்/ சமூக நலன் பிரிவில், ரீனா வினோத் புஷ்கர்னா (இஸ்ரேல்), அமித் கைலாஷ் சந்திர லத் (போலந்து), சஞ்சய்குமார் சிவபாய் படேல் (தெற்கு சூடான்), சித்தார்த் பாலச்சந்திரன் (ஐக்கிய அரபு அமீரகம்), தர்ஷன் சிங் தலிவால் (அமெரிக்கா). 

* வணிகம் பிரிவில் பியூஷ் குப்தா (சிங்கப்பூர்), ராஜேஷ் சுப்ரமணியம் (அமெரிக்கா), அசோக் குமார் திவாரி (உஸ்பெகிஸ்தான்).

* ஊடகம் பிரிவில், சந்திரகாந்த் பாபுபாய் படேல் (இங்கிலாந்து). 

விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்!