ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாரா?''

ஜோயல் மீது புகார் சொல்லும் நடிகர்

##~##
''துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாரா?''

''துப்பாக்கியைக் காட்டி என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் ம.தி.மு.க-வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல்'' என்று, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்​துள்ளார் திரைப்பட நடிகர் ராஜா. 

என்ன விவகாரம்?

ராஜாவிடம் பேசினோம். ''ஆதித்யா என்ற புனைப்பெயரில் நான் தமிழ் சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். என்னுடைய முதல்படம் 'இன்னொருவன்’ என்ற பெயரில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வெளி​யானது. இப்போது, இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந் தமாகி இருக்கிறேன். சினிமாவில் நடிப்ப​துடன் வேறு பிசினஸ் செய்யவும் முடிவு செய்​தேன். என் நண்பன் அனீஷ்குமாருடன் சேர்ந்து சர்வீஸ் அபார்ட்மென்ட்களைக் கட்டி ஐ.டி. கம்பெனிகளுக்கு வாடகைக்கு

''துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாரா?''

விடத் திட்டம் போட்டோம். இதற்காக, அனீஷ்குமாரின் தந்தை நந்த குமாருக்குச் சொந்தமான கட்டடத்தைக் குத்தகைக்கு வாங்கினோம். இந்த பிசினஸில் 50 லட்ச ரூபாய் முதலீடு செய்தேன். மிகக்குறுகியக் காலத்திலேயே எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கியது.

இந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்தில், எனக்கு காலில் பலத்த காயம்பட்டது. நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டேன். என்னால் பிசி னஸில் கவனம் செலுத்த முடியவில்லை. இருப்பினும், பிசினஸுக்குத் தேவையான முதலீடுகளைச் சரியாகவே செய்து வந்தேன். ஆனால், அனீஷ்குமாரும் அவருடைய தந்தை நந்தகுமாரும் என்ன நினைத்தார்களோ?

''துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாரா?''

அவர்களின் நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டத் தொடங்கினர்.

திடீரென்று ஒருநாள், சர்வீஸ் அபார்ட்மென்ட் இருக்கும் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று நந்தகுமார் என்னிடம் அதிரடியாகச் சொன்னார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான், அவர்களுடன் எவ்வளவோ சமாதானம் பேசிப் பார்த்தேன். ஆனால், தங்கள் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, நான் நீதிமன்றத்தை நாடினேன். அங்கு எனக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதனால், என் மீது கடும் ஆத்திரம் அடைந்த அனீஷ்குமார், சர்வீஸ் அபார்ட்மென்ட்டைப் பூட்டி சாவியை தன் வசம் வைத்துக்கொண்டார். என்னை உள்ளே நுழைய விடவில்லை. மீண்டும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்​தேன். அதிலும் எனக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

இந்த நேரத்தில், 'ராஜாவுக்கும் சர்வீஸ் அபார்ட்​மென்ட்​டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, அவரை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று குறிப்பிட்டு எங்கள் வாடிக்கையாளர்கள் அனை​வருக்கும் அனீஷ்குமார் கடிதம் அனுப்பினார். இதையும் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றேன். அதிலும், எனக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இப்படி சட்டப்படியாக நான் அனைத்துப் பிரச் னைகளையும் முறியடித்துக்கொண்டு இருந்த நேரத்தில், அனீஷ்குமார் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

பேச்சுவார்த்தைக்கு போன இடத்தில், இந்தப் பிரச்னைக்கு சம்பந்தம் இல்லாத வழக்கறிஞர் ஒருவருடன், ம.தி.மு.க-வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரான ஜோயலும் இருந்தார். முதலில், சாதாரணமாக பேசியவர்கள், பிறகு கை நீட்டத் தொடங்கினர். 'இவன் முகம், கை, கால் எல்லாத்தையும் கீறித்தானே தூக்கிட்டு வரச் சொன்னேன். சேஃப்டியா தூக்கிட்டு வந்ததால​தான், இவ்வளவு திமிரா இருக்கான்’ என்று சொல்லிக்​கொண்டே ஜோயல்  என்னை அடித்தார்.

''துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாரா?''

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஜோயல், '35 லட்ச ரூபாய் மட்டும்தான் உனக்குத் தர முடியும். அதை வாங்கிட்டு, எல்லா கேஸையும் வாபஸ் வாங்கிட்டு எங்கேயாவது ஓடிப்போ. தேவை இல்லாம பிரச்னை செஞ்சா உன்னைக் காலி பண்ணிருவோம்’ என்று மிரட்டினார். வேறுவழி இல்​லாமல் அவர்கள் கேட்டபடி எழுதிக் கொடுத்தேன். ஆனால், என்னிடம் எழுதி வாங்கியபடி 35 லட்சம் ரூபாயைக்கூட எனக்குத் தரவில்லை. வெறும் 15 லட்சம் ரூபாய்க்கு மட்டும் ஒரு செக் கொடுத்தனர்.

அதுபற்றி கேட்டதற்கு, 'மீதி பணம் எல்லாம் உன்னை மிரட்டிய ரவுடிகளுக்குப் போய்விட்டது. வெறும் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய்க்கே உன்னைக் காலி செய்ய ஆட்கள் இருக்கும்போது, உனக்கு 15 லட்சம் ரூபாய் தருவதே பெரிய விஷயம்’ என்று மீண்டும் மிரட்டினர். அந்தத் தொகையும் லாபத்தில் என்னுடைய பங்குதான். முதலீட்டில் ஒரு பைசாகூட எனக்கு வரவில்லை. இதுபற்றி நான் பாண்டி பஜார் போலீஸில் புகார்​செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இப்போது கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.

ராஜா சொல்வது எல்லாம் உண்மையா? ஜோய லைத் தொடர்புகொண்டு பேசினோம். ''இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அனீஷ்குமாரும் அவருடைய தந்தை நந்தகுமாரும் என்னுடைய கட்சிக்​காரர்கள். ஆனால், இந்த பிரச்னையில் நான் தலையிடவே இல்லை. அதுவும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினேன் என்பது  சுத்தப்பொய். இது தொடர்பாக அந்தப் பையன் முதலில் புகார் கொடுத்தபோது என்னுடைய பெயரை குறிப்பிடவில்லை. அந்தப் புகாரை விசாரித்த போலீஸ்காரர்களே, பொய்ப் புகார் என்று அதை தள்ளுபடி செய்து விட்டனர். என்னைப்​போன்ற பிரபலமானவர்களின் பெயரைப் புகாரில் சேர்த்தால்தான் பத்திரிகைகளில் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக, இப்போது எனது பெயரைச் சேர்த்து மீண்டும் ஒரு புகாரைக் கொடுத்து இருக்கிறார். ஒரு பிரச்னைக்கு இரண்டு புகார்கள் கொடுப்பதே சட்டப்படி தவறு. இந்த விவகாரத்தில் நான் தலையிடவே இல்லை என்பதை சட்டப்படி நிரூ பிப்பேன்'' என்றார்.

உண்மை என்ன என்பதை காவல் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும்!

- ஜோ.ஸ்டாலின்