
சென்னை கேளம்பாக்கம் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்
இளமையின் சிந்தனையும் வேகமும் எப்போதும் ஆச்சர்யமளிக்கக் கூடியவை. கூடவே, உற்சாகப்படுத்தப்பட வேண்டியவை. இதழியலில் விருப்பம் கொண்ட கல்லூரி மாணவர்களைத் தட்டிக்கொடுக்கத்தான் இந்த `2கே கிட்ஸ்’ பக்கங்கள். மாணவர்களே... இந்தப் பக்கங்களில் என்னென்ன இடம் பெறலாம் என நீங்களே யோசித்து, செயல்படுத்தி, எழுதி, எடிட் செய்து என்று உருவாக்கலாம். ஆம்... நீங்களேதான்!
கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், மீம்கள் என அனைத்துக்கும் வெல்கம். வீடியோவில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள், அந்தக் களத்திலும் கலக்க கைகொடுக்கிறோம். உங்கள் மீடியா பயணத்தின் முதல் அடியை, அவள் விகடனிலிருந்து ஆரம்பிக்க வாழ்த்துகள்.

ஒவ்வோர் இதழிலும் 2கே கிட்ஸ் படைக்கும் பக்கங்கள் காத்திருக்கின்றன. இதழியலில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள், ஆர்ஜே மற்றும் வீஜே என கல்லூரி மேடையில் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் ஒரு டீம் அமைத்து, இதில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம். உங்களை பற்றிய தகவல்களை avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். எங்களிடமிருந்து அழைப்பு வரும்.
`2கே கிட்ஸ்’ பக்கங்களை ஆரம்பிக்கலாங்களா!