Published:Updated:

தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி

தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி
News
தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி

தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி

Published:Updated:

தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி

தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி

தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி
News
தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி
தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கி.வீரமணி

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''அண்மைக்காலமாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் உரிமைகள் பெரிதும் பறிக்கப்பட்டதாக, அத்துணை எதிர்க்கட்சிகளும் மாறி, மாறி வெளிநடப்புச் செய்வதும், வெளியேற்றப்படுதலுமான காட்சிகளும் தமிழகச் சட்டமன்றத்தின் மாண்பினைக் காப்பாற்ற உதவிக் கூடியதாக அமையாது.

15 உறுப்பினர்களையே கொண்ட கட்சியாக 1957ல் தி.மு.க. சட்டமன்றத்தில் முதல் முறையாக நுழைந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோது, சட்டமன்ற (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த) சபாநாயகரைப் பாராட்டி வரவேற்றுப் பேசும்போது, அறிஞர் அண்ணா, 'ஜனநாயகத்தில்- ஆளுங்கட்சிக்கு ‘‘லாலி பாடுவது’’ எதிர்க்கட்சிகளின் வேலையாக இருக்க முடியாது; எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அது சரியான வழியில் செல்லுகிறதா என்று கண்காணிக்கும் வேலையில் ஈடுபடுவதற்கே உள்ளது’ என்று காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள ஆளுங்கட்சி, அண்ணாவின் நயத்தக்க நாகரிக அறிவுரையைப் பின்பற்ற வேண்டியது நியாயமான கடமை அல்லவா?

ஆளுங்கட்சி மரபுகளையெல்லாம் புறந்துள்ளுவதுபோல, அவையில் இல்லாதவர்களைப்பற்றி தேவையற்ற முறையில் (முன்னாள் முதல்வர் கலைஞரைப்பற்றி எப்போதும் விமர்சனம் தேவையா?) விமர்சனம் செய்வதும், அதனை மறுத்துப் பேச சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதற்கு அனுமதி மறுப்பதும், ஆளுங்கட்சியினர் வெகுண்டு எழுந்து பேசுவதை அனுமதிப்பதும், எதிர்க்கட்சிகளை வெளியேற்றுவதும் விரும்பத்தக்க ஜனநாயகக் காட்சிகள்தானா?

சபாநாயகர் தம் தலையாய கடமை அனைத்து உறுப்பினர்களது உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும். Speaker- ‘ஸ்பீக்கர்’ என்பவர் சபைக்காக, சபை உரிமையைக் காப்பதற்காகவே பேசவேண்டியவர், பேச இருப்பவர்; மற்றபடி அவர் தனித்து யாருக்கும் ஆதரவாகவும் பேசாதவர் என்பதுதான் பிரிட்டிஷ் மக்கள் அவையின் (House of Commons) நடைமுறை என்பது உலகறிந்த ஒன்று. இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அல்லது மாநிலங்கள் அவைத் தலைவர், எவ்வளவு பெரும் அமளி துமளிகளுக்கிடையில்கூட கடும் நடவடிக்கை என்ற ஆயுதத்தை (உறுப்பினர்கள் சிற்சில நேரங்களில் எல்லை மீறிய நிலைக்குச் சென்றபோதுகூட) பிரயோகிப்பதில்லையே; அதைப் பார்க்கவேண்டாமா?

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொண்டு, தக்க பதிலடி முறையான வகையில் தந்து, தம் நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாமே. அதைவிடுத்து, ஜனநாயகத்தை இப்படி உரிமை பறிப்பதுபோல, தொடர்ந்து அவையிலிருந்து வெளியேற்றுவது, பட்ஜெட் தொடர் போன்ற முக்கிய தொடரில் எதிர்க்கட்சிகளின் குரலையே கேட்கவிடாமல் செய்வது, ஆளுங்கட்சிக்கு ஒருபோதும் பெருமை சேர்க்காது, பயனும் அளிக்காது. ஆளுங்கட்சித் தலைமை, தங்கள் உறுப்பினர்களின் எல்லை மீறிடும் உரைகளின்போது கண்டித்து முறைப்படுத்தினால்தான் அத்தலைமைக்குப் பெருமை. நாட்டில் உள்ள பொதுவானவர்கள் இதனைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவேண்டாமா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (குறள் 448) என்பதற்கொப்ப, எதிர்க்கட்சியின் விமர்சனங்களை எதிர்கொண்டு, முறையான வாதங்கள் மூலம் அதற்குத் தக்க விடை தரலாம்; தரவேண்டும்.

தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகளைத் தந்து, ஜனநாயகத்தின் மாண்புகளைக் காத்தல் அவசியம். சபாநாயகரின் தீர்ப்புகள் நியாயத்தோடு, எச்சார்பும் இன்றி வழங்கப்படுகிறது என்ற தோற்றத்தையும், நம்பிக்கையையும் அனைவருக்கும் ஏற்படுத்துவதாக அமைந்தால், கூச்சல், குழப்பங்கள், கடும் கருத்து மோதல்கள்கூட தவிர்க்கப்பட வாய்ப்பை ஏற்படுத்தும். தி.மு.க.வை இந்தத் தொடர் முழுவதும் வராமலிருக்கும் தீர்ப்பை, அவை மறுபரிசீலனை செய்து, மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றட்டும்'' எனக் கூறியுள்ளார்.