Published:Updated:

தூத்துக்குடி: செல்போனில் பேசியபடி ஓட்டிய ஓட்டுநர்; கவிழ்ந்த ஆட்டோ - 4 வயது மாணவன் பலி; 7 பேர் காயம்

கவிழ்ந்த ஆட்டோ
News
கவிழ்ந்த ஆட்டோ

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, செல்போனில் பேசியபடியே ஓட்டிச் சென்றதில் சாலையோரம் ஆட்டோ கவிழ்ந்தது. இதில், 4 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், 7 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

Published:Updated:

தூத்துக்குடி: செல்போனில் பேசியபடி ஓட்டிய ஓட்டுநர்; கவிழ்ந்த ஆட்டோ - 4 வயது மாணவன் பலி; 7 பேர் காயம்

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, செல்போனில் பேசியபடியே ஓட்டிச் சென்றதில் சாலையோரம் ஆட்டோ கவிழ்ந்தது. இதில், 4 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், 7 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கவிழ்ந்த ஆட்டோ
News
கவிழ்ந்த ஆட்டோ

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருக்கும் மாணவ, மாணவிகளை 10 கி.மீ தொலைவிலுள்ள தனியார் பள்ளிகளில் (திருநெல்வேலி) சேர்த்துள்ளனர் அவர்களின் பெற்றோர். அவர்களை தினமும் ஆட்டோ, வேன்களில் அனுப்பிவருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த எட்டு மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சரவணன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோவை ஓட்டுநர் ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றாராம். ஆட்டோ ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டே ஓட்டிச் சென்றிருக்கிறார்.

உயிரிழந்த 4 வயது மாணவன்
உயிரிழந்த 4 வயது மாணவன்

இதில், அனவரத நல்லூர், தென்னம்பாண்டி சாஸ்தா கோயில் அருகில் எதிர்பாராதவிதமாக செல்போன் சாலையோரம் தவறி விழுந்திருக்கிறது. செல்போனை எடுப்பதற்காக ஆட்டோவை சாலையோரம் வேகமாக இறக்கியதில், ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த யூ.கே.ஜி படிக்கும் நான்கரை வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே ஆட்டோவில் பள்ளிக்குப் பயணித்த ஏழு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆட்டோவில் பயணித்த மாணவர்கள், ``அந்த டிரைவர் மாமா போனை இடது காது பக்கம்வெச்சுக்கிட்டு தலையைச் சாய்ச்சபடியேதான் வண்டி ஓட்டுனாங்க. பள்ளம், மேடுன்னு பார்க்காம வேகமா ஓட்டுனாங்க. `மெதுவா போங்க மாமா[ன்னு சொன்னோம். ஆனா, அவங்க காதுல வாங்காம போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டுக்கிட்டே இருந்தாங்க. போன் கீழ விழுந்துடுச்சு.

கவிழ்ந்த ஆட்டோ
கவிழ்ந்த ஆட்டோ

உடனே, ரோட்டுக்கு பக்கத்துல வண்டியை இறக்கினாங்க. அதுல பள்ளம் இருந்ததுனால ஆட்டோ கவிழ்ந்துடுச்சு. பயத்துல நாங்க எல்லாரும் அழுதோம். கை, கால்ல உரசி ரத்தம் வந்துச்சு. ஆட்டோ கவிழ்ந்ததைப் பார்த்து அந்தப் பக்கம் போனவங்க, வந்தவங்க எங்களைத் தூக்கிவிட்டாங்க. குடிக்க தண்ணி குடுத்தாங்க. எங்க கூட வந்த யூ.கே.ஜி படிக்கிற பையன் மட்டும் எழுந்திருக்காமலேயே படுத்திருந்தான்.

`தம்பி... தம்பி...’ன்னு சொல்லி, அவனைத் தட்டி எழுப்புனோம். ஆனா, கண்ணு முழிக்கலை. கடைசியில அவன் இறந்துட்டான்னு சொன்னாங்க. எங்களுக்கு அழுகையா வருது” என்றனர் கண்ணீடன்.

``செய்துங்கநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்ல இருந்து 5 கி.மீ தூரம் இருக்குற இந்த குறுக்கு வழியில போனா வசவப்பபுரம் போயிடலாம். அங்கேயிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்குப் போயிடலாம். ஆனா, இந்தப் பாதையில பல இடங்கள்ல குண்டும் குழியுமா இருக்கும்.

அப்பகுதி மக்கள்
அப்பகுதி மக்கள்

இது ஒத்தப் பாதைங்கிறதுனால எதிரெதிரா வாகனங்கள் வந்தாக்கூட ஒருத்தருக்கொருத்தர் நின்னு வழிவிட்டுத்தான் போக முடியும். இந்த நிலைமையில செல்போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டலாமா... இப்போ ஒத்த உசுரு அநியாயமாப் போயிடுச்சே. அந்த வீட்டுல இருந்த ஒத்தப் பிள்ளையும் போயிடுச்சே” என்றனர் அப்பகுதியினர். இதுகு றித்து முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ டிரைவரைத் தேடிவருகின்றனர்.