விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

ஜெயகுமாரிடம்...

''ஜெயலலிதாவைக் கிணற்றுத் தவளை என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளாரே?''

''சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் அனுமதி பெறப்படவில்லை என்று அம்மா கூறியதற்குப் பதில் சொல்ல முடியாமல், 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறான்' என்பது போல உள்ளது அவரது பேச்சு!''

டி.கே.எஸ். இளங்கோவனிடம்....

''நடப்பது உலகத் தமிழ் மாநாடே அல்ல என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?''

''அவருக்கு ஆங்கிலம்தான் தெரியும் என்பதால் அப்படிச் சொல்லிஇருப்பார்!''

சினேகாவிடம்...

''இடுப்பைக் கிள்ளியதாக ஓர் அப்பாவியை அடி வாங்க வைத்துவிட்டீர்களே?''

''கூட்ட நெரிசலில் யாரோ என்னைக் கிள்ளினார்கள் என்றுதான் கூறினேன். யாரையும் நான் குறிப்பிடவில்லை மற்றபடி சுரேஷ்குமார் என்ப வரைக் கடைக்காரர்கள் அடித்த விவகாரம் எனக்கு எதுவும் தெரியாது. அன்று நடந்த சம்பவத்தை நினைத்து வருத்தப்படுகிறேன்!''

ஆர்யாவிடம்...

5 கேள்விகள்

''நீங்களும் விஷாலும் இணைந்து பாலா டைரக்ஷனில் நடிக்கப் போகிறீர்களாமே?''

''பாலா அண்ணனின் அடுத்த பட வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவரே விரைவில் முறைப்படி அறி விப்பார்!''

சுனைனாவிடம்...

''ஆக, ஆகாசுடன் நீங் கள் இருக்கும் படங்கள் மார்ஃபிங் என்கிறீர்களா?''

''இல்லை... அவை என்னுடைய படங்கள்தான். என்னி டம் சொல்லியதைவிட, அளவுக்கு அதிகமாக கிளாம ராகக் காட்டியிருக் கிறார்கள் என்பதுதான் என் வருத்தம்.''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்