விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!

''தமிழன் - ஒரு வரி விளக்கம்தாருங்கள்?''

''மேடையில் நடிப்பவர்களிடம் காசு வாங்கி, சினிமாவில்நடிப் பவர்களிடம் கொடுத்துவிட்டுக் குப்புறடித்துப் படுத்துக்கொள்பவன்!''

- எஸ்.சீனிசலாப்தீன், ராமநாதபுரம்.

'''அறிஞர் அண்ணா சகிப்புத்தன்மை அதிகம்கொண்டவர்!' என்று கலைஞர் புகழ்மாலை சூட்டியிருக்கிறாரே...''

''இல்லையா பின்னே... தனது நூற்றாண்டு விழாவில் கலைஞர் புகழ் பாடி கருத்தரங்கம் நடத்தினாலும், பொறுத்துக்கொள்ளும் அளவுக்குச் சகிப்புத்தன்மைமிக்க வர் அண்ணா!''

- ஆர்.நாகராஜன், சென்னை-117.

''வியக்கவைத்த ஆட்டோ வாசகம் ஏதாவது?''

'' 'வாழ்க்கையில் சில வாய்ப்புகள் வரும். சில வாய்ப்புகள் வாழ்க்கையே தரும்!' ''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''மற்றவர்கள் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டியது?''

''தட்டிக் கொடுப்பதுதான்!''

- மு.சரவணன், சென்னை-28.

''சமீபத்தில் ரசித்தது?''

''ஒரு சேனலில், பிரகாஷ்ராஜின் ரம்ஜான் ஸ்பெஷல் பேட்டி. அதில் அவரது சில பதில்கள்...

'நீங்கள் வாழ்க்கையில் எப்போது அதிக பூரிப்படைவீர்கள்?'

'சாப்பிட்ட பிறகு ஒரு தம் அடிப் பேன் பாருங்க. அப்போலாம்!'

'யாருடன் சூட்டிங் என்றால் மிகவும் குஷியாகக் கிளம்புவீர்கள்?'

'உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அழகான பெண்கள்!' ''

- வைகை ஆறுமுகம், திருப்பூர்.

''தொழில் திறமை என்றால் என்ன?''

''ஒரு ஜோசியரைப் பார்க்க மூன்று மாணவர்கள் வந்திருந்தனர் 'சார், நாங்க இப்பதான் எக்ஸாம் எழுதி இருக்கோம். நாங்க மூணு பேரும் பாஸாயிடுவோமா?' என்று கேட்டார்கள். ஜோசியர் அவர்களிடம் ஒரு விரலைக் காட்டினார். அவர்களும் திரும்பி விட்டார்கள். தேர்வு முடிவுவெளி யான பிறகு மீண்டும் வந்தவர்கள், 'எங்களில் ஒருவர்தான் பாஸ் ஆனோம். சரியாகச் சொன்னீர் கள்' என்று ஜோசியரைப்பாராட் டிச் சென்றார்கள். ஜோசியரின் அருகில் இருந்தவர், 'நீங்க குத்து மதிப்பா அடிச்சுவிட்டீங்கன்னு எனக்குத் தெரியும். மூன்று பேரில் இரண்டு பேர் பாஸ் ஆகியிருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள்?' என்று கேட்டார். அதற்கு ஜோசியர் சொன்னார், 'ஒருத்தர் ஃபெயிலாயிடுவார்னு சொல்லத்தான் ஒற்றை விரலைக் காட்டினேன்னு சொல்லிடுவேன்' என்றார். கேள்வி கேட்டவரும் விடவில்ல, 'மூணு பேரும் பாஸ் ஆகிட்டா என்ன சொல்வீங்க?' 'அப்ப மூன்று பேரும் ஒரேதடவை யில பாஸ் ஆயிடுவீங்கங்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்னு சொல்லிடுவேன்' என்றார் ஜோசியர். இதற்குப் பெயர் தொழில் திறமை மட்டுமல்ல... தில்லாலங்கடியும்கூட!''

- மரகதம் ராகவ சிம்மன், ஹைதராபாத்.

''காகிதப் புரட்சி என்றால் என்ன?''

''போராட்டம், ஆர்ப் பாட்டம், ஆவேசமான எதிர்ப்பு, கடுமையான விமர்சனங்கள் இவை எல்லாம் அடங்கிய ஜெயலலிதாவின் அறிக்கைகளை நீங்கள் படித்தது இல்லையா?''

- ஆர்.விஜயராஜன், தூத்துக்குடி.

'' 'கிரிமினல்கள் யாரும் காங்கிரஸ் கட்சியில் சேரக் கூடாது' என்கிறாரே ராகுல்?''

''ஒருவேளை கட்சியில் சேர்ந்த பிறகு ஆனால் போதும் என்கிறாரோ என்னவோ!''

- எம்.சரஸ்வதி, முத்தையாபுரம்.

எழுதலாம் எல்லோரும்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!