விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


.
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மும்பை மருத்துவமனையில் சைனசுக்காக மூக்கில் ஆபரேஷன் செய்துகொண்டார் அசின். இதை 'அழகை அதிகரிக்க சிலிக்கன் சர்ஜரி செய்துகொண் டார்!' என்று சிலர் கொளுத்திப் போட, 'இப்படில்லாமா யோசிப்பாங்க!' என்று திகிலடித்துக்கிடக்கிறார் வடு மாங்கா மாமி. விடுங்கோ மாமி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

வீட்டில் ஓய்வில் இருக்கும்போது கலைஞரின் ரிமோட் சாய்ஸ் ஆதித்யா சேனல். அதில் வடிவேலு காமெடி என்றால், யாரையும் சேனல் மாற்றவிடாமல் பார்த்து ரசிப்பாராம். கைப்புள்ள... வண்டியைக் கிளப்பு!

நிலவில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்தது சந்திராயன்தான்!' என்று நாசா விஞ்ஞானிகளே அறிவித்து இருப்பதால், கொஞ்ச நாட்களாகச் சோர்வாக இருந்த சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இப்போது மீண்டும் குஷி மூடுக்குத் திரும்பிவிட்டார். அடுத்த டாக்டர் பட்டம் எப்போ சார்?

தீபாவளிக்கு 'ஆதவன்' ரிலீஸ் ஆவதால், 'வேட்டைக்காரன்' படத்தை தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று குடும்பமாகக் கூடி முடிவெடுத்துவிட்டார்களாம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

வேட்டைக்காரன்' படத்தில் வரும் 'நான் அடிச்சா தாங்க மாட்ட... நாலு மாசம் தூங்க மாட்ட!' பாடலின் இறுதி வரிகளைப் பாடி டாடியோடு ஆட்டம் போட்டு இருக்கும் 'ஜூனியர் விஜய்' சஞ்சய்க்கும் ஃப்ளெக்ஸ் பேனர், போஸ்டர் அடித்துக் கலக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள், விஜய்யின் ரசிகர்கள். அரசியல் என்ட்ரிக்கு முன்னாடியே வாரிசு ரெடி!

இன்பாக்ஸ்

உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிய கவன ஈர்ப்புகளில் சிறைக்குள் இருக்கும் நளினி விடுதலை செய்யப் படலாமாம். உலகத் தமிழர்கள் மத்தியில் ஸ்கோர் பண்ணவே இந்த ரகசிய அதிரடியாம். பார்த்து செய்யுங்கப்பா!

இன்பாக்ஸ்

கன்னடத்தவராக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் இதுவரை ஒரு கன்னடப் படத்திலும் நடித்தது இல்லை. இப்போது உபேந்திரா இயக்கி நடிக்கும் கன்னடப் படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லி இருக் கிறாராம். சம்பளம் 2 கோடி ரூபாயாம். ஓ.கே... ஓ.கே!

இன்பாக்ஸ்

'வீரபாண்டியக் கட்டபொம்மன்' படத்தை பிரமாண்டமாக ரீ-மேக் செய்து நடிக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறார் சரத்குமார். இணைத் தயாரிப்புக்கு ஆள் தேடுகிறார் ராதிகா. எட்டப்பன் யாருங்க?

போன வாரம் இளையராஜா... இந்த வாரம் ஜெயலலிதா! 'உன்னைப் போல் ஒருவன்' இசைக்காக ஸ்ருதிஹாசனை, 'ஆண்களுக்கு மட்டுமே நன்குமெட்டு அமைக்கும் திறமை உண்டு என்ற கருத்தை உடைத்து எறிந்துவிட்டாய் பெண்ணே!' என்று வாழ்த்தி இருக்கிறாராம்.' கொடநாட்ல அம்மா ஆக்டிவ்வா இல்லைன்னு யாருப்பா சொன்னாங்க!

எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கிக்கொண்டு இருக்கும் 'கோமரம் புலி'யில் ஒரு தமிழ் குத்துப் பாட்டுக்கு நடனமாட இருப்பது சிம்பு. ரெண்டு பேரும் ஒரே இடத்துலயா?

இன்பாக்ஸ்

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைக் காட்டிலும் அதிகமாக ஹெலிகாப்டரில் பறந்து வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தற்போதெல்லாம் எவ்வளவு தூரமானாலும் ஏ.சி. காரிலேயே சென்று வருகிறாராம். சேஃப்டி ஃபர்ஸ்ட்!

இன்பாக்ஸ்

தெற்கையும் வடக்கையும் கலையால் இணைத்து இருக்கிறது போத்தீஸ். அசல் காஞ்சிப்பட்டில் ஸ்வரோஸ்கி, மீனாக்காரி, போல்கி, குந்தன் என ஜெய்ப்பூரின் கைவேலைப்பாடுகளுடன் அறிமுகமாகி உள்ள 'வஸ்தரகலா' சேலைக்கு பிராண்ட் அம்பாசிடர், தெற்கில் பிறந்து வடக்கில் வெற்றிக் கொடி கட்டிய ஹேமாமாலினி. வஸ்த்ரகலா வல்லி!

இன்பாக்ஸ்

தும் ததா' -தனுஷ் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை இது. கவுண்டமணி எமன் வேடத்தில் 'லக்கிமேன்' படத்தில் அடிக்கடி இப்படிச் சொல்வார். கவுண்டமணியின் தீவிர ரசிக வெறியரான தனுஷ், 'தன் தலைவன்' என்று கவுண்டமணியைத்தான் குறிப்பிடுவாராம். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் நடிங்க பாஸ்!

 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்