ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கேரியர் கைடன்ஸ்

கேரியர் கைடன்ஸ்


ஸ்பெஷல் 2
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
 
வருங்காலம்... வரும் காலம்!
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்

இது புதுசு!

சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் மாரிடைம் மேனேஜ்மென்ட், போர்ட் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் எம்.பி.ஏ., படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இவை தவிர, மாரிடைம் லா உள்ளிட்ட சில படிப்புகளும் புதிதாகத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன!

அருந்ததியருக்கு 3 சதவிகிதத் தனி ஒதுக்கீடு!

திதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவிகிதத் தனி இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!

பாரதிதாசனில் எம்.பி,.ஏ.,

பிரபல மேலாண்மைக் கல்வி நிறுவனமான திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ., சேர விரும்பும் மாணவர்கள் ஜனவரி 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கேட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த மாணவர்களின் சராசரி ஆண்டு சம்பளம் ரூ.8.2 லட்சமாம்!

பகுதி நேர பி.இ., படிப்பு!

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள், இந்த பகுதி நேரப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

விவரங்களுக்கு: new.annauniv.edu.in

தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட்.,

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தும் பி.எட்., படிப்புகளில் (2 ஆண்டுகள்) மாணவர்களைச் சேர்க்க தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

டிப்ளமோ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

னைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் சிறப்புத் தேர்வு எழுத கருணை அடிப்படையில் மூன்று வாய்ப்புகளை தமிழக அரசு அளித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டிப்ளமோ தேர்வுகளில் முழுமையாகத் தேர்ச்சி பெறத் தவறியவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வுகள் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும்!

விவரங்களுக்கு: http://new.tndte.com/

ஜாம் 2009

.ஐ.டி.-களில் எம்.எஸ்சி. உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு (Joint Admission Test - JAM) வருகிற மே 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன!

விவரங்களுக்கு: http://jam.iitkgp.ac.in

 
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்