ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை


ஸ்பெஷல் 2
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

சுய அனுபவமோ பார்வையோ இல்லாமல் மூளையின் மடிப்புகளில் திணித்துக்கொண்ட புத்தகங்களைப் பிரதியெடுப்பதும் அவற்றின் பக்கங்களை உருவி நம்முன் வைப்பதும், இன்றைய கவிதைத் தொகுப்புகளில் சகஜ மாகிவிட்டது. இப்படியான சூழலில், கவிதா பெரும் நம்பிக்கையளிக்கிறார். அன்பையும் காதலையும் முழுமையாகப் பார்க்கும் தொலைவும்... நடுநிலையும் அவருக்குப் பழக்கமாயிருக்கின்றன. அவரது கவிதைக் குரல் வெளிப்படையான கவர்ச்சி அற்றது. ஆனால், முறைப்படுத்தப்பட்டு வாசிக்கிறவரின் அடியுணர்வைத் தொட அவரால் முடிகிறது. கூறும் விஷயம் எக்கவிதைக்கும் சிறப்பு சேர்ப்பது இல்லை. கூறப்படாத தளத்தின் விரிவும் ஆழமுமே கவிதையைத் தீர்மானிக்கும். கவிதாவின் கவிதைகளில் கூறப்படாத தளம் நிறையவே உண்டு!


விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ஜோக்குகளாகக் கொட்டிக் கிடக்கும் தளம். வயதுக்கு வந்தோரில் இருந்து மதம், அறிவியல், கம்ப்யூட்டர், பார் என சகல ஏரியாக்களையும் இந்த இணையத்தில் காமெடி செய்து கலாய்க்கிறார்கள். 'அப்பா திருமணம் செய்ய எவ்வளவு செலவாகும்?' என்று கேட்கிறான் மகன். 'தெரியலையேப்பா... நான் இன்னும் செலவு பண்ணிட்டுத்தானே இருக்கேன்!' என்கிறார் அப்பா. நாலு ஜோக் நல்லதாகச் சொல்லி கேர்ள் ஃப்ரெண்ட்டை கிச்சுகிச்சு மூட்ட நினைப்பவர்கள் இதில் ஓர் உலா போகலாம்!


விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

லக அளவிலான பொருளாதார மாற்றங்கள் இந்தியாவின் கடைக்கோடி பாமர னையும் பாதிக்கும் சூழலில், உலகப் பொருளாதார சிக்கல்கள், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள், இந்தியச் சூழலில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்கிற வலைப்பூ. குறிப்பாக, 'இந்திய மென்பொருள் துறை சந்திக்கும் சவால்கள்' என்னும் கட்டுரையில் ஒபாமா, அமெரிக்க அதிபராகி இருப்பதன் பின்னணியில் இந்திய ஐ.டி. துறைக்கு ஏற்பட இருக்கும் நெருக்கடிகள், அதிகரிக்கும் செலவினங்கள் ஆகியவற்றை விரிவாக அலசியிருப்பதும் இந்தச் சூழ்நிலையிலும் சீனா தன் பொருளாதாரத் தனித்துவத்தைத் தக்க வைத்துக்கொண்டது போன்றவை கவர்கின்றன. அதுவும் நியூஸ் சைட்டுகளுக்குப் போட்டியாக மும்பை சம்பவங்களை அப்டேட் செய்வது வெரிகுட்!


விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

ரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை திசை திரும்பிய கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆகக் குறைந்த 15 நிமிடத்தில் இவ்வளவு ஆக்கபூர்வமாக விறுவிறுப்புடன் சொல்ல முடிவது ஆச்சர்யம். ஒரு நல்ல திரைப்படத்துக்கான தொடக்கமும் முடிவும் கொண்டிருக்கிறது. குறும்படங்களில் இதற்கு முன் பார்த்திராத கேமரா கோணங்கள். இயக்குநர் சண்முகவேல் சொல்லத் தெரிந்ததைத் தெளிவாக எடுக்கத் தெரிந்திருக்கிறார். குறும்படங்கள் தன் வீச்சைப் பல கதை அடுக்குகளில் சொல்ல ஆரம்பித்துவிட்டது தெரிகிறது!


விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

சிறிய இடைவெளிக்குப் பிறகு இசைக் களம் இறங்கியிருக்கிறார் டி.இமான். ஐந்துக்கு நாலு பாடல்கள் நா.முத்துக்குமார் கைவரிசை. எந்தப் பந்தைப் போட்டாலும் எழும்பிச் சாத்துகிறார்.

அனிதாவின் அரை மயக்கக் குரலில், 'ஷோக்கு சுந்தர்..' பாட்டு செம செக்ஸி. 'ஆறடி ராட்சஸனே'... என்று குமார் சானு இந்தி டச்சுடன் பாடியிருக்கும் பாட்டும் முதல் பாட்டைப் போலவே ஹீரோ பில்ட்-அப் பாட்டு. வித்தியாசமான குரலில் 'தங்கத் தமிழ்நாட்டில் அழகான ஊரு..' என பாடும் தேவன் ஏன் இன்னும் நட்சத்திரப் பாடகர் ஆகவில்லை? மற்றொரு இனிமையான மெலடி, 'சின்னக் கொழுந்தனாரே...' சாதனா சர்க்கத்திடம்தான் எத்தனை ஸ்பஷ்டமான உச்சரிப்பு. 'ஓரம் போ... ஓரம் போ..!' ரீ-மிக்ஸை அப்போது எழுதிய கங்கை அமரனே இப்போதும் எழுதியிருக்கிறார். பழைய 'ஓரம் போ' இலங்கை வானொலியில் அதிக முறை ஒலிபரப்பப்பட்டு சாதனை புரிந்த மெகா ஜிகா ஹிட் பாடல். அதை ரீ--மிக்ஸூக்கு எடுத்திருப்பது... ஸாரி இமான்!

 
விகடன் வரவேற்பறை
-
விகடன் வரவேற்பறை