ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சரிகமபதநி டைரி

சரிகமபதநி டைரி


ஸ்பெஷல் 2
சரிகமபதநி டைரி
சரிகமபதநி டைரி
 
சரிகமபதநி டைரி
சரிகமபதநி டைரி
சரிகமபதநி டைரி
சரிகமபதநி டைரி
சரிகமபதநி டைரி

ந்த டிசம்பரில் சென்னை இசை விழா முழு வீச்சில் நடக்கும்போது, ஒரு மாலை வேளையில் மியூஸிக் அகாடமியில் டி.எம்.கிருஷ்ணா பாடிக்கொண்டு இருப்பார். அதே நேரத்தில், அதே டி.எம்.கிருஷ்ணா, அதே பக்கவாத்தியங்களுடன் சத்யம் தியேட்டரின் பெரிய திரையிலும் பாடிக்கொண்டு இருப்பார்!

அதே போல், பாம்பே ஜெய

யும் நாரதகான சபாவிலும், சத்யம் திரையிலும் ஒரே சமயத்தில் தன்னை மறந்து பாடிக்கொண்டு இருப்பார்!

இது முடியுமா?

ஆம், அவர்கள் இருவரால் முடியும்!

எப்படி?

ரஜினி, கமல் படங்கள் மாதிரியாக இசை ரசிகர்கள் மத்தியில் 'மார்கழி ராகம்' படம் வெளியாவதற்கு முன்பே, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஐந்து நிமிட டிரெய்லரைப் பார்த்தவர்கள் பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்று கேள்வி!

டிசம்பர் 18-ம் தேதியன்று சத்யம் தியேட்டர் உட்பட உலகெங்கும் ரிலீஸாகிறது 'மார்கழி ராகம்'. இதில் கர்னாடக இசைக்கும் அரிதாரம் பூசியிருக்கிறார்கள்.

''மார்கழி மாசத்துல சென்னையில் 100 சபாக்களுடன் நாங்களும் களத்தில் குதிக்கப் போகிறோம்'' என்றார் படத்தின் இயக்குநர் ஜெயேந்திரா. புன்னகை தவழ்ந்தது அவர் முகத்தில்!

2 மணி நேர சினிமா, 'மார்கழி ராகம்'. அதாவது 2 மணி நேரத்துக்கு டி.எம்.கிருஷ்ணாவும் பாம்பே ஜெய

யும் சம்பிரதாயம் மீறாத கர்னாடக இசைக் கச்சேரி நிகழ்த்திஇருக்கிறார்கள்.

''தியேட்டருக்கு கர்னாடக சங்கீதம் செல்வதே ஒரு வகையில் சம்பிரதாயம் மீறுவதுதானே?''

''இல்லை!'' என்கிறார் கிருஷ்ணா. ''ஆரம்பத்துல செருப்பை வெளியே வெச்சுட்டு கோயிலுக்குள்ளே போய் கச்சேரி கேட்டோம். அப்புறமா சபா கல்ச்சர் வந்தது. அது மேலும் வளர்ந்து... ஏ.சி. ஹால்ல குஷன் நாற்காலியில் கால் மேலே கால் போட்டு உட்கார்ந்து இன்னிக்குக் கச்சேரி கேட்கறோம். இப்போ சினிமா தியேட்டர்ல போய் உட்கார்ந்து அதே கச்சேரியைக் கேட்கப் போறோம். இதுல சம்பிரதாய மீறல் எங்கிருந்து வந்தது?'' என்று குரல் உயர்த்திக் கேட்கிறார் கிருஷ்ணா.

''பாடறதை எடுத்துக்கிட்டாலும் எந்த வகையிலும் நாங்க சம்பிரதாயம் மீறலை. வழக்கமான சபா கச்சேரி மாதிரிதான் இந்த சினிமாவிலும் பாடியிருக்கோம். நமது முன்னோடிகள் பாடிப் பிரபலப்படுத்திட்டுப்போன பாடல்களைத்தான் இதுலேயும் பாடி இருக்கோம். ரசிகர்களுக்கு ரொம்பப் பரிச்சயமான ராகங்கள்தான் மார்கழி ராகத்துலேயும் இருக்கும்'' என்ற உத்தரவாதம் தந்தார் பாம்பே ஜெய

.

சரிகமபதநி டைரி

இந்த சினிமா, கர்னாடக சங்கீதத்துக்குக் கிடைத்திருக்கும் தனி கௌரவம் என்பதில் இருவருக்குமே பெருமை. இந்துஸ்தானி சங்கீதத்துக்கு இதுவரை இந்த சிறப்பு கிடைக்க வில்லையாம். மேற்கத்திய கிளாஸிக்கல் கச்சேரிகளையும் இதுவரை யாரும் வெள்ளித்திரை வரை எடுத்துப் போகவில்லையாம். டி.வி-தான் அதிகபட்சம்.

ஜெயேந்திராவைப் பொறுத்தவரை அவருடைய 4 வருடக் கனவு இப்போது நிஜமாகியிருக்கிறது. ''இன்னிக்கு இருக்கிற நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, ஒரு முழு நேரக் கச்சேரியை ஹைடெக்காகப் பதிவுசெய்து அதைத் திரைப்பட வடிவத்தில் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கிருஷ்ணாவையும் ஜெய

யையும் அணுகியபோது, எந்தத் தயக்கமும் காட்டாமல் சம்மதித்தார்கள்'' என்றார் ஜெயேந்திரா. நினைத்தைச் சாதித்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில்!

''இந்த இருவரையும் தேர்வு செய்தது ஏன்?''

''இவர்களுடைய ஸ்டைல் எனக்குப் பிடித்திருக்கிறது'' என்றார் டைரக்டர்.

''கடைசி வரிசை ஆசாமியை விடுங்க... சபா ஹால்ல முதல் வரிசையில உட்கார்ந்து இருப்பவர்களுக்கே மேடையில பாடறவரோடு முகம் முழுசாத் தெரியாது. மைக்கு மறைச் சிட்டு நிக்கும். குறுக்கும்நெடுக்கும் ஆட்கள் நடந்துட்டிருப்பாங்க. முழுக் கவனத்தையும் சிந்தாமச் சிதறாம பாட்டு மேலேயும் பாடகர் மேலேயும் நம்மால் செலுத்த முடியறதில்லை. இப்போ, இந்த சினிமாவைப் பார்க்கும்போது கச்சேரியோடு நீங்க 100 சதவிகிதம் ஐக்கிய மாயிடுவீங்க'' என்ற ஜெயேந்திரா, படப்பிடிப்புக்கு முன் இரு பாடகர்களிடமும் சொன்ன ஒரே விஷயம்...பாடல்களின் பட்டியல் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

சரிகமபதநி டைரி

கிருஷ்ணாவும் ஜெய

யும் தனித்தனியாக 4 கீர்த்தனைகள் பாடி இருக்கிறார்கள் - தனித்தனி பக்கவாத்தியக் குழுவினருடன். இருவரும் சேர்ந்து இரண்டொரு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். ராகம் தானம் பல்லவியும், லைட்டான துக்கடா அயிட்டங்களும் உண்டு. வயலின், மிருதங்கம் எதுவும் இல்லாமல் வெறும் தம்புரா சுருதியுடன் மட்டும் இருவரும் சிறிது நேரம் பாடியிருக்கிறார்கள்.

''எந்த சபாவிலும் இந்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்காது. எங்க வீட்டு பூஜை அறைல தம்புராவுடன் நாங்க பாடுவது போன்ற உணர்வு படம் பார்க்கும்போது கிடைக்கும்'' என்று ஜெய

யும் கிருஷ்ணாவும் சேர்ந்திசைத்தார்கள்!

கடந்த செப்டம்பர் மாதம் 4, 5-ம் தேதிகளில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியின் வெங்கட சுப்பா ராவ் ஹாலில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ரெட் 4 கே டிஜிட்டல் சினிமா கேமராவில் ஒளிப்பதிவு: பி.சி.

ராம். ஒலிப்பதிவு: 4 முறை தேசிய விருது பெற்றிருக்கும் ஹெச்.

தர்.

பாடகர்கள் இருவருக்கும் காலர் மைக். வயலினுக்கு கான்டாக்ட் மைக். மிருதங்கத்துக்கு மட்டும் வழக்கமான ஸ்டாண்ட் மைக். அதுவும் படம் பார்க்கும்போது உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே தெரியுமாம்.

ஒவ்வொரு பாடலுக்கும் காஸ்ட்யூம் சேஞ்ச் கிடையாது. 'செட்டுக்கும் பாட்டுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்' என்று டைரக்டர் கருதிய நேரத்தில் மட்டும் பாடகர்கள் டிரெஸ் மாற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.

பாதிப் பாடலில் இருக்கும்போது, 'கட்' சொல்லிவிட்டு மறுபடியும் ரீ-டேக் எடுக்கும் வியாபாரமும் இல்லையாம். ஒரு கீர்த்தனையை ஆரம் பித்துவிட்டால், அது முடியும் வரை 7 கேமராக்களும் ஓடிக்கொண்டு இருந்தனவாம்!

''இந்த அனுபவமே எங்களுக்குப் புதியது. இரண்டு நாட்களும் கிட்டத்தட்ட விடிய விடிய ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தோம். படப்பிடிப்புக் குழுவினர் மொத்தம் 100 பேர் இருந்தும், நாங்கள் பாடும்போது 'பின் டிராப்' சைலன்ஸ்!'' என்று சிலிர்த்தார்கள் இருவரும்!

ஒரு கேள்வி:

மார்கழி ராகத்தில் ஹீரோ யார்?

1.ஜெயேந்திரா 2. பி.சி.

ராம் 3. பாம்பே ஜெய

-

டி.எம். கிருஷ்ணா 4.ஹெச்.

தர்.

பதில்: இவர்கள் யாருமே இல்லை. உண்மையான ஹீரோ, கர்னாடக இசை.

அட்றா சக்கை!

 
சரிகமபதநி டைரி
- டைரி புரளும்...
சரிகமபதநி டைரி